முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 14) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 14) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம் :

    இன்றைக்கு மனதில் நினைத்த பணிகளை செய்து முடிக்கும் திறன் உள்ளது. காதல் விஷயங்களில் சற்று நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகம் நிமித்தமான பணிகள் கைகூடும். உங்களின் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை மட்டும் பின்பற்றுங்கள். தேவையில்லாத சிந்தனைகளைத் தவிர்ப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். தொழில் அல்லது நிதிநிலையில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டும் மேற்கொள்ளவும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படுங்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரப்பெட்டி

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்ட எண் -11

    ரிஷபம் :

    இன்றைக்கு லாபம் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். நீங்கள் நிதி பாதுகாப்பு உணர்வையும், உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளுக்கான சாத்தியத்தையும் உணரலாம்.கௌரவ பொறுப்புகளின் மூலம் வெளியிடத்தில் உங்களின் மதிப்பு உயரக்கூடும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவுகள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் சூழல் உருவாகும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - மரம்

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்ட எண் -22

    மிதுனம்:

    தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இன்றைக்கு அமையும். சில வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகள் கைகூடும். ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். உங்களின் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதால் உங்களின் உடல் மற்றும் மன நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் உடலையும் ஆன்மாவையும் வளர்க்கும் செயல்களைத் தேடுங்கள். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பை

    அதிர்ஷ்ட நிறம் - வெள்ளி

    அதிர்ஷ்ட எண் – 42

    கடகம் :

    இன்றைக்கு கமிஷன் சார்ந்த பணிகளில இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். உங்களின் நகைச்சுவையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். நெருக்கம் மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பை வளர்த்துக்கொள்வதற்கு சில ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வாசிப்புப் பழக்கம் உங்களது வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும். நிதி பாதுகாப்பைப் பெறுவதற்கான பல சாத்தியக்கூறுகள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இழுபறி சூழல் அமையும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு பாத்திரம்

    அதிர்ஷ்ட நிறம் - நியான் கிரீன்

    அதிர்ஷ்ட எண் - 2

    சிம்மம்:

    வரவுகள் நிறைந்த நாளாக இன்றைக்கு அமையும். உங்கள் உறவுகளின் மீது நீங்கள் எந்தளவிற்கு ஆசைகள் மற்றும் பாசம் வைத்துள்ளீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களது வாழ்க்கையில் பெரிய அல்லது சிறிய நிதியை நீங்கள் பெறுவீர்கள்.ரிஸ்க் எடுப்பதன் மூலமோ அல்லது புதிதாக ஏதாவது முயற்சி செய்வதன் மூலமோ நீங்கள் பயனடையலாம். சாதுரியமான பேச்சுகளின மூலம் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். செய்கின்ற செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய பொருள்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குடுவை

    அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

    அதிர்ஷ்ட எண் – 1

    கன்னி:

    பல நாள்களாக உங்களது உடலை வருத்திய சில பிரச்சனைகள் இன்றைக்கு விலகும். அன்புக்குரியவர்களிடம் நேர்மையாகவும், பொறுமையாகவும் இருக்கவும். உங்களது தொழில் அல்லது நிதி நிலையில் நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தை அனுபவிக்கலாம். உங்களின் பரிவத்தனைகளின் போது நீங்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு துண்டு

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

    அதிர்ஷ்ட எண் - 18

    துலாம் :

    மனதில் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். சமூக பணிகளில் நிதானம் வேண்டும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியத்தை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான தெளிவு பிறக்கும். இசை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிர்வாக பணிகளில் மேன்மை உண்டாகும். மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய நுண்ணறிவைப் பெறுவது நல்லது. நேர்மறையான மாற்றங்களை செய்ய முயலவும். உங்களது அன்றாட வாழ்வில் புதிய அனுபவங்கள் கிடைக்க கூடும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சணல் கூடை

    அதிர்ஷ்ட நிறம் - ஊதா

    அதிர்ஷ்ட எண் – 77

    விருச்சிகம் :

    அன்புக்குரியவர்களுடன் வலுவான மற்றும் நிறைவான உறவுகளை உருவாக்க முடியும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக்கொள்ளவும். தற்போதைய வாழ்க்கைப் பாதையின் தடைகளிலிருந்து நீங்கள் விலகி புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். உங்கள் உள்ளத்துடன் இணைவதற்கும் தெளிவு பெறுவதற்கும் நீங்கள் தனியாக நேரத்தை செலவிட வேண்டியிருக்கலாம். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். இனம்புரியாத கனவுகள் அவ்வப்போது ஏற்படும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்ட எண் - 55

    தனுசு :

    இன்றைக்கு தன்னம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் உங்கள் உணர்ச்சி ரீதியான பிணைப்பை ஆழப்படுத்த நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளை நீங்கள் செய்வீர்கள். வெற்றிக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிய உங்களது யோசனையை மேம்படுத்த வேண்டும். புதிய அனுபவங்கள் மூலம் உற்சாகம் பெறும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற,இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும்.. வியாபார பணிகளில் புதிய நபர்களால் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அக்வாரியம்

    அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண் – 16

    மகரம் :

    உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சரியான நேரத்தில் சரியான நபரை நம்பி வேலையைச் செய்யுங்கள். இல்லையென்றால் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பல போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெறிப்படுத்துவீர்கள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உங்களுக்கு சவால்விடும் செயல்களை செய்வதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்கள், நாடகத்துறையில் இருப்பவர்களுக்கு முற்போக்கான நேரமாக அமையும். புதிய கலாச்சாரங்கள் மறறும் அனுபவங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளம்பர பலகை

    அதிர்ஷ்ட நிறம் - மெரூன்

    அதிர்ஷ்ட எண் - 6

    கும்பம்:

    உங்கள் உறவுகளில் நீங்கள் கருத்து வேறுபாடு அல்லது சமநிலையின்மையை அனுபவிக்க நேரிடும். அக்கம் -பக்கம் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும்.எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றியை அனுபவிப்பீர்கள். உடல் மற்றும் மன நலத்திற்கு முன்னுரிமை அளிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தினால், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - நவீன கலை

    அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

    அதிர்ஷ்ட எண் - 30

    மீனம் :

    கடந்த காலத்தில் நீங்கள் அடைந்த ஏமாற்றம் மற்றும் மனவேதனையை நீங்கள் சமாளிக்கும் திறன் உங்களுக்கு ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் செய்கின்ற செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகளைப் பற்றி புரிதல் மேம்படும். மன அல்லது உணர்ச்சிக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடக்கூடும். இன்றைக்கு நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தினால் மன அழுத்தம் குறையக்கூடும். நீங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக நன்கு யோசிக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.

    அதிர்ஷ்ட அடையாளம் - கைவினைப் பொருட்கள்

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

    அதிர்ஷ்ட எண் – 3

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News