முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 13) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 13) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    உங்கள் தொழிலில் இன்று உங்களுக்கு புதிய வாய்ப்பு அல்லது நிதி ஆதாயம் கிடைக்க கூடும். உங்கள் முன் இருக்கும் 2 விருப்பங்களுக்கு இடையில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்படலாம். இன்று உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றம் அல்லது எழுச்சியை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - புதிய மலர்கள்

    அதிர்ஷ்ட நிறம் - வயலட்

    அதிர்ஷ்ட எண் - 13

    ரிஷபம்:

    இன்று நீங்கள் உங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பதிலும், உங்கள் திறமைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள் நிதி சார்ந்த நன்மைகளை அனுபவிப்பீர்கள் மற்றும் பதவி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உங்களது அன்புக்குரியவர்களுடனான உணர்ச்சி ரீதியான பிணைப்புகள் இன்று மேலும் தீவிரமடைந்து பிணைப்பு அதிகரிக்க கூடும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கற்றாழை செடி

    அதிர்ஷ்ட நிறம் - மெஜந்தா

    அதிர்ஷ்ட எண் - 16

    மிதுனம்:

    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இன்று உங்களை உங்கள் இலக்கு நோக்கி இட்டு செல்லும். வேறு பாதையில் செல்லும் ஒருவர் உங்களால் ஈர்க்கப்படுவார். நீங்கள் இன்று சிறிய பயணத்தை திட்டமிட விரும்பலாம். இந்த பயணம் உங்களை புத்துணர்ச்சியாக்க உதவி கூடும். உங்களது பொருளாதார நிலை சீராக இருக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - தாமரை சின்னம்

    அதிர்ஷ்ட நிறம் - ஃபாரஸ்ட் கிரீன்

    அதிர்ஷ்ட எண் - 12

    கடகம்:

    காதல் மற்றும் உறவுகளில் இன்று நீங்கள் சில மனரீதியான சோதனையை எதிர்கொள்ள நேரிடலாம். உங்கள் நல்வாழ்வில் நிச்சயமற்ற தன்மை மற்றும் குழப்பத்தை சந்திப்பீர்கள். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு உங்கள் கனவுகளால் கவனம் செலுத்துவது சிறந்த பாதையை நோக்கி பயணிக்க உதவும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணம் தெளிவை பெற உதவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - அல்லி மலர்

    அதிர்ஷ்ட நிறம் - கருஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண் - 9

    சிம்மம்:

    இன்று நீங்கள் ஏற்கனவே இருக்கும் ரிலேஷன்ஷிப்பில் உறுதியாக இருக்க வேண்டிய நாளாக அமையும். வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் நீங்கள் திட்டமிடும் பயணங்கள் உங்களை புத்துணர்ச்சியக்க உதவும் நல்ல யோசனையாக இருக்கும். உங்களது செயல்பாடுகள் சிலருக்கு ஊக்கமளிக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மல்லிகைப் பூ

    அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

    அதிர்ஷ்ட எண் - 28

    கன்னி:

    உங்கள் தற்போதைய உறவில் நீங்கள் திருப்தியடையாமல் இருப்பதால் ஒரு புதிய ரொமேன்டிக் பார்ட்னர்ஷிப்பை கருத்தில் கொள்ள நினைக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் உங்கள் உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது சிக்கல்களை தவிர்க்க உதவும். தொழில் சிக்கல் அல்லது நிதி சிக்கல்களை தீர்க்க உங்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவி அல்லது ஆதரவு கிடைக்க கூடும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா

    அதிர்ஷ்ட நிறம் - எமரால்ட் கிரீன்

    அதிர்ஷ்ட எண் - 10

    துலாம்:

    இன்று நீங்கள் உங்கள் துணையிடம் ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். இதுநாள் வரை நீடித்த சிக்கல்கள் விலகி பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்வீர்கள். உங்கள் சுற்றத்தாரின் ஆதரவையும், வழிகாட்டுதலையும் இன்று நீங்கள் பெறலாம். நீங்கள் நம்பிக்கையுடன் முன்னேற இன்று சிறந்த நாள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - சாமந்தி பூ

    அதிர்ஷ்ட நிறம் - ஹேசல் பிரவுன்

    அதிர்ஷ்ட எண் - 21

    விருச்சிகம்:

    உங்கள் வாழ்க்கை பாதையில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தாய் எதிர்கொள்வீர்கள். இன்று நீங்கள் சில சவால்களை அல்லது நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டாலும், முன்பை விட வலுவாக மற்றும் வெற்றிகரமாக செயல்படுவீர்கள். உங்களது பயணம் தெளிவு மற்றும் அமைதியை நோக்கியதாக இருக்க வேண்டும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு துலிப் ஸ்டிக்

    அதிர்ஷ்ட நிறம் - ஆலிவ் கிரீன்

    அதிர்ஷ்ட எண் - 11

    தனுசு:

    இன்று உங்கள் தொழில் அல்லது நிதி நிலையில் பாசிட்டிவான மாற்றத்தை நீங்கள் சந்திக்கலாம். இந்த மாற்றம் உங்களுக்கு எதிர்பாராத பல நன்மைகளை கொண்டு வரக்கூடும். இன்று புதிய வாய்ப்புகள் கிடைக் கூடும். இன்று பொறுமை மற்றும் நிதானத்தை கடைப்பிடக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் இன்று சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு அக்வாரியம்

    அதிர்ஷ்ட நிறம் - பேபி பிங்க்

    அதிர்ஷ்ட எண் - 16

    மகரம்:

    இன்று பணியிடத்தில் நிதி ரீதியாக வெற்றி மற்றும் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்கள் வெற்றியை மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்படி பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் உள்ள சிலருக்கு வழிகாட்டும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். புதிய அனுபவங்களை மற்றும் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்த பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் துணி

    அதிர்ஷ்ட நிறம் - மெஜந்தா

    அதிர்ஷ்ட எண் - 99

    கும்பம்:

    கடந்த சில நாட்களாக மற்றவர்களுடன் உங்களுக்கு நீடித்து வந்த மோதல் போக்கு இனி இருக்காது. இந்த சிக்கலுக்கான உரிய தீர்வை இன்று பெறுவீர்கள். இன்று உங்களது சுயபாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்று நீங்கள் குழப்பம் அல்லது சமநிலையின்மையை எதிர் கொண்டாலும் அது தற்காலிகமானதே.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆலமரம்

    அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

    அதிர்ஷ்ட எண் - 44

    மீனம்:

    ஊழியர்கள் பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வை பெறலாம். இன்று நீங்கள் சில தனிப்பட்ட விஷயங்களால் உணர்ச்சிரீதியாக பாதிக்கப்படலாம். இதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை சமாளிக்க ஆரோக்கியமான வழிகளை கண்டறியவும். இன்று நீங்கள் திட்டமிடும் சிறிய பயணம் கூட உங்களுக்கு வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

    அதிர்ஷ்ட நிறம் - ரூபி

    அதிர்ஷ்ட எண் - 33

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News