முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 10) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 10) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  உங்களது வாழ்க்கையில் இன்றைக்கு புதிய விஷயங்களில் ஈர்ப்பு அதிகரிக்கக்கூடும். கடந்த கால நினைவுகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களது வாழ்க்கையில் புதிய உறவைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களது வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும். எந்த சிந்தனையும் இல்லாமல் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு சேமிப்பில் முக்கியத்துவம் கொடுக்கவும். வாழ்க்கையில் தினசரி நடைப்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது உங்களது வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு

  அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

  அதிர்ஷ்ட எண் – 17

  ரிஷபம் :

  உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் நன்றாக வெளிப்படுத்த உங்களுக்குத் தைரியம் தேவைப்படலாம். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி நேர்மையாக இருப்பது அதிக நெருக்கம் மற்றும் இணைப்புக்கு வழிவகுக்கும். உங்கள் வாழ்க்கையில் ஆச்சரியமான நேர்மறையான வாய்ப்புகள் உருவாகும் நாள் இன்று. கடந்த காலத்தில் நீங்கள் மேற்கொண்ட முதலீடுகள் நிகழ்காலத்தில் நல்ல பலனளிக்கும். தொழில் பார்ட்னருடான ஒத்துழைப்பு உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல பழக்கவழங்களைக் கடைப்பிடிக்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் படிகம்

  அதிர்ஷ்ட நிறம் - நீலம்

  அதிர்ஷ்ட எண் – 10

  மிதுனம்:

  உங்களின் கடந்த கால நினைவுகள் சில நேரங்களில் பிரச்சனையாக அமையக்கூடும். இந்நேரத்தில் நிதானத்துடன் யோசித்து சவால்களை சமாளிக்கவும். உங்களது குழப்பமும், தெளிவின்மையும் பணியிடத்தில் உங்களைப் பாதித்து இருக்கலாம். சரியான தேர்ந்தெடுத்தல் உங்களது நிதி எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட உதவியாக இருக்கும். சுப காரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். உங்களின் தோற்றப்பொலிவு மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதில் புதுவிதமான உற்சாகத்தை ஏற்படுத்தும். ஏரோபிக்ஸ் போன்ற செயல்பாடுகளை உங்களது வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வானவில் படிகம்

  அதிர்ஷ்ட நிறம் - நீலம்

  அதிர்ஷ்ட எண் – 8

  கடகம் :

  கடந்த கால காதல் வாழ்க்கை உங்களை சோகத்தில் ஆழ்த்தும். இதிலிருந்து மீள விரும்பினால் புதிய விஷயங்களைக் கவனம் செலுத்தவும். சவாலான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவும். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும் நாள் இன்று. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான சமநிலையை அடைய உங்கள் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் கவனம் செலுத்துங்கள். செய்கின்ற செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நிலவி வந்த நீண்ட நாள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நிலவுக்கல்

  அதிர்ஷ்ட நிறம் - பவள சிவப்பு

  அதிர்ஷ்ட எண் – 5

  சிம்மம் :

  குல தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடந்த கால பிரச்சனைகளுக்கு உணர்வு ரீதியான தீர்வு கிடைக்கும் நாள் இன்று. வாழ்க்கையில் நீங்கள் செய்யும் தவறுகளில் இருந்து நல்ல பாடம் கற்றுக்கொள்வீர்கள். நிதி விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். உங்களது எதிர்காலத்திற்குத் தேவையான முதலீடுகள் செய்யலும். உகந்த ஆரோக்கியத்திற்காக மன மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து முன்னேறத்தைக் காணவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நெல்லிக்காய்

  அதிர்ஷ்ட நிறம் - பச்சை

  அதிர்ஷ்ட எண் – 6

  கன்னி:

  உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை சிக்கல்கள் மற்றும் அடக்கப்பட்ட உணர்ச்சிகளை நீங்கள் கையாளலாம். உங்கள் கூட்டாளருடன் வெளிப்படையாகத் தொடர்புகொள்வதற்கும், உங்கள் உறவை வலுப்படுத்த புதிய தொடக்கத்தை உருவாக்குவதற்கும் இது ஒரு நல்ல நேரம் இன்று. குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நல்ல நிதி முதலீடு உங்களது வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தவிர்க்கும். வியாபார பணிகளில் வித்தியாசமான முயற்சிகளின் மூலம் முன்னேறத்தை ஏற்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள்.உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வது மற்றும் நீண்ட நடைப்பயிற்சி செய்வது முக்கியம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பணப்பெட்டி

  அதிர்ஷ்ட நிறம் - பச்சை

  அதிர்ஷ்ட எண் – 5

  துலாம்:

  அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பணியாட்களை மாற்றம் செய்வது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். மகிழ்ச்சியான உறவைப் பற்றிய உங்களது கனவுகள் நிறைவேறும். வாழ்க்கையில் பிரகாசமான சூழல் உருவாகும்.. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் உங்களின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, உங்கள் உணவில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி புரிந்துக் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பல நாள்களாக தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

  அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

  அதிர்ஷ்ட எண் – 19

  விருச்சிகம் :

  உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி அறிந்துக் கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான பொறுப்புகள் கிடைக்கும். உங்களது உறவில் நீங்கள் நிறைவாகவும், திருப்தியாகவும் உணரக்கூடிய நாள் இன்று. உங்கள் மூத்தவர்கள் அலுவலகத்தில் உங்களைப் பாதுகாப்பற்றவர்களாக உணரக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கவனச்சிதறல்களைத் தவிர்த்து, உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டை ஒரு நல்ல தேர்வாகக் கருதுங்கள். வாழ்க்கையில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்களை எடைபோட நேரம் ஒதுக்குங்கள். சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட காலமாகத் தள்ளிப் போடும் எந்தவொரு உடல்நலக் கவலைகளையும் புறக்கணிக்காமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை கொடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய பூங்கா

  அதிர்ஷ்ட நிறம் - லாவெண்டர்

  அதிர்ஷ்ட எண் – 12

  தனுசு :

  காதல் விஷயங்களில், நீங்கள் உல்லாசமாகவும் காதலாகவும் உணரலாம், ஆனால் பிரச்சனைகள் ஏற்படும். புதிய உறவுகளை ஆராயுங்கள் மற்றும் ஆபத்துக்களை எடுக்க பயப்பட வேண்டாம். உங்கள் அறிவைப் புதுப்பித்து, உங்கள் புத்திசாலித்தனமானத் திறன்களை மேம்படுத்துவதற்கான நேரம் இது. குறைந்த நேரத்தில் அதிகம் சாதிக்க நீங்கள் ஆர்வமாக இருக்கலாம், ஆனால் ரகசிய முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். சந்தேக உணர்வுகளால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

  அதிர்ஷ்ட நிறம் - நீலம்

  அதிர்ஷ்ட எண் – 31

  மகரம்:

  குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றிவைப்பீர்கள். நெருக்கமானவர்களின் வழியில் சில மன வருத்தம் தோன்றி மறையும். உலகியல் வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். வியாபாரா பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் ஒளி

  அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

  அதிர்ஷ்ட எண் - 19

  கும்பம்:

  நீங்கள் கடந்த காலத்தில் ஏமாற்றப்பட்டிருக்கலாம், இது நம்பிக்கை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மீண்டும் காதலில் குதிக்கும் முன்னதாக நிதானமாக இருக்கவும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். அக்கம் - பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கிடைக்கும். ஆன்மீக பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமிர்த்தமான மந்தத்தன்மை குறையும். சுய பாதுகாப்புக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். குடும்ப சுற்றுலா அல்லது ஸ்பாவில் ஒரு நாள் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க ஆரோக்கியமான தூக்க வழக்கத்தை நிறுவுவதில் கவனம் செலுத்துங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ரெட்ரோ இசை

  அதிர்ஷ்ட நிறம் - இண்டிகோ

  அதிர்ஷ்ட எண் – 22

  மீனம் :

  இன்றைக்கு உங்களின் மென்மையான இதயம் இருந்தாலும் காதல் உணர்வு ஈர்க்கப்படாததால் காதல் உங்கள் வாழ்க்கையில் சவாலானதாக அமையும். உங்களது தொழிலில் முன்னேற்றத்தை அடையும் நாள் இன்று. இருந்தப்போதும் உங்களது இலக்குகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். இதோடு எதிர்காலத்திட்டத்திற்கான லட்சிய திட்டங்களை கவனத்துடன் கையாள்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது உடல் நிலையில் அக்கறையும் இருக்கவும். இல்லையென்றால் மோசமான நிலையை அடைவீர்கள். வாழ்க்கையில் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்றால், அன்றாட வாழ்வில் சுவாச பயிற்சி மற்றும் யோகாசனத்தை மேற்கொள்ள வேண்டும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி கதவு

  அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

  top videos

   அதிர்ஷ்ட எண் – 1

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News