மேஷம்:
உங்களது திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. பழைய வாழ்க்கை முறையில் இருந்து மாறி புதிய வாழ்க்கை முறைக்கு தயாராவது நல்லது. உங்கள் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - இறகு
ரிஷபம்:
முன்னர் எப்போதும் இருந்ததை விட இப்போது மிக தெளிவாக செயல்களை செய்வீர்கள். நிகழ் காலத்தில் மனதை வைத்து செயல்படுவது நல்லது. தொழில் செய்பவராக இருந்தால் தொழிலை விரிவுபடுத்துவதற்கு மிகவும் ஏற்ற நேரம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பறவை
மிதுனம் :
புற உலக பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். முக்கியமான சில விஷயங்களை நினைத்து பதட்டப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களது ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது மிகவும் நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சிலந்தி
கடகம்:
இன்று முழு சுதந்திரத்துடன் செயல்பட விரும்புவீர்கள். புதிய செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்திலிருந்து நீங்கள் எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் உங்களை வந்து அடையும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - இரண்டு குருவிகள்
சிம்மம்:
வாழ்வில் தற்செயலானது என்பது எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது. உங்களுக்கான சில விஷயங்கள் இன்று உங்களை வந்தடையும். சில விஷயங்களில் ஆரம்பம் கடினமாக இருந்தாலும் முயற்சி செய்து நடத்தி முடிப்பது அவசியமானது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பீங்கான் குவளை
கன்னி:
வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் சில முக்கிய பிரச்சினைகளை சமாளிக்க எளிதாக இருக்கும். இந்த நாள் சற்று சவால்கள் நிறைந்து காணப்படும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - நீல மட்பாண்டங்கள்
துலாம்:
உங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டி வரலாம். குறுகிய பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கழுகு
விருச்சிகம்:
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்புகள் உண்டு. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செல்வது தவிர்ப்பது நல்லது. கேளிக்கை துறைகளில் இருப்பவர்கள் அதிக வெற்றிகளை ஈட்ட வாய்ப்புகள் உண்டு.
அணில்
தனுசு:
பொறுமையை கையாள்வது நல்லது. அப்போதுதான் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அதிகாரி ஒருவரிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களைப் பற்றி நல்ல விதமாக அனைவரும் பேசுவார்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - தோட்டம்
மகரம்:
முடிவுகளை எடுப்பதற்கு முன்பு கவனமுடன் யோசித்து செயல்படுவது நல்லது. சில சமயங்களில் சூழ்நிலை நீங்கள் எதிர்பார்த்தது போல் அமையாமல் இருக்கலாம். உங்களுக்கு சேர வேண்டிய புகழை புதிய மனிதரோ அல்லது உடன் வேலை பார்க்கும் ஒருவரோ எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - கிளி
கும்பம்:
அமைதியை கைவிட்டு செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் வந்து சேரும். உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றியை பெறுவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - பறவை கூடு
மீனம்:
குறுகிய கால வெற்றிகளை எதிர்பார்த்து செயல்படுவதன் மூலம் ஏமாற்றமே மிஞ்சும். பொறுமையுடன் செயல்படுவது வெற்றியை தேடி தரும். உங்கள் வாழ்க்கை துணை உங்களின் வரவை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஆமை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News