முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 07) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 07) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம் :

  மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் மற்றவர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் போது நீங்கள் அணுக முடியாமல் இருந்திருக்கலாம். இதனால் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். பெற்றோரைப் பற்றி உங்களுக்குத் தொந்தரவாக இருந்த விஷயங்கள் விரைவில் தீர்க்கப்படுவதைப் போல் தெரிகிறது. நீங்கள் நிம்மதியான உணர்வை அனுபவிக்கும் சூழல் உள்ளது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பாரம்பரியமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு

  ரிஷபம் :

  இன்றைக்கு நன்மைகள் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும்.. வாழ்க்கையில் எதிர்பார்த்த சில உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களது விருப்பத்திற்கு மாறாக எதையும் நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் ஏதேனும் வியாபாரத்தில் இருந்தால், உங்கள் காலக்கெடு கோரிக்கைகளை இரட்டிப்பாக்க வேண்டியிருக்கும். மறைமுகமாக இருந்த சில தடைகளில் வெற்றி காண்பீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முனிவர்

  மிதுனம்:

  இன்றைக்கு ஊக்கம் நிறைந்த நாள் இன்று. பணிபுரியும் இடத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். நீங்கள் புதிய வணிக மேம்பாட்டுத்துறையில் இருந்தால், உங்களது பணிகளில் தொடர் வெற்றியைக் காண்பீர்கள். இந்த சூழலில் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றி புரிந்துக்கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மின்னும் துணி

  கடகம் :

  நீண்ட காலமாக நீங்கள் போற்றும் ஒரு செல்வாக்கு மிக்க நபர் அல்லது பிரபலத்தை சந்திக்க நேரிடும். இதனால் வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடனடியாக சிறிய பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். ஒரு சிறிய வாதம் ஒரு பெரிய தொந்தரவாக வடிவத்தை எடுக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் கையாண்டீர்கள் என்றால் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய கடை

  சிம்மம் :

  உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீங்கள் தேர்வு அல்லது நுழைவுத்தேர்வை சந்திக்க தயாராகிக்கொண்டிருந்தால், உங்கள் உள்ளுணர்வு சரியாக இருக்கும். வாழ்வில் அதிர்ஷ்டம் உங்களது கதவைத் தட்டும். இருந்தப்போதும் அன்றாட பிரச்சனைகளின் காரணமாக சில மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் நிதானத்துடன் இருக்கவும். தியானம் அல்லது தினசரி ஆன்மீக பழக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மரம்

  கன்னி:

  உங்களது சிறந்த மனப்பான்மையே வெற்றிக்கு வழிவகுக்கும். உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது உங்களது எதிர்பார்ப்புகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் முற்றிலும் உங்கள் அர்ப்பணிப்பு தேவை. பொது இடங்களில் எந்த ஒரு காட்சியையும் உருவாக்குவதை தவிர்க்கவும். புதியதாக அறிமுகமானவர்களுடன் பழகும்போது, உங்களது நல்ல குணங்களை வெளிப்படுத்துங்கள். உங்களையும் மற்றவர்களையும் மகிழ்விக்க இது ஒரு நல்ல நேரமாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய போஸ்டர்

  துலாம் :

  வாழ்க்கையில் சில திட்டங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். சில எதிர்மறை நபர்கள் உங்களது முன்னேற்றத்தில் குறுக்கீடு செய்வார்கள். அக்கம் பக்கத்தினரால் பிரச்சனை ஏற்படும் என்பதால் நிதானத்துடன் செயல்படவும். தேவையில்லாத பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்களைப் பற்றிய விஷயங்களைத் தேவையில்லாமல் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரம்

  விருச்சிகம் :

  உங்களின் கவனமும் உறுதியும் உங்களுக்கு வெளியே ஏதாவது சம்பாதிக்க உதவும். பணியிடத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களது பணிக்கு ஏற்ப விஷயங்களைச் செய்ய சரியான நேரத்தை ஒதுக்குங்கள். புதிய மற்றும் நீண்ட கால ஆதாயம் உங்களுக்கு வெற்றியைத் தரும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பவளம்

  தனுசு:

  உங்களின் சொந்த அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கலாம், ஆனால் அவை யாருடைய தனிப்பட்ட இடத்திலும் ஊடுருவினால் அது பாராட்டப்படாது. இந்த நேரத்தில் ஏதாவது ஒரு விஷயத்திற்காக உண்மையில் கவலைப்பட்டாலும், பின்னோக்கி செல்லும் சூழல் ஏற்படும். கல்வித்துறையில் இருந்தால் உங்களது வேலையை விரைவுபடுத்துவதற்கு நிலுவையில் உள்ள சில ஒப்புதல்களுக்காக காத்திருக்க வேண்டும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஷாப்பிங் பை

  மகரம்:

  வேறொருவரின் தவறுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவது நிறுத்தப்படலாம். நீங்கள் ஏதேனும் கடன் வாங்க விண்ணப்பித்திருந்தால், தேவையான ஒப்புதலுக்காக இன்னமும் காத்திருக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் உடனடி பார்வை அல்லது மதிய உணவுக்கான திட்டம் உங்களிடம் இருக்கலாம். புறக்கணிக்கப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு இந்த நாள் உங்களுக்கு சிறப்பானதாகவே அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய பெயிண்ட்

  கும்பம்:

  வாழ்க்கையில் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஏதாவதொன்றினால் மனதளவில் பாதிப்பை சந்திப்பீர்கள். அமைதியாக உட்கார்ந்து வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பதை யோசித்து செயல்படுவது நல்லது. வாழ்க்கையில் உங்களது கவலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், சிறிது தியானம் தேவை. நேர்மறையான விஷயங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றியைக் கொடுக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நீல நிற ஸ்படிகம்

  மீனம்:

  ஒரு விஷயத்தை அதிக நேரம் நீட்டிக்காமல் இருப்பது நல்லது. ஒரு காதல் உறவில் இருந்தால், சிக்கல்கள் எதுவாக இருந்தாலும், சமாளிக்கும் மனப்பக்குவம் வேண்டும். நீங்கள் இருவரும், உங்கள் இதயத்தில் சிறிய சிறிய விஷயங்களை வைத்திருப்பதன் மூலம் இடைவெளியை அதிகரிக்கும். ஒரு சரியான நேரத்தில் ஆலோசனை உங்கள் வழியில் வரக்கூடும். நீங்கள் ஒரு கூட்டத்திலோ அல்லது விருந்திலோ கலந்து கொள்ளலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புள்ளி

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News