மேஷம்:
கடந்த காலத்தில் நீங்கள் எதிர்கொண்ட நிகழ்வுகளின் காரணமாக ஏற்பட்ட அனைத்து அச்ச உணர்வுகளில் இருந்து விடுபட இன்று சிறந்த நாள். கடந்த கால விஷயங்கள் இனி உங்கள் வாழ்வின் குறுக்கே வராமல் இருக்கும். பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குருவி
ரிஷபம்:
நீங்கள் போட்டி தேர்வு அல்லது விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகி இருந்தால், முடிவுகள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் இதுநாள் வரை கஷ்டப்பட்டு செய்த பயிற்சியின் பலனை இன்று நீங்கள் அறுவடை செய்வீர்கள். ஃபேஷன் அல்லது டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு இன்று லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஷ்ரூம்
மிதுனம்:
நீங்கள் விரும்பும் ஒருவருடன் மோதல் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்க உங்கள் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் ஈகோவையும் நீங்கள் இன்று கைவிட வேண்டியிருக்கும். நீண்ட கால ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் தங்கள் உறவில் இன்று சில கவனச்சிதறல்கள் ஏற்படுவதை போல உணரலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில்
கடகம்:
இன்று நீங்கள் உணர்ச்சி கொந்தளிப்பை எதிர்கொள்ள நேரிடலாம், இது சில அவசர முடிவுகளை எடுக்க உங்களை தூண்டும்.எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வணிகம் தொடர்பாக உங்கள் வழியில் வரும் ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்த பின் செயல்படுத்துங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரஃபிள்
சிம்மம்:
இன்று உங்கள் கோபம் காரணமாக நாள் முழுவதும் கடுப்பாக இருப்பதை போல உணரலாம். இதிலிருந்து நீங்கள் தப்பிக்க உங்களை அமைதியாக வைத்து கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் வெளியே செல்வது, பிடித்த உணவை ருசிப்பது உங்கள் மனதை ரிலாக்ஸாக வைக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஸரி
கன்னி:
நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த விஷயங்கள் மற்றும் கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்ட பணம் உள்ளிட்டவற்றில் சாதகமான முடிவுகளை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் யாரிடமாவது வெளிப்படையாக எதையாவது தெரிவிக்க விரும்பினால் தயங்காமல் மனதில் பட்டதை பேசி விடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படகு
துலாம்:
கடந்த சில நாட்களாக நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்றைய தினம் உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். சூழலும் இதற்கேற்ப சாதகமாக இருக்கும். வானிலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட கூடும் எனவே கவனம் தேவை. உங்கள் வழியில் சில இடையூறுகள் இருக்கலாம். பெற்றோருடன் மனம் விட்டு பேசுவது அவசியம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெட்டாலிக் ஸ்ட்ரக்ச்சர்
விருச்சிகம்:
இன்று நீங்கள் சோம்பேறித்தனமாக உணர வாய்ப்புள்ளது. இன்று முடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த வேலைகளை இதனால் நீங்கள் தள்ளிப்போட கூடும். எனினும் வரவிருக்கும் நாட்கள் பணிச்சுமையுடன் சவாலாக இருக்கும் என்பதால் அதற்கேற்ப இன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிம்னி
தனுசு:
உங்களை பற்றி பிறர் பேசும் அல்லது விவாதிக்கும் அனைத்தையும் நீங்கள் மனதில் ஏற்றி கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இன்று எமோஷன் ஆகலாம், ஆனால் அதை தவிர்த்து நடைமுறையை புரிந்து கொண்டு இன்றைய நாளை நகர்த்துங்கள். சிக்கலான நேரத்தில் உங்கள் தந்தையின் ஆலோசனை அல்லது பரிந்துரை உதவலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - அல்லி மலர்கள்
மகரம்:
கடந்த காலத்தில் நீங்கள் யாரிடமாவது போட்டி போட்டிருந்தீர்கள் என்றால் அதே போன்றதொரு சூழல் இன்றும் ஏற்படலாம். நீங்கள் இன்று திடீரென ஒரு குறுகிய பயணத்தை திட்டமிடக்கூடிய சூழல் ஏற்படலாம். பல நாட்கள் நிலுவையில் இருக்கும் நிலம் அல்லது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல முக்கிய சிக்கல்களில் இன்று சாதகமான பலன் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லேம்ப்ஷேட்
கும்பம்:
ஒப்பீட்டளவில் இன்று உங்களுக்கு எளிதான நாளாக அமையும். இன்று உங்களுக்கு கொடுக்கப்படும் அனைத்து பணிகளையும் தடையின்றி செய்து முடிப்பதோடு, மாலை பொழுதையும் பொழுதுபோக்கு விஷயங்களுக்காக செலவிடுவீர்கள். இன்று உங்களது சில முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தராமல் போகலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - மியூசிக்கல் நோட்
மீனம்:
இன்று நீங்கள் சில விஷயங்களில் வெற்றி காண்பீர்கள், சிலவற்றில் இழப்பை சந்திப்பீர்கள். இந்த நினைப்பிலேயே நீங்கள் இன்று எந்தவொரு செயலிலும் தீவிரமாக ஈடுபடுங்கள். நெருங்கிய உறவினர்கள் யாராவது உங்களிடம் ஆலோசனை கேட்டால் கூடுமானவரை நீங்கள் அவர்களின் சூழலை முழுமையாக புரிந்து கொண்டு அதன் பின் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News