முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 05) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 05) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம் :

    பணம் தொடர்பான விஷயங்கள் இன்று முக்கிய பங்கு வகிக்கக் கூடும். அது போல, பழைய கொடுக்கல் வாங்கல்கள் உங்களின் நேரத்தில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளக் கூடும். ஏதேனும் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க, முன்பே முன்பதிவு செய்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு இறகு.

    ரிஷபம் :

    இது உங்களுக்கு ஒரு இனிமையான அதாவது மனதிற்கு இதமான நாளாக அமையும். நீங்கள் செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டுள்ள விஷயங்களில் பெரும்பாலனவற்றை நீங்கள் முடித்து விடுவீர்கள். வேலை சற்று சிரமமாக இருப்பதால், நீங்கள் காலில் சர்க்கரம் கட்டிக் கொண்டு இருப்பதால், வேகமாக சுழன்றுக் கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமாக உள்ள ஒரு நண்பர் பற்றிய நேர்மறையான தகவல் உங்கள் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு ஒளிர் விடும் தகவல் பலகை (நியான் சைன்).

    மிதுனம் :

    உங்கள் வேலை தொடர்பான சுமைகளை எல்லாம் நீங்கள் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கும். நீங்கள் தற்போது தங்கி இருக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், அது தொடர்பாக உள்ள ஆப்ஷன்களை தேடி ஆராய்வதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். ரியல் எஸ்டேட் பிசினஸில் நீங்கள் ஈடுபட்டு இருந்தால், தற்போது உங்களால் நிலையான வளர்ச்சியை அனுபவிக்க இயலும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு சுவரொட்டி (வால் போஸ்டர்).

    கடகம் :

    உங்கள் பொழுதுபோக்கை காட்சிப் படுத்தும் வாய்ப்பு உங்களைத் தேடி வரலாம். உங்களின் விடா நம்பிக்கையானது மற்றவர்களை உங்கள் மீது பொறாமைப் பட வைக்கலாம். உங்களைச் சுற்றி உள்ள ஒரு சிலர் எந்த ஒரு காரணமும் இல்லாமல் உங்களை விட்டு தள்ளி இருக்கலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு மியூசிக் பிளேலிஸ்ட்.

    சிம்மம் :

    உங்கள் நாளைத் தொடங்கும் போது, பதட்டம் இருப்பதற்கான ஒரு சில அறிகுறிகள் தென்படும். ஆனால், அதனை எல்லாம் விரிவில் சரி செய்வதில் வெற்றி காண்பீர்கள். முன்னர் எப்பபோழுதோ நடந்த ஒரு திருட்டு அல்லது ஏமாற்று வேலை இப்போது உங்கள் மண்டையைப் போட்டு குடையலாம். எந்த வித அறிவிப்பும் இல்லாமல் உங்கள் பழைய நண்பர் ஒருவர் உங்களைக் காண வரக் கூடும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு மாலை நேர (டிரைவ்) பயணம்.

    கன்னி :

    உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீங்கள் சற்று இளைப்பாறும் வகையில் எங்காவது போனால், இழந்த உங்கள் தெம்பை மீட்டெடுக்க உதவும். இவ்வாறு நீங்கள் இடைவெளி எடுக்கவில்லை என்றால், இது உங்கள் நாளை மோசமாக்கி விடலாம். கடந்த காலத்தில் உங்களுக்கு தெரிந்த யாரேனும் ஒருவர் உங்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: குழந்தைப் பருவத்தில் பிடித்தமான ஒரு பொருள்.

    துலாம் :

    நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கும் ஒரு வேலை குறித்து உங்களுக்கு முன்னேற்றத்திற்கான எந்த வித அறிகுறியும் தென்படாமல் இருப்பது தொடர்பாக நீங்கள் சற்று ஏமாற்றம் அடைவதற்கு வழிவகுக்கலாம். நண்பகலில் ரேண்டம் ஆக ஷாப்பிங் செல்ல திட்டமிட்டு செல்வது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கலாம். யாரேனும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு பதில் அளிக்க நீங்கள் நினைவூட்டல்களை (ரிமைண்டர்களை) வைத்துக் கொள்வது நல்லது.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு நீல நிறக் கல்.

    விருச்சிகம் :

    நீங்கள் பாதுகாப்பாக வைத்து இருந்த ரகசியத்தால் இப்போது உங்களுக்கு ஆபத்து வரலாம். உங்களுக்கு ஒரு சில பூர்த்தி ஆகாத கடமைகள் இருக்கலாம். அதனை நீங்கள் உடனடியாக கவனிப்பது நல்லது. நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொண்டால், அது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு நட்சத்திரம்.

    தனுசு :

    முன் எப்பொழுதும் இல்லாதது போல நீங்கள் இன்று சோர்வாக உணரலாம். இது பேட்டர்ன் போன்று ஒரு சில நாட்களாகவே உங்களுக்கு தோன்றலாம். வேலையில் புதிய கடமைகள் உங்கள் மீது சுமத்தப்படலாம். அதனால் நீங்கள் கூடுதல் முயற்சி அல்லது சிந்தனை செய்ய வேண்டி இருக்கலாம். உங்களுக்கு கீழ் வேலைப் பார்ப்பவர் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையை உருவாக்கலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: வீட்டில் இருந்த படியே விளையாடக் கூடிய ஒரு விளையாட்டு.

    மகரம் :

    உங்களை சுற்றி இருக்கும் பைத்தியக்கார விஷயங்களில் இருந்து விடு பட சாலை மீதான ஒரு சிறு பயணம் உங்களுக்கு நிவாரணம் அளிக்கலாம். நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் நண்பர் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் செய்யக் கூடும். வெளிநாட்டில் தங்கி இருக்கும் உங்கள் உறவினர் உங்களின் உதவியை நாடலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு விளக்கு.

    கும்பம் :

    உங்கள் பெற்றோர் உடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடுவது நல்லது. சிறு சிறு சந்தோஷங்கள் உங்கள் இன்றைய நாளுக்கு போதுமானதாக இல்லாதது போல் உணர்வீர்கள். இன்றும் நீங்கள் சற்று எரிச்சலாக உணரக் கூடும். உங்கள் ஆற்றல் மதி நேரத்தில் அதிகமாக இருக்கலாம். உங்கள் எரிச்சல் அல்லது கோபத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.

    உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு வளையம் (லூப்).

    மீனம் :

    நீங்கள் தற்போது பெரும்பாலான பணிகளைச் செய்ய நிலையானதாகவும் திறமையாகவும் இருப்பதாக உணரலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைக்கு முன் எப்போதும் போல் அல்லாமல், கூடுதல் கவனம் தேவைப்படலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தற்செயலாக எழலாம். இது நீங்கள் திட்டமிட வேண்டிய நாள் ஆகும்.

    top videos

      உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: தங்க முலாம் பூசப்பட்ட ஏதேனும் ஒரு பொருள்.

      First published:

      Tags: Oracle Speaks, Tamil News