முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 04) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 04) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    உங்களை கவனித்துக் கொள்ள முடியாமல் நாட்களை தள்ளி போட்டு கொண்டே வந்த உங்களுக்கு, இன்று அதற்கான நேரம் கிடைக்கும். பிறர் உங்களை தவறாக தீர்மானித்து வந்தால் அதை கண்டு கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பும் நபர்களை கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் அலுவலக பணிகளில் எந்த ஒரு வேலையையும் நிலுவையில் வைக்க வேண்டாம். ஏனெனில் மேலிடத்தில் இருந்து அவற்றை சரி பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செலனைட்

    ரிஷபம்:

    நீங்கள் பல நாட்களாக தீட்டி வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ள நபர்களுடன் சந்தோஷமாக நாளை செலவழியுங்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தடைபட்ட பண வரவுகள் கைக்கு வந்து சேரும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டர்மலின்

    மிதுனம்:

    இன்று முழு புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள் என்பதால் உங்கள் வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் மேல் அதிகாரி உங்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கலாம். உங்களுக்கு மிக நெருங்கிய ஒருவர் உங்களுக்கு மாலை நேரத்தில் ட்ரீட் தருவதற்கான வாய்ப்பு உள்ளது.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு மணற்கல்

    கடகம்:

    ஷாப்பிங் செய்வதற்காக நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், இன்று அதற்கான நேரத்தை ஒதுக்குவீர்கள். டெட்லைன்களுடன் கூடிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கலாம். வீட்டு வேலைக்காக நீங்கள் அமர்த்திய ஒரு நபரால் உங்களது அன்றாட வேலைகளில் தடைகள் உண்டாகலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்துயிர் பெற்ற ஒரு மரம்

    சிம்மம்:

    குழுவாக சேர்ந்து பிறருடன் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகும். அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு வந்தால், நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டு செய்யுங்கள். வீட்டில் தேவையற்ற வாக்குவாதங்கள் நடைபெறலாம். அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது உங்களை வீண் பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு ஸ்டீல் பெட்டி

    கன்னி:

    உங்கள் வேலையில் தடை ஏற்பட்டு அதற்காக பிறர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஈகோவை தூக்கி எறிந்து விட்டு உடனடியாக அவர்களின் உதவியை நாடுங்கள். எதிர்காலம் சார்ந்த திட்டங்கள் தீட்டுவது உங்களுக்கு பலன் அளிக்கும். இன்று உங்கள் வீட்டுக்கு விருந்தினர்கள் வர வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் தயார் நிலையில் வைப்பது கடைசி நேர பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மாணிக்க கல்

    துலாம்:

    உங்களுடன் பிறந்தவர்களுடன் வீட்டிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நேரத்தை செலவழிப்பதற்கான சிறந்த நாள் இது. நீங்கள் செய்த வேலை சரிதானா என்பதை சரிபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். தேவையில்லாத மன அழுத்தம் உங்களை எரிச்சல் அடைய செய்யலாம். விழிப்புடன் இருங்கள்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு நீலமணி

    விருச்சிகம்:

    சிறு வயதிலிருந்து உங்களுக்கு பேஷனாக இருந்து வரும் ஒரு விஷயத்தை கைவிடமாட்டேன் என்று உங்களுக்கு நீங்களே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மீண்டும் செய்யத் துவங்குவதற்கான சரியான நேரம் இது. புத்துணர்ச்சி மேல்நோக்கி இருப்பதால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் நிற கண்ணாடி

    தனுசு:

    உங்களை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் ஒரு நபர் அல்லது வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபரிடம் இருந்து பெறும் போன் கால் உங்களது நாளை சிறப்பாக மாற்றும். இன்று நீங்கள் ஸ்பெஷலாக உணர்வீர்கள். சிறிய திட்டங்கள் தீட்டி அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். உங்களது தற்போதைய உறவுகளுக்கு உடனடி பதில் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். போட்டி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு சிவப்பு நிற பவளம்

    மகரம்:

    புதிய வேலைகளை துவங்குவதற்கான சரியான நாள் இது. நீங்கள் படித்த ஒரு புத்தகம் அல்லது பதிவு உங்களுக்கு உத்வேகத்தை தூண்டும் விதமாக அமையலாம். தொலைந்து விட்டது என்று நீங்கள் நினைத்த ஒரு பொருள் இன்று உங்கள் கைக்கு வரலாம். உங்கள் தேவைகளின் முக்கியத்துவம் அறிந்து அதனை வரிசைப்படுத்தி அதற்கு ஏற்றார் போல அவற்றை பூர்த்தி செய்யுங்கள்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில பறவைகள்

    கும்பம்:

    தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் முன்னேற்றத்திற்கான சிறிய அறிகுறி தென்படும். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள். எதிர்மறையான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் அவற்றை தள்ளி வையுங்கள். இன்றைய நாளில் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டும் கலந்தே உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும், நாளின் இறுதியில் இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலையைப் பெறுவீர்கள்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – செவ்வந்திக்கல்

    மீனம்:

    ஒருவரிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் சிறந்த பரிந்துரை உங்களின் பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தி கொடுக்கலாம். நீண்ட காலமாக எடுக்காமல் இருந்த ஒரு முடிவை தன்னம்பிக்கை பெற்று அதனை செய்து முடிப்பேன் என்ற தீர்மானத்திற்கு வருவீர்கள். குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பிறர் உங்களை அனுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது உங்களுக்கு நல்ல விதமாக அமையும்.

    top videos

      உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கோமேதகம்

      First published:

      Tags: Oracle Speaks, Tamil News