முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 03) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (மே 03) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    உங்களுக்கு வெகுவிரைவில் சிறிய அளவிலான பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், மாபெரும் வாய்ப்புகளை அது கொடுக்கும். சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மன அழுத்தம் உங்களுக்கு பதற்றத்தை கொடுக்கும். வெகுவிரைவில் பணவரவை எதிர்பார்க்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - திரைத்துணி

    ரிஷபம்:

    கொள்கை ரீதியாக நீங்கள் ஒப்புக்கொள்ளாத விஷயங்களை முயற்சிக்க வேண்டாம். திட்டமிட்ட பொறுப்புகளை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலமாக இலக்கை அடையலாம். பணி சார்ந்து வெகு விரைவில் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அதிர்ஷ்ட செடி

    மிதுனம்:

    உங்கள் ஆர்வத்தை தூண்டக்கூடிய சிலரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. முன்னெப்போதையும் விட எச்சரிக்கையாக இருப்பீர்கள். நீங்கள் கவனமாக இல்லையென்றால் மதிப்புமிக்க பொருளை இழக்க வாய்ப்பு உண்டு.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரும்பு கோபுரம்

    கடகம்:

    சர்வதேச வாய்ப்பு தேடி வரும் அல்லது வாடிக்கையாளர் மூலமாக நற்செய்தி வந்து சேரும். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பொறுப்புகளுக்கு ஒப்புதல் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் குறித்த சிக்கல்களுக்கு நீங்கள் தீர்வு காண வேண்டியிருக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோஃபா

    சிம்மம்:

    உங்கள் திட்டமிடும் விஷயங்களை முன்கூட்டியே செய்து முடிக்கவும். முக்கியமான விவகாரங்களில் உங்கள் கவனம் மற்றும் தலையீடு தேவைப்படுகிறது. நெருங்கிய நண்பரிடம் இருந்து நற்செய்தி தேடி வரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிக்கட்டு

    கன்னி:

    அதிகப்படியான தடைகளால் உங்கள் பணிகள் பாதிக்கப்படலாம். வழக்கத்தை விட கூடுதலான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிலுவையில் உள்ள பணவரவு வந்து சேரும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காஃபி

    துலாம்:

    புதிய விவகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புவதாக அமையும். ஆனால், அது தற்காலிகமானது தான். ஆன்லைன் கல்வி அல்லது டுடோரியல் கல்வியில் இணைந்து படிக்கலாம். உங்களுக்கு ஊக்கம் தரும் நம்பிக்கையை பெறுவீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முயல்

    விருச்சிகம்:

    முதலீட்டு விவகாரங்கள் கவலைக்குரியதாக மாறும். பணியிடத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மிகுதியாக செயல்படுவீர்கள். வீட்டில் யாரேனும் உங்களுடைய ஆலோசனையை கேட்டால் அவர்களுக்கு தீர்வளிக்க முயற்சிக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கால்பந்து போட்டி

    தனுசு:

    பணி வாய்ப்புகள் காரணமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். வீட்டில் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கலாம். வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலமாக உங்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோலார் தகடு

    மகரம்:

    உங்கள் ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை. இதனால், கொஞ்சம் கலக்கம் அடைவீர்கள். உங்கள் சக்தி மிகுந்த விஷயங்களை நீங்கள் டார்கெட் செய்வீர்கள். தொழில்துறையில் மூத்தவர்கள் வழங்கும் ஆலோசனை பயனுள்ளதாக அமையும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மலர் கூடை

    கும்பம்:

    தொந்தரவு தரும் நபர்களிடம் இருந்து விலகியிருக்க விரும்பினால் உடனடியாக அதைச் செய்யவும். சிலர் செய்யும் துரோகம் மன வேதனையை தரும். உங்கள் ஆழ்மனம் சொல்வதை கேட்டு நடக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தேன்கூடு

    மீனம்:

    உங்களை யாரோ ஒருவர் காதல் நோக்கத்தில் பார்த்து வருகின்றனர். உங்கள் பணிகளை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிறருடன் கைகோர்த்து செயல்படும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமணிக்கல்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News