மேஷம்:
உங்களுக்கு யாரேனும் மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தினாலோ அல்லது மன அழுத்தத்தையோ கொடுத்து வந்தாலோ, அவரை சமாளிப்பதற்கான போதுமான முயற்சிகளை நீங்கள் எடுப்பீர்கள். இதனால் அதிலிருந்து எளிது மீண்டு வந்து விடுவீர்கள். இன்று நீங்கள் பொறுமையாக அடியெடுத்து வைக்கும் ஒரு விஷயம், எதிர்காலத்தில் சிறப்பாக அமைவதற்கான வாய்ப்பு உண்டு.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இலவங்கப்பட்டை குச்சி
ரிஷபம்:
தற்காலிக உறவுகளிடம் இருந்து விலகி இருப்பதே உங்களுக்கு நல்லது. அவர்களை விட்டு விலக வேண்டிய நேரம் வந்தாயிற்று. மனக்கசப்பு ஏற்படுத்தக்கூடிய பழைய விஷயங்கள் அனைத்தையும் அவர்களுடன் விட்டு விட்டு, புதிய எதிர்காலம் நோக்கிய உங்கள் பயணத்தை மேற் கொள்ளுங்கள். வெளியூர் பயணம் செல்வதற்ககான வாய்ப்புகள் வரலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கூடாரம்
மிதுனம்:
பணியிடத்தில் மேல் அதிகாரிக்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் உங்களுக்கு சிக்கலாக அமையலாம். ஆகவே வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் முடிந்த அளவு தவிர்க்கவும். உங்கள் அலுவலக வேலையை பாதிக்கக்கூடிய ஒரு சில உண்மைத் தகவல்களை நீங்கள் அறிந்து வைத்திருக்காமல் போகலாம். சோம்பேறித்தனம் காரணமாக உங்கள் வேலை தடைபடலாம். ஆகவே, சோம்பலை விட்டுவிட்டு சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வானவில்
கடகம்:
சவாலான நேரங்களில் மன தைரியத்துடன் இருப்பது உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை மனதில் கொள்ளவும். நீங்கள் எதிர்பார்க்காதபடி உங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக உங்களுக்கு லவ் ப்ரபோஸல்கள் வரலாம். எதிர்காலம் சம்பந்தமாக எந்த ஒரு முடிவுகளை எடுத்தாலும் அதில் அதிக கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு நல்லது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு ஏரி
சிம்மம்:
நீங்கள் போட்டித் தேர்வுகள் அல்லது நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிற்கு முயற்சி செய்து கொண்டிருந்தால், அதற்கான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆகையால், நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளை ஒரு போதும் கைவிட வேண்டாம். இதுவரை உங்களுக்கு இருந்த வந்த பதட்ட உணர்வு உங்களை விட்டு நீங்கிசென்று நிம்மதியாக உணர்வீர்கள். ஹோட்டல்களில் இருந்து வெளி உணவுகள் வாங்கி உண்ணும் பழக்கத்தை முடிந்தவரை தவிர்க்கவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படகு
கன்னி:
வரப்போகும் வாரத்திற்காக சிறந்த திட்டங்களை அமைத்து அதன்படி செய்லபடுவீர்கள். ஒரு பெரிய நிகழ்வுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் அமையலாம். உங்களுக்கு நன்கு நிபுணத்துவம் உள்ள துறையில் இருந்து வாய்ப்புகள் வந்து சேரும். அவ்வாறு உங்களைத தேடி வரும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தலைப்பாகை
துலாம்:
ஒரு சில நேரங்களில் மனிதர்கள் தாங்கள் கொடுக்கும் வாக்குகளை பின்பற்றாமல் முடியாமல் போகலாம். இது மனித இயல்பு தான். அதற்காக அந்த நபரை முழுவதுமாக தவறானவர் என்று நாம் சொல்லிவிட முடியாது. நீங்கள் நினைக்கும் படி விஷயங்கள் நடக்காமல் போகும் பொழுது, நீங்கள் வழக்கமாக பின்பற்றும் முறையை விட ஏதேனும் வித்தியாசமான முறைகளை முயற்சி செய்து பார்ப்பது உங்களுக்கு உதவகூடும். இன்று பணவரவு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- நீல நிற டூர்மலைன்
விருச்சிகம்:
நீங்கள் ஏதேனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள் என்றாலோ அல்லது அதில் பணிபுரிந்து வருகிறீர்கள் என்றாலோ, அதில் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதை காண்பீர்கள். சர்வதேச அளவிலான மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். உங்களுடைய பழைய நண்பரை சந்திப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு அமையலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு சங்கு
தனுசு:
உங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவர் அல்லது நெருங்கிய நபர் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வாய்ப்புள்ளது. திருமண தடை நீங்கி நல்ல வரன்கள் உங்களை தேடி வரும். வர இருக்கும் கோடையில் உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்த பழம்
மகரம்:
பார்ட்னர்ஷிப் வைத்து கொள்வது அல்லது புதிய பிசினஸ் துவங்குவது குறித்த யோசனைகள் தொடர்பாக உங்களது பழைய நண்பர்கள் உங்களை கன்வின்ஸ் செய்ய வாய்ப்புஉள்ளது. சாலை வழி பயணம் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு இது சவாலான நேரமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செய்லபடுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி, கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளியர் குவார்ட்ஸ்
கும்பம்:
உங்களைப் பற்றி பிறர் கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து நீங்கள் சண்டையிட வேண்டி சூழல் அமையலாம். பிறருடன் நீங்கள் பழகும் போக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு போதுமான ஆதரவு கிடைக்கும். அதிகப்படியாக செலவு செய்வதை நிறுத்த வேண்டிய சரியான நேரம் இது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு, பணத்தை சேமிக்க தொடங்குங்கள். இது உங்கள் எதிர்காலத்திற்கு உதவக் கூடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- மல்லிப்பூ
மீனம்:
உங்களுக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயத்தை சமாளிப்பதன் பொருட்டு, அதற்கான அடிப்படையை அணுகி, அதனை சரி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரியும் அனுபவமிக்க நபர் உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கலாம். எல்லா விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதை நினைவில் கொள்க.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு கூழாங்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News