முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய (மார்ச் 30, 2023) தினம் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்றைய (மார்ச் 30, 2023) தினம் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கும், ஏதேனும் கடன் இருந்தால் அதை அடைப்பதற்கும் உகந்த நாளாகும். லேசான நோய் தொற்றுகள் அல்லது தலைவலி குறித்து கவனமாக இருக்கவும். வாக்குவாதம் வருகின்ற சூழலில் அமைதியை கடைபிடிக்க முயற்சி செய்யவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தோட்டம்

    ரிஷபம்:

    இன்றைய தினம் உங்களுக்கான ஆற்றல் மிக பலமாக இருக்கிறது. அதைக் கொண்டு நீங்கள் புதிய பணிகளை தொடங்குவீர்கள். யாரேனும் கடன் கேட்டால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவும். நீண்ட தூரம் நடைபயிற்சி செய்தால் உங்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இரட்டை இறகுகள்

    மிதுனம்:

    பிறர் மீது நீங்கள் அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்தாலும் கூட, உங்களிடம் அவர்களுக்கு கொஞ்சம் மன வருத்தம் ஏற்படலாம். தற்போது சுமூகமான சூழலை உருவாக்குவதற்கு சில பேச்சுவார்த்தைகள் தேவைப்படலாம். சக ஊழியர் கேட்கும் பண உதவி நியாயமானதாக இருக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூலாங்கற்கள்

    கடகம்:

    பழைய நண்பர் ஒருவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்துவீர்கள் அல்லது நேரடியாக சந்திப்பீர்கள். வெளியிடங்களுக்கு செல்வதற்கு வானிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஏதேனும் ஒரு நல்ல காரியத்திற்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் அதற்கான வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பேப்பர்

    சிம்மம்:

    எந்தவித தகவலும் தெரிவிக்காமல் விருந்தினர்கள் வரக்கூடும். இன்றைய தினம் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். தடைபட்ட பண வரவு வந்து சேரும். உங்களிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு சில குறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முத்துக்கள்

    கன்னி:

    தற்போதைய பணிச்சூழல் ஆரோக்கியமானதாக தென்படுகிறது. ஆகவே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விஷயங்கள் குறித்து நீங்கள் விவாதிக்கலாம். அலுவலகத்தில் ஆவண நடவடிக்கைகளை உரிய சமயத்தில் முடிக்கவும். போதுமான தூக்கமின்றி தவித்து வரும் நீங்கள் இரவில் நன்றாக தூங்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாசல் படி

    துலாம்:

    ஒருவர் மீது அக்கறை கொண்டிருக்கின்ற காரணத்தால் அதுவே பலவீனமாக ஆகிவிடக்கூடாது. உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் உங்களுடைய கருத்துக்களை மிக வலுவானதாக முன்வைக்கவும். உங்கள் உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு தலைப்பாகை

    விருச்சிகம்:

    இரவில் கெட்ட கனவுகள் வருவதற்கு உங்கள் ஆழ்மனம் அச்சம் கொள்வதே காரணம். அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர் பாலினத்தவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். இன்றைய தினம் பழைய நண்பரை சந்திக்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செங்கல் சுவர்

    தனுசு:

    உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் உங்களை தவற விடுவதாக எண்ணுகின்றார். ஆகவே அன்புக்குரிய நபர்களுடன் செலவழிக்க நேரம் ஒதுக்கவும். மாலையில் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு உண்டு. மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய அறிகுறி

    மகரம்:

    பழைய நினைவுகள் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். எதார்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்வது பலன் தரும். உங்கள் கவனத்தைப் பெற விரும்பும் பெற்றோர்கள் மீது அக்கறை செலுத்தவும். பழைய திட்டத்தை புதிய கோணத்தில் முன்னெடுத்துச் செல்லவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளாஸ் பாட்டில்

    கும்பம்:

    உங்கள் கோபம் இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இனி கெட்ட கனவுகள் தொடராது. கடந்த சில மாதங்களில் நீங்கள் அடைந்த வளர்ச்சிக்கு நன்றி உணர்வு கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்க இருக்கின்றன.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆலமரம்

    மீனம்:

    குடும்பத்திற்கு ஆதரவான ஒரே நபர் நீங்கள்தான் என்ற வகையில் அவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கவும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இன்றைய தினம் பிஸியாக இருப்பீர்கள். அரசு அதிகாரிகளுக்கு தடை ஏற்படலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பறவைகள் கூட்டம்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News