மேஷம்:
செல்வாக்கு மிகுந்த சில நபர்களின் துணையுடன் சரியான பிடிமானத்தை நீங்கள் பெறுவீர்கள். வெளியூர்களில் தங்கி இருப்பவர்களுக்கு வீட்டு நினைப்பு இருக்கும் பட்சத்தில் தற்போது வீட்டுக்கு சென்று வரலாம். நீங்கள் எதிர்பார்த்த நிகழ்ச்சி தற்போது வேறு ஒரு வடிவில் நடக்க இருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அதிர்ஷ்ட செடி
ரிஷபம்:
இன்றைய தினம் நீங்கள் மிகுந்த சௌகரியமாக உணர்வீர்கள். உங்கள் பார்ட்னர் மனரீதியாக சோகமுடன் உள்ளார். அவரது கவலைகளை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். தேவையற்ற விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்தி நேர விரயம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உப்பு விளக்கு
மிதுனம்:
உண்மையில் நீங்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக புதிய வணிக யோசனைகள் தோன்றும். பழைய தொடர்புகளின் மூலமாக உங்கள் வட்டத்தை நீங்கள் விரிவாக்கம் செய்வீர்கள். திடீரென்று உங்களிடம் முன்வைக்கப்படும் சவால் காரணமாக நீங்கள் பிஸியாக மாறுவீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோபால்ட் பாக்ஸ்
கடகம்:
உங்கள் முந்தைய பணிகள் இப்போது மற்றவர்களுக்கு சௌகரியமானதாக தோன்றும். உங்கள் திறன்களை நீங்கள் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் விரிவாக்க பணிகளை செய்ய திட்டமிட்டு இருந்தால் அதை இப்போது செய்யலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில்
சிம்மம்:
சிலருக்கு நீங்கள் தானம் செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது உதவி செய்ய வேண்டியிருக்கலாம். வீட்டில் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்வது நல்லது. உங்களுக்கான தனித்துவம் மிகுந்த விஷயத்தை உங்கள் குழந்தைகள் திட்டமிட்டு வைத்துள்ளனர்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளையாட்டு போட்டி
கன்னி:
எதார்த்த சிந்தனையுடன் இருப்பது சில பலவீனங்களைக் கொண்டிருக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்கள் நடவடிக்கையால் வருத்தம் கொள்வார். உங்களுக்கான செயல்கள் அனைத்தையும் இன்று பட்டியலிட்டு, ஆற்றல்களை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதற்கான நேரம் இது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்தமான திரைப்படம்
துலாம்:
தேவையற்ற அச்சத்தில் இருந்து விடுதலை பெறுவதே இன்றைய சாதனையாக இருக்கும். நீண்ட காலம் இந்த கவலை உங்கள் மனதை வாட்டி வதைத்திருக்கலாம். நீங்கள் தவிர்க்க நினைக்கும் நபரை சந்திக்க நேரிடலாம். சருமத்தில் ஏற்படும் பாதிப்பு எரிச்சல் உணர்வை தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான கிரிஸ்டல்
விருச்சிகம்:
உங்களை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்ற வதந்திகள் உங்கள் காதுகளை எட்டும். இதற்கு முன்பு நீங்கள் ஆர்வம் காட்டாத விஷயங்கள் மீது இப்போது திடீரென்று கவனம் ஏற்படலாம். சில விவகாரங்கள் குறித்து உங்களுடன் அவசரமாக விவாதிக்க பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சணல் பை
தனுசு:
பழைய நண்பர் ஒருவருடன் தொடர்பு கொள்வது குறித்து நீங்கள் சிந்தித்து வந்தீர்கள் என்றால் அதை இன்றைக்கு செய்யலாம். நல்லதொரு பழக்கம் குறித்து உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மருத்துவ நிபுணரை ஆலோசிப்பது நல்லது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய வாகனம்
மகரம்:
எல்லா நாட்களும் இன்பம் மிகுந்ததாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அந்த வகையில் இன்றைய நாள் மந்தமாக இருக்கலாம். முக்கியமான விஷயங்களை நீங்கள் மறுபரிசீலனை செய்வீர்கள். உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வதற்கான நேரம் இதுவாகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வண்ணமயமான தலைப்பாகை
கும்பம்:
இன்றைய தினம் நீங்கள் ரிலாக்ஸ் செய்து கொள்வீர்கள் மற்றும் உடல் ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். நண்பருடன் சேர்ந்து இதை செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம். தற்போதைக்கு யாரிடமும் கடன் கேட்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கெட்டில்
மீனம்:
சிக்கல் மிகுந்த விஷயத்தில் நீங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது திராட்சையின் புளிப்புக்கு நிகரானது. நீங்கள் மாற்ற நினைக்கும் சூழல் குறித்து மறுவரிசீலனை செய்யவும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெற வேண்டும் என்றால் பொறுமை மிக அவசியமாகும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒருங்கிணைந்த எண்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News