மேஷம்:
தற்போதைய பரபரப்பான தருணத்தில், உங்கள் நாள் வியக்கத்தக்க வகையில் சில நேர்மறையான செய்திகளைக் கொண்டுவரும். உங்கள் வியாபாரத்தில் உங்கள் முடிவில் இருந்து அதிக நன்மைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் வீட்டில் முக்கிய விஷயங்களை நிர்வகிப்பதில் உதவியாக இருப்பார்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு ரோஜா பூச்செண்டு
ரிஷபம்:
உங்கள் பார்வையை உங்களுடன் உள்ளோர் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள். வணிகர்களுக்கு இன்றைய நாள் ஒரு நல்ல நாளாக அமையும், மற்றும் இந்த வாரத்தில் சில நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடைய எளிமையான அணுகுமுறை இன்று உங்களுக்கு உதவக்கூடும். முக்கியமான ஆவணங்களை எப்போதும் சீர்படுத்தி வைத்திருங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு புதிய பேனா
மிதுனம்:
உங்கள் திட்டங்கள் இன்று வேலை செய்யவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், விரைவில் நீங்கள் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவநம்பிக்கையான நேரம் அவநம்பிக்கையான நடவடிக்கைகளுக்கு வழி வகுக்க கூடும். எனவே, நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்களை தேடி சில மோசமான மனிதர்கள் மீண்டும் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஆதலால், மிக தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இன்றைய நாளில் ஆதிக்கம் செலுத்தும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு இறகு
கடகம்:
உதவியாக இருக்கும் நண்பர்கள் மூலம் அதிக மகிழ்ச்சியை பெறுவீர்கள். ஒரு தெரிந்த நபர் உங்களின் நம்பிக்கையை உடைக்கக்கூடும், மேலும் நீங்கள் அதைப் பற்றி அறிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய வாதங்களை நீண்ட காலமாக இழுக்க தேவையில்லை. மாணவர்கள் உண்மையான கற்றல் அனுபவத்தைப் பெறுவார்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒளிரும் ஒளி
சிம்மம்:
ஒரு தவறான கருத்து எதிர்காலத்தில் ஒரு வடுவுக்கு காரணமாக இருக்கலாம். உங்களால் முடிந்தவரை விஷயங்களைத் தெளிவுபடுத்துங்கள். ஒரு பங்குதாரர் உங்களைப் பற்றி சிறப்பாக உணரலாம். பிற்பகலுக்கு பிறகு உங்களுக்கான நல்ல நேரம் தொடங்கும். உங்கள் தாய்க்கு உங்களிடமிருந்து உதவி தேவைப்படலாம். எனவே அவருக்கு ஆறுதலாக இருங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பழைய சைக்கிள்
கன்னி:
இன்றைய நாளில் பாராட்டுக்கள் உங்களை தேடி வரும். இன்று உங்கள் ஆற்றலை எப்படி செய்லபடுத்த வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். பணியிடத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள். அப்போது தான், உங்கள் மீது அதிக நம்பிக்கை வரும். எப்போதும் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு பழைய புகைப்படம்
துலாம்:
உங்கள் எல்லா பயத்தையும் தூக்கி போடுங்கள். இன்று வெற்றிக்கான நாளாக உங்களுக்கு இருக்கும். வாழ்க்கையில் எப்போதும் திட்டமிடல் வேண்டும். உங்களின் நெருங்கிய நண்பர்கள் உங்கள் மீது பொறாமைப்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு விருப்பமான திட்டங்களை வெளியில் சொல்லாதீர்கள். ஏனெனில், சிலர் உங்களின் திட்டங்களை திசைமாற்ற நினைக்கலாம். எப்போதும் போதுமான அளவு மட்டும் சாப்பிடுங்கள். அதிகமாக சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் வரலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ட்ரீம் கேட்சர்
விருச்சிகம்:
உங்கள் யோசனைகளை முன்வைக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து யாராவது உங்கள் முயற்சியை அங்கீகரித்து பாராட்டலாம். உங்கள் திட்டம் வெற்றியடைவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் தந்தை உங்கள் உதவியைக் நாடலாம். நேரத்திற்கு அவருக்கு உதவுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - பறக்கும் காத்தாடி
தனுசு:
வாழ்க்கையில் உங்கள் உண்மையான பொக்கிஷம் உங்கள் குடும்பம் தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், அவர்களின் ஆதரவை உங்களுக்கு நிபந்தனையின்றி எப்போதும் கிடைக்கும். சிறுசிறு உடல்நலப் பிரச்சினைகள் வந்து போகலாம். வேலையில் குழப்பத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வங்கி வேலைகளில் கவனமாக இருங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கசப்பான சுவை
மகரம்:
மற்றவர்களின் மீது உங்களுக்கு உள்ள தவறான புரிதல் தீர்க்கப்டும். உங்களுக்கென்று உள்ள ஒரு உணர்ச்சிப் பக்கம், உங்களின் கவலைக்கு காரணமாகிறது. வெளியூர் செல்வதற்கான திட்டம் ஏற்படலாம். உங்கள் பெற்றோர் சிறு பயணத் திட்டத்தை உருவாக்கலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு லாக்கெட்
கும்பம்:
சில இனிமையான இயற்கை சூழல்கள் அல்லது இசைக்கு மத்தியில் உங்கள் ஓய்வை கழியுங்கள். இன்று வேலை குறைவாக இருந்தாலும் உங்களை பிஸியாக உணரலாம். தலைவலி ஒரு சிலருக்கு இன்று தொந்தரவு தரலாம். திறமையான வேலையாட்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இன்று அமையும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கருப்பு வாயில்
மீனம்:
இன்று உங்களின் நம்பிக்கைக்குரிய நபர்கள் உங்களை ஏமாற்றலாம். எனவே, ஜாக்கிரதையாக இருங்கள். இன்று நிதானமாக இருந்து காரியங்களை சாதியுங்கள். சில நண்பர்கள் உங்களை அழைத்து கலந்துரையாடலாம். வெளிநாட்டில் இருந்து வரும் உறவினர்கள் சில நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு செப்பு கம்பி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News