முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (மார்ச் 22, 2023) விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (மார்ச் 22, 2023) விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாக நிறைவு பெறும். மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொடக்கத்தை உருவாக்குவதற்கான சிறந்த நாளாக இன்று அமையும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அமேசானட்

ரிஷபம்:

இன்றைக்கு இன்பம் நிறைந்த நாளாக அமையும். நீங்கள் ஏற்கனவே எடுத்த முடிவைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். கால்நடை பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு நிற ஸ்படிகம்

மிதுனம்:

வெற்றியைப் பெறுவதற்கு பல முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவத் துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் ஒரு நேர்மறையான எண்ணம் தோன்றி மறையும். சேவை பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும். வெளி உலக அனுபவத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரத்தினக்கல்

கடகம்:

எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறு கவலைகள் ஏற்படலாம். உயர்கல்வியில் இருந்து வந்த குழப்பம் குறையும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செவ்வந்தி

சிம்மம்:

உங்களின் கடந்த கால தவறு சில வடுக்களை ஏற்படுத்தும். பணியிடத்தில் சில அவப்பெயர்கள் ஏற்படடு நீங்கும். எந்த வேலைச் செய்தாலும் கோபம் கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். இன்று நீங்கள் ஒரு இன்ப அதிர்ச்சியில் இருக்கலாம். பெரும்பாலும் பழைய நண்பரிடமிருந்து. சமீபகாலமாக உங்கள் மனதில் இடம் பிடித்த ஒரு குழப்பம் தெளிவு பெறுகிறது. வர்த்தக பணிகளில் முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில் இறகு

கன்னி:

ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு இது ஒரு இனிமையான நாளாக அமையும். வாழ்க்கைத் துணைவரைப் பற்றிய புரிதல்கள் மேம்படும்.மனதில் இருந்து வந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் மெழுகுவர்த்தி

துலாம்:

இன்றைக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பணியில் சிறப்பாக செய்வதன் மூலம் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குறுகிய பயணம் ஏற்படும் சூழல் உண்டாகும். உங்களின் காதலருடன் நீண்ட நேரம் செலவிடும் நாள் இன்று.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு நிற ஸ்படிகம்.

விருச்சிகம்:

கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முக்கியமான நபர்களுடன் நேரத்தை ஒதுக்க முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்துக் கொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் கருவிகள் அல்லது உதிரி பாகங்கள் வியாபாரத்தில் இருந்தால், பணியாளர்களின் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – டூர்மலைன்

தனுசு:

செல்வாக்கு மேம்படும் நாள் இன்று. நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் நிம்மதியான மனநிலையைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாகக்கூடும். கால்நடை தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உங்கள் உடன் பிறந்தவர்கள் சில நிதி அழுத்தங்களுக்கு உள்ளாகலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்ரின் ரத்தினம்

மகரம்:

முயற்சிகளில் இருந்த மறைமுக எதிர்ப்புகளைப் புரிந்து கொள்வீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அக்கம் - பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டில் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுமையான எண்ணங்கள் தோன்றி மறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முத்து

கும்பம்:

தடைகள் விலகும் நாளாக இன்று அமையும். தனம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தின் சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். நண்பர்களின் மூலம் பல உதவிகள் கிடைப்பதால் வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மக்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்ப்பது சில நேரங்களில் கடினமான உணர்வுகளை வளர்க்க வழிவகுக்கும். நீங்கள் ஒரு சிறிய அளவிலான விருந்தை எதிர்பார்க்கலாம். முகத்தில் பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மாணிக்க கற்கள்

மீனம்:

புதிய வேலை வாய்ப்பு இன்று அமையக்கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வவ்போது தோன்றி மறையும். மனதில் இருக்கும் ரகசியங்களைப் பகிர்வதைத் தவிரப்பது வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவதன் மூலம் எண்ணங்கள் உண்டாகும். பணவரவு மேம்படும் நாள் இன்று.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல நிற ஸ்படிகம்

First published:

Tags: Oracle Speaks, Tamil News