முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 19, 2023) பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 19, 2023) பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களின் பழைய லட்சியத்தை தொடருவது என்று நீங்கள் முடிவு செய்து விட்டால், உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடாது. பண விவகாரங்களில் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் மனநலனுக்காக வளர்ப்பு பிராணியை கொண்டு வருவது குறித்து சிந்திப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழைய கேட்

ரிஷபம்:

உங்களுக்கு கிடைக்கின்ற புதிய வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். தற்போது நீங்கள் ஏற்றுக் கொண்டு பொறுப்பு தொடர்பான பணிகள் மெல்ல, மெல்ல வளர்ச்சி அடையும். வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆரோக்கியத்திற்கான புதிய நடவடிக்கையை பின்பற்றுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் இதழ்

மிதுனம்:

புத்தாக்க சிந்தனைகள் உங்கள் மனதை நிரப்பும். அவற்றில் சில யோசனைகள் வடிவம் பெறலாம். புதிய வருமானத்திற்கான ஆதாரம் உங்களை தேடி வருகிறது. புதிய வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கான நம்பிக்கை பிறக்கும். உங்களுக்கான ஆற்றல் சாதகமானதாக இருக்கும். வர்த்தகர்களுக்கு இது சிறப்பான நேரமாகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புத்தர் சிலை

கடகம்:

பொறுத்திருந்து பார்ப்பதற்கான நேரம் இது. ஆனால், அதிரடியான நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டிருந்தால் அவற்றை இப்போது ஒத்திவைக்கவும். பணியில் உள்ள சிலர் உங்கள் புகழை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். பணியிடத்தில் உள்ள சூழலை எச்சரிக்கையுடன் அணுகவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படம்

சிம்மம்:

புதிய பொறுப்புகளை நோக்கி பயணத்தை தொடங்க உள்ளீர்கள். அபாயத்தை கணக்கீடு செய்து அதிரடியாக இறங்கினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்கள் தனித்துவ குணம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். வீட்டில் சில பிரச்சினைகள் நிலவலாம். திடீர் சந்திப்புகள் புத்துணர்ச்சியை தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இனிப்புகள்

கன்னி:

உங்கள் நிபுணத்துவ ஆலோசனையை சிலர் பெற விரும்புகின்றனர். தற்போது டிரெண்டிங்கில் உள்ள ஒரு விஷயத்தை முயற்சி செய்ய விரும்புவீர்கள். ரகசியம் காப்பது கடினம் தான். ஆனால், அதை பின்பற்றவும். காலை நேரப் பணிகள் கடினமானதாக இருப்பின், கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பெயர் பலகை

துலாம்:

இந்த சமயம் எந்த அபாயமும் இல்லாததைப் போல தோன்றும். ஆனால், இது தவறான எச்சரிக்கை ஆகும். அடுத்து வரக் கூடிய விஷயத்தை உங்களால் உணர முடியாது. ஆனால், இது தற்காலிகமாக குகையை கடப்பது போலத் தான். உங்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வாக்கிங் ஸ்டிக்

விருச்சிகம்:

அழகிய மனம் படைத்தவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடந்தேறும். உங்கள் வீட்டுப் பணியாளருக்கு உடல்நலன் பாதிக்கப்படலாம். முடிந்தவரை அவர்களுக்கு உதவி செய்யவும். எலெக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்குவதில் பிஸியாக இருப்பீர்கள். புதிய சொத்து வாங்குவது என்றால், அதுகுறித்து நீண்ட விசாரணை தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரப்பெட்டி

தனுசு:

நண்பர்களுடன் பழகுவதற்கு இது அதிர்ஷ்டம் நிறைந்த நேரமாகும். தோட்டப் பராமரிப்பு நல்ல பொழுதுபோக்கை தரும். புதிய வணிக யோசனை வரும். பணியிடத்தில் உங்களுக்கு வளர்ச்சி தரக் கூடிய வகையில் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். ஓய்வுக்காக சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டு.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிங்க் நிற பூக்கள்

மகரம்:

குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவது குறித்து சிந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் மீது பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம். அது பின்னாளில் பிரச்சினையை ஏற்படுத்தும். உயரிய லட்சியத்தை நோக்கி உங்கள் ஆற்றலை ஒன்று திரட்டுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய நாணயம்

கும்பம்:

தற்போதைய தேவையாக இருக்கக் கூடிய நண்பன் குறித்து பரிசீலனை செய்யவும். பழைய நடவடிக்கைகளை நினைவுகூர்ந்து அவர்களை கண்டுபிடிக்கலாம். உங்கள் காதல் சுமூகமானதாக இருக்காது. திருமண ஏற்பாடு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் பார்ட்னர்ஷிப் வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீர்த்தொட்டி

மீனம்:

உங்கள் வேலைக்கான பலன் கிடைக்காமல் நீங்கள் எரிச்சல் அடைவீர்கள். தனிப்பட்ட முறையிலும், தொழில்முறை அளவிலும் செயல்திறன் கொண்ட விஷயங்களை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாக தனிமையை விரட்டி அடிக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - டேன்ஜரின் தட்டுக்கள்

First published:

Tags: Oracle Speaks, Tamil News