முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வெற்றி கிடைக்கும் நாளாகவே இன்று (மார்ச் 17, 2023) அமையும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு வெற்றி கிடைக்கும் நாளாகவே இன்று (மார்ச் 17, 2023) அமையும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்றைக்கு நீங்கள் மற்றவர்களால் கையாளப்படுவதைப் போன்று உணரலாம். ஆனால் ஒருபோதும் அப்படி இருக்க வாய்ப்பில்லை. நெருக்கமான சிலர் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்வார்கள். சில விஷயங்களை மதிப்பாய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய நாள் இன்று. எனவே எதை செய்தாலும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குறுகிய சாலை

  ரிஷபம்:

  வெற்றிக் கிடைக்கும் நாளாக உங்களுக்கு அமையும். தேவைப்படும் விஷயத்தில் அதிக முயற்சியை எடுத்தீர்கள் என்றால் வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைக்கும் போது அச்சம் ஏற்பட்டால் அது பலவீனத்தின் அடையாளம் அல்ல. எனவே வெளிப்புற சூழ்நிலைகளைப் புரிந்து நடந்துக் கொள்ளுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புயல்

  மிதுனம்:

  இன்றைக்கு கடந்த காலத்தில் செய்யப்பட்ட முதலீடுகளால் சில பிரச்சனைகள் ஏற்படும். விரைவில் அதற்கான தீர்வைப் பெறுவீர்கள். தவறான வாக்குறுதிகளுக்கு மத்தியில் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டாலும், நீங்கள் எப்படி வாழ விரும்புகிறீர்கள்? அப்படியே வாழ்வது தான் உங்களுக்கு வெற்றியைத் தரும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி குடுவை

  கடகம் :

  புதிய செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றால்? ஆர்வம் இல்லை என்றால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். அவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேற்றத்தை அடைவீர்கள். உங்கள் எல்லைக்கு உட்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் மேற்கொள்ளாதீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாமந்தி

  சிம்மம்:

  உங்களது பணிக்கான திட்டங்களை சில நாள்களில் நிறைவேற்றக்கூடிய நாள் இன்று. வேலைக்காக புதிய இடங்களுக்குப் பயணிக்க நேரிடும். பரபரப்பான கால அட்டவணையின் காரணமாக ஏதேனும் உறுதிமொழியைக் கொடுத்தால் நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும் .

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பாலம்

  கன்னி:

  மௌனம் எப்போதும் பொன்னானது அல்ல. ஒரு முக்கியமான விவாதத்தில் உங்களின் தலையீடு அவசியமான ஒன்றாக அமையும். உங்களின் கடந்த கால செயல்பாடுகள் பாராட்டுகளைக் குவிக்கும். உண்மையான தேவையை அறிந்து சிலர் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். வெற்றி கிடைக்கும் நாளாகவே இன்று அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு குடம்

  துலாம்:

  எந்தவொரு சூழலிலும் உங்களின் தன்னம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். இதனால் பல தோல்விகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நிதானமாக சிந்தித்து எதையும் செய்யவும். உங்களது திறமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இன்றைக்கு உள்ளது. வீண் அலைச்சல்கள் ஏற்படும்

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிரகாசமான சுவர்

  விருச்சிகம்:

  செழிப்பும் வளமும் மெல்ல மெல்ல உங்கள் வாழ்க்கையின் அங்கமாகி வருகிறது. உங்கள் பணிகள் நிறைவேற்றப்படுவதையும் இலக்குகள் நிறைவேற்றப்படுவதையும் நீங்கள் கவனிக்கலாம். உங்களுக்கான வெற்றிகள் உங்களுக்கு அருகாமையில் தான் உள்ளது. புதிய பழக்க வழக்கங்களுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புளி மிட்டாய்

  தனுசு:

  இன்றைக்கு உங்களது வாழ்க்கையில் யாராவது வேண்டுமென்றே பிரச்சனைகளை உருவாக்கி, உங்களைப் புறக்கணிக்க நினைப்பார்கள். கஷ்டப்படாதீர்கள் எதையும் துணிவுடன் எதிர்க்கொள்ளவும். கடந்த காலத்தில் உங்களை உணர்ச்சி ரீதியாக புண்படுத்திய ஒருவர் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள். நிதானமுடன் சிந்தித்து செயல்பட்டால் வெற்றியைப் பெறுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி நகைகள்

  மகரம்:

  நிதானமுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. உங்களின் விளையாட்டு திறமையால் வெற்றியைக் காண்பீர்கள். இருந்தப்போதும் சில தேவையற்ற சங்கடங்கள் வரக்கூடும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவும். ஒப்பீட்டளவில் மன நிம்மதியாக நாளாகவே இன்றைக்கு அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கூழாங்கல்

  கும்பம்:

  இன்றைக்கு பொழுதுபோக்கு நாளாக இருந்தாலும் சில நேரங்களில் வீண் அலைச்சல் மற்றும் எரிச்சல்கள் ஏற்படும். மனைவியை புரிந்துக்கொண்டு நடப்பது வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும். மாலையில் உங்களது வீடுகளுக்கு எதிர்பாராத சில விருந்தினர்கள் வரக்கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இலவங்கப்பட்டை

  மீனம்:

  உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும் நாள் இன்று. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்ப்பார்ப்புகள நிறைவேறும். தேவையில்லாத மன அழுத்தத்தை நீங்கள் உணரக்கூடும். தேவையில்லாத மோதல்களைத் தவிர்க்கும் நாளாக இன்று அமையும். புதிய பணிகளை இன்று தொடங்க வேண்டாம். எந்த பணியில் இருந்தாலும் தேவையற்ற விஷயங்களைப் பற்றி பேசாதீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சுருக்க கலை

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News