முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஜூன் 11) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஜூன் 11) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • 4-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம் :

    உங்களது வாழ்க்கையில் ஏதாவதொன்றில் புதிய ஈர்ப்பு வரக்கூடிய நாளாக இன்று அமையும். புதிய உறவைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளது. ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது. தினசரி நடைப்பயிற்சி செல்வது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்துக் கொள்வீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

    அதிர்ஷ்ட எண் – 17

    அதிர்ஷ்ட அடையாளம் – மயில் இறகு

    ரிஷபம் :

    மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும் நாள் இன்று. உங்கள் உணர்வுகளைத் துணையிடம் வெளிப்படுத்துவதற்குத் தைரியம் தேவைப்படலாம். பல சவால்களை ஏற்று வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த சில முதலீடுகள் நிகழ்காலத்தில் நிச்சயம் பலனளிக்கும். பார்னருடனான ஒத்துழைப்பு நிதி ஆதாயத்திற்கு வழிவகுக்கும். இருந்தப்போதும் நிதி விஷயங்களில் கவனமுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் சில உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பழக்கவழக்கங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் – பச்சை

    அதிர்ஷ்ட எண் – 10

    அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்படிகம்

    மிதுனம் :

    நண்பர்களின் மூலம் இன்றைக்கு சாதகமான சூழல் அமையும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரியோர்களின் சந்திப்பு மனமாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். பணியிடத்தில் குழப்பமும், தெளிவின்மையும் ஏற்படலாம். சரியான நபர்களின் உதவியால் நிதி எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட முடியும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் – லாவெண்டர்

    அதிர்ஷ்ட எண் – 8

    அதிர்ஷ்ட அடையாளம் – வானவில்

    கடகம் :

    உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். உடன் பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். உங்களின் முழுத்திறனையும் அடைய புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் பணத்தில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கவும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

    அதிர்ஷ்ட எண் – 5

    அதிர்ஷ்ட அடையாளம் – மூன் ஸ்டோன்

    சிம்மம் :

    கவலைகள் விலகும் நாளாக இன்று அமையும். உங்கள் காதலுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரம் இது. கடந்த கால பிரச்சனைகளுக்கு உணர்ச்சிப்பூர்வமான தீர்வைக் கொண்டு வரமுடியும். பழைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டிய நேரம் இன்று. வழக்கமான செயல்களில் இருந்து சற்று ஓய்வெடுத்து சுய கவனிப்பில் கவனம் செலுத்தவும். மன மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் – கிரீம்

    அதிர்ஷ்ட எண் – 6

    அதிர்ஷ்ட அடையாளம் – நெல்லிக்காய்

    கன்னி:

    நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நாளாக இன்று அமையும். காதல் வாழ்க்கையில் நம்பிக்கை சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், கவனமுடன் இருக்கவும். தொழில் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய பழக்கவழக்கங்கள் உங்கள் நிதி வளர்ச்சியைத் தடுக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க தவறாமல் உடற்பயிற்சி செய்வது செய்வது அவசியம். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் - பச்சை

    அதிர்ஷ்ட எண் – 5

    அதிர்ஷ்ட அடையாளம் – சிவப்பு பெட்டி

    துலாம் :

    காதல் வாழ்க்கையில் மன அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும் நாள் இன்று. மகிழ்ச்சியான உறவைப் பற்றிய உங்கள் கனவுகள் நனவாகும். புதிய யோசனைகள் மற்றும் வாய்ப்புகள் உங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நிதிச்சிக்கல்கள் ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும் என்பதால் உங்களின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, உங்கள் உணவில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் -மஞ்சள்

    அதிர்ஷ்ட எண் - 19

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டாம்பூச்சி

    விருச்சிகம் :

    உங்களது இலக்குகளில் கவனம் செலுத்தி புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதன் மூலம் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிலும் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். காதல் வாழ்க்கையில் எதிர்பார்க்கப்பட்ட மகிழ்ச்சியை அடைவீர்கள். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் திருப்தியான சூழல் ஏற்படும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் - பச்சை

    அதிர்ஷ்ட எண் - 12

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய பூங்கா

    தனுசு:

    இன்றைக்கு உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பலதரப்பட்ட விஷயங்களில் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம்- பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்துக்கொள்வீர்கள். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்வதன் மூலம் உங்களின் மன ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவும். உங்களின் புத்திசாலித்தனமான திறன்களை மேம்படுத்துவதற்கான நேரம் இது.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் - நீலம்

    அதிர்ஷ்ட எண் - 31

    அதிர்ஷ்ட அடையாளம் - சாமந்தி பூ

    மகரம்:

    சிறு தூர பயணங்களால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் நாள் இன்று. பத்திரம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குகள் அல்லது பிற நிதி வாய்ப்புகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இழுபறியான சில வரவுகளால் கையிருப்பு மேம்படும். வாகன பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். ஆடம்பரமான பொருள்களை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். உங்கள் பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாளாக இன்று அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பருவகால நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

    அதிர்ஷ்ட எண் - 19

    அதிர்ஷ்ட அடையாளம் - நியான் விளக்கு

    கும்பம்:

    சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும் நாளான இன்று அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சுய பாதுகாப்புக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். குடும்ப சுற்றுலா செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளது. விலையுயர்ந்த பொருள்களில் கவனம் செலுத்தவும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இரட்டை வருமான வாய்ப்பு உங்களுக்கு ஏற்படும் நாள் இன்று.

    உங்களுக்கான அதிர்ஷ்டம் நிறம் - இண்டிகோ

    அதிர்ஷ்ட எண் - 22

    அதிர்ஷ்ட அடையாளம் - ரெட்ரோ மியூசிக்

    மீனம்:

    லாபம் நிறைந்த நாளாக இன்றைக்கு அமையும். சமூகத்திலிருந்து தனித்து இருப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தினால், வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய முடியும். எதிர்காலத்திற்கான லட்சிய திட்டங்களை கருத்தில் கொள்வது பாதுகாப்பானது. நிதி சிக்கல்கள் ஏற்படும் என்றாலும் ஜாக்பாட் உங்களுக்கு நிச்சயம். உலகியல் வாழ்க்கைப் பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதிற்கு தெளிவு ஏற்படும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை

    அதிர்ஷ்ட எண் - 1

    அதிர்ஷ்ட அடையாளம் - கண்ணாடி கதவு

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News