முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஜூன் 08) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஜூன் 08) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்களது மன உறுதி சவால்களை எளிதா சமாளிக்க உங்களுக்கு உதவும். இன்று உங்களது அன்புக்குரியவர்களுடனான உறவு உணர்ச்சிமிக்கதாக இருக்கலாம். இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களை உற்சகமாக வைக்கும். ஆரோக்கியத்தை பராமரிக்க உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்த ஒரு ரெட் ஜர்னலை வைத்திருக்கவும்

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்ட எண் - 29

ரிஷபம்:

இன்று நீங்கள் நடைமுறையில் நடக்க கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். கடின உழைப்பின் மூலம் இன்று நீங்கள் வெற்றியை காண்பீர்கள். உங்களது அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாகி தருவது உங்கள் கடமை.

அதிர்ஷ்ட அடையாளம் - ஜேட் ஜெம்ஸ்டோன்

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிர்ஷ்ட எண் - 16

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். எதிலும் நேர்மை வழியில் செல்வதை மற்றும் சுறுசுறுப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தியானம் மற்றும் மன பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் - டைரி

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட எண் - 25

கடகம்:

உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பான சூழலை உருவாக்க இன்று அதிக முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். இன்று உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - மூன் ஸ்டோன்

அதிர்ஷ்ட நிறம் - சில்வர்

அதிர்ஷ்ட எண் - 12

சிம்மம்:

இன்று உங்களது தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்களை வெளிப்படுத்த மற்றும் வாழ்க்கையில் பிரகாசிக்க சிறந்த நாள். பணியிடத்தில் உங்களது திறமைகள் காரணமாக மதிப்பும், பாராட்டும் பெறுவீர்கள். உங்களது படைப்பாற்றல் இன்று அடுத்த கட்டத்தை எட்டலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - சிங்க உருவம்

அதிர்ஷ்ட நிறம் - கோல்ட்

அதிர்ஷ்ட எண் - 41

கன்னி:

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமாக செயல்பட வேண்டும். பணியிடத்தில் உங்களுடன் கூட்டு சேரும் நபர்கள் காரணமாக குழுவின் உற்பத்தி திறன் அதிகரிக்க கூடும். திட்டமிட்ட விஷயங்களை செய்து முடிக்க இன்று முன்னுரிமை கொடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - நோட்புக்

அதிர்ஷ்ட நிறம் - எர்த் டோன்

அதிர்ஷ்ட எண் - 13

துலாம்:

இன்று நீங்கள் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் கடைபிடிக்க வேண்டும். காதல் மற்றும் உறவுகளில் பாசம் அதிகரிக்கும். பணியிடத்தில் நேர்மை மற்றும் சமத்துவத்தை வளர்க்க முக்கியத்துவம் கொடுங்கள். உங்களை சுற்றி அமைதியான சூழல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ரோஸ் குவார்ட்ஸ்

அதிர்ஷ்ட நிறம் - பேஸ்ட்டல் டோன்ஸ்

அதிர்ஷ்ட எண் - 37

விருச்சிகம்:

இன்று நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள் என்பதால் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க தவறாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை பயன்படுத்தி தனிப்பட்ட வளர்ச்சியை அடைவதை இலக்காக கொள்ளுங்கள். உடல் மற்றும் மனஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - கிரிஸ்டல்

அதிர்ஷ்ட நிறம் - டீப் ரெட்

அதிர்ஷ்ட எண் - 18

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். இன்று உங்களது இலக்கு உண்மையை தேடுவதும், உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதுமாக இருக்க கூடும். அவுட்டோர் ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுபடுவதன் மூலமும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்துங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - உலக வரைபடம்

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்ட எண் - 4

மகரம்:

இன்று நீங்கள் உறுதியாகவும், எளிதில் கவனம் சிதறாமலும் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் வெற்றியை அடைவதை இன்று இலக்காக கொண்டு செயல்படுங்கள். லேசான மனஅழுத்தத்திற்கு உள்ளாகலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - அதிர்ஷ்டத்தைத் தருவதாக கருதப்படும் ஏதேனும் ஒரு பொருள்

அதிர்ஷ்ட நிறம் - பிளாக்

அதிர்ஷ்ட எண் - 10

கும்பம்:

இன்று நீங்கள் புதுமையாக யோசித்து மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஒத்துழைப்புகள் மூலம் எதிர்பார்த்து காத்திருக்கும் விஷயங்களில் முன்னேற்றங்களை பெறுவீர்கள். மாலை நேரத்தில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வெளியே சென்று மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் - டோலமைட் ஸ்டோன்

அதிர்ஷ்ட நிறம் - எலெக்ட்ரிக் ப்ளூ

அதிர்ஷ்ட எண் - 11

மீனம்:

இன்று நீங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடக்க முக்கியத்துவம் கொடுங்கள் மற்றும் இரக்க உணர்வை வளர்த்து கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஒத்துழைப்பு உங்களது படைப்பாற்றலையும் உத்வேகத்தையும் அதிகரிக்கும். எந்த நேரத்திலும் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்ட எண் - 12

First published:

Tags: Oracle Speaks, Tamil News