முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 30) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 30) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய காரியங்களை முன்னெடுத்துச் செல்லலாம். உங்கள் பணித் திட்டங்களை செயல்படுத்த உகந்த நேரம் இதுவாகும். உங்கள் குழுவில் இடம்பெற விரும்பும் நபர் உங்களிடம் லாபி செய்வார்கள். இரட்டைவேடம் போடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - முகமூடி

ரிஷபம்:

ஒரு நிறுவனத்திடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்கிறது என்றால் நீங்கள் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று பொருள். சில இலக்கை அடைய நினைக்கும்போது உங்கள் திறன் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் சாதனைகளுக்கு பெற்றோரின் ஆசி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிணறு

மிதுனம்:

சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது உங்கள் கனவாகும். அதை நோக்கி நீங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கவனச்சிதறல் கூடாது. உங்கள் எதிர்கால திட்டங்களை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். செலவுகளை சமாளிக்க போதுமான சேமிப்பு உங்களிடம் இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்போர்ட்ஸ் கார்

கடகம்:

உங்கள் ஆழ்மனம் குறித்த தெளிவு உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும். அது ஒற்றை திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் உலகில் நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். வெளியிடங்களில் குதூகலமான நேரத்தை செலவழிப்பீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பாத்திரம்

சிம்மம்:

தனிநபர் விவாதங்களை பொதுவெளியில் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தெரியாமலேயே சில விஷயங்களில் உங்கள் தலையீடு இருக்கும். உணர்ச்சி ரீதியாக நீங்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குழப்பம் ஏற்பட்டால் அதை விட்டு விலகவும். மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு கலர்

கன்னி:

உங்களுக்கு விருப்பமான காரியம் நடக்க இருக்கிறது. எந்தவொரு விஷயம் குறித்தும் பலரது கருத்துக்களை கேட்டறிந்தாலும், இறுதி முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். சட்டத்துறை சார்ந்தவர்கள் சவாலான நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்மார்ட் வாட்ச்

துலாம்:

போட்டிகளில் பங்கேற்பது மட்டும் முக்கியமல்ல. அதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் தெளிவான மற்றும் உறுதியான பேச்சு தேவை. மன உறுதியை குலைக்கும் செய்தி ஒன்று வந்து சேரலாம். உங்கள் உடல் நலன் குறித்து கவலை அடைய வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சோஃபா

விருச்சிகம்:

உங்கள் ஆர்வம் உங்களை உயரமான இடத்துக்கு கொண்டு செல்லும். உங்கள் தொடர்புகளின் மூலமாக லாபம் கிடைக்கும். அதே சமயம், சில நபர்களிடம் அவநம்பிக்கையை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் வாழ்க்கை துணை உங்களை விமர்சிப்பவர்களில் முதன்மையானவராக இருப்பார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எம்பிராய்ட்ரி

தனுசு:

எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நபரும் எண்ணற்ற முறை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், அதனால் மனம் உடைந்து விடாமல் நீங்கள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் நிராகரிக்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மயில்

மகரம்:

கடந்த கால கசப்பான அனுபவங்கள் மீண்டும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதைப் பற்றி அச்சம் கொள்ளாமல் உங்கள் வேலையை நீங்கள் கவனிக்கலாம். பணியிடத்தில் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரபலமான நபர்

கும்பம்:

ஆபத்தான சூழல்களில் தனித்து விடப்படுவோம் என்ற அச்சம் உங்களுக்கு வரக் கூடாது. நேரம் என்பது மாறிக் கொண்டே இருக்கும். உங்கள் கடந்தகால தவறுகளை பரிசீலனை செய்து திருத்திக் கொள்ளுங்கள். நண்பர்களுடனான சந்திப்பு புத்துணர்ச்சியை தரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய துணி

மீனம்:

உங்களுக்கான திருமண வாய்ப்புகள் உச்சத்தில் இருக்கின்றன. நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் வரன்களில் உங்களுக்கு பிடித்தமான ஒருவரை கைகாட்ட உள்ளீர்கள். உங்களுக்கு நெருக்கமான நபர் பொறாமை கொள்ளக் கூடும். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

top videos

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மரம்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News