மேஷம்:
இன்று உங்களிடம் யாராவது உதவி கேட்டால் அதை செய்வதா, வேண்டாமா என யோசித்து முடிவெடுங்கள். சமீப காலங்களில் தொடர்ச்சியாக நீங்கள் முயற்சி செய்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று நிலைமை மாற வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தெருவிளக்கு
ரிஷபம்:
உங்களுக்கு தெரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தேவைப்படும் போது உங்களுக்கு உதவுபவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே உங்கள் சொந்த திறனில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு லாபகரமான சலுகை இன்று உங்களுக்கு கிடைக்க கூடும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் சைன்
மிதுனம்:
இன்று உங்களது வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது, அது சில மோசமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். எனவே பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிங்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள், இப்போது பலன்களை தரும். உங்கள் முன்னேற்றத்தை பிறர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேரை
கடகம்:
நீங்கள் இன்று எளிமையாக இருப்பது உண்மையில் உங்களுக்கு உதவக்கூடும். தேவையற்ற சிக்கல்கள் உங்களை தேடி வரலாம், அதனை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கவலை தரக்கூடிய உடல்நலப் பிரச்சினை இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக காணாமல் ஒரு பழைய நண்பர் மீண்டும் இன்று உங்கள் வாழ்வில் வரலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வைரம்
சிம்மம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவளிக்காமல் போகலாம். உணர்ச்சி ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ இப்போது அதிக ரிஸ்க்கை நீங்கள் எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சால்ட் லேம்ப்
கன்னி:
நீங்கள் உள்ளுக்குள் சமநிலையாக இருப்பதை போல உணரலாம், எனினும் சில கவலைகள் நீடிக்கலாம். குறிப்பாக பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் உள்ளன. வெளியில் சென்றால் உங்கள் உடமைகளை கவனித்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - வேப்ப மரம்
துலாம்:
உங்களால் முடிவதை அதிகமாகச் சாதிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் இன்று உங்களை சோர்வடையச் செய்யலாம். எனவே நீங்கள் புத்துணர்ச்சி பெற உங்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிக்கான் மோல்ட்
விருச்சிகம்:
உங்களது பணம் சம்பாதிப்பதற்கான உங்கள் முதன்மை நோக்கம் இன்று வெற்றிகரமாக நிறைவேறலாம். உங்கள் பொதுப் பேச்சு திறன் இன்று சோதனைக்கு உள்ளாகலாம். வெளியில் இருந்து உங்களுக்கு ஆதரவு கீடைக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் பிளான்ட்
தனுசு:
ஒரு முக்கிய விஷயத்தில் உங்களது கருத்து பரிசீலிக்கப்படலாம். பணியிடத்தில் உங்கள் நிலை இன்று அங்கீகரிக்கப்படும். உங்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒருவரிடமிருந்து நீங்கள் ஆச்சரியமான பரிசை இன்று பெறலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்
மகரம்:
நீங்கள் பிறரிடம் தெரிவிக்கும் ஒரு சிறிய ஆட்சேபனை அல்லது எதிர்ப்பு தீவிர விவாதமாக மாறக்கூடும். எனவே மோதல்களை தவிர்க்கவும். எந்தவொரு தனிப்பட்ட முயற்சியையும் விட, குழுப்பணி உங்களுக்கு அதிகம் பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா கொத்து
கும்பம்:
இன்று நீங்கள் உங்கள் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் காரணமாக நிம்மதி பெருமூச்சு விடலாம். இன்று பண விஷயங்களில் விரைவான இயக்கத்தை காண்பீர்கள். உங்கள் திறன்களை மேம்படுத்த நீங்கள் முயற்சி மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாட்ச்
மீனம்:
இன்று உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதில் மிகவும் யதார்த்தமாக செயல்பட வேண்டும். உங்களது குடும்ப உறுப்பினர்களின் அறிவுரைகள் இன்று உங்களுக்கு பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்டன் செயின்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News