முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 28) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 28) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  உங்களுக்கு மனக்குழப்பம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதற்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டும். புத்துணர்ச்சியை உணருவதற்கு சௌகரியமான இடத்தை முதலில் கண்டறிய வேண்டும். புதிய தொடக்கத்தின் மூலமாக குதூகலம் பிறக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - லவங்க பட்டை

  ரிஷபம்:

  தற்காலிக உறவுகள் தற்போது முடிவுக்கு வரும். அதை கடந்து செல்ல வேண்டிய தருணம் இதுவாகும். உங்கள் கடந்த கால துயரங்கள் எதுவும் எதிர்கால வாழ்க்கையை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். பயணத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கொட்டகை

  மிதுனம்:

  நிர்வாகத்தில் உள்ள மூத்தவர்களுடன் நீங்கள் நடத்தும் விவாதம் உங்களுக்கு ஆழ்ந்த ஞானத்தை தரும். உங்கள் தனி வாழ்க்கையை பாதிக்கக் கூடிய விஷயங்கள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருப்பீர்கள். சோம்பலான எண்ணம் தினசரி நடவடிக்கைகளை பாதிக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

  கடகம்:

  சவாலான தருணங்களில் நம்பிக்கையுடன் இருந்தால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லலாம். உங்களிடம் காதல் உணர்வுகள் வெளிப்படுத்தப்படும்போது நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். தோராயமான முடிவுகளை எடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஏரி

  சிம்மம்:

  போட்டித் தேர்வுகள் அல்லது நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். இதுநாள் வரையில் உங்களிடம் இருந்த பதற்றமான உணர்வு இனி இருக்காது. வெளியிட உணவுகளை தவிர்க்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படகு

  கன்னி:

  வரக் கூடிய வாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த நீங்கள் விரும்புவீர்கள். புதிய நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்கள். எல்லாமே நல்லபடியாக ஒன்றுகூடி வரும். உங்கள் அனுபவத்திற்கு தகுந்த புதிய வாய்ப்புகள் விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தலைப்பாகை

  துலாம்:

  சிலர் கொடுக்கும் வாக்குறுதியின்படி நடந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், அதை வைத்து நீங்கள் அவர்களை எடைபோட வேண்டாம். உங்களுக்கு ஒத்து வராத விஷயங்களில் வேறு உத்திகளை முயற்சி செய்யவும். பணவரவை இப்போது எதிர்பார்க்கலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமணிக்கல்

  விருச்சிகம்:

  புதிய தொழில் ஒன்றை தொடங்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவீர்கள். சர்வதேச அளவிலான செய்திகள் உங்களை வந்து சேரும். பழைய நண்பர் உங்களுக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்துவார்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிப்பி

  தனுசு:

  உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் மூலமாக மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண ஏற்பாடுகள் பரிசீலனைக்கு வரும். இன்றைய நாளை குதூகலமானதாக மாற்றுவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழம்

  மகரம்:

  புதிய தொழிலில் உங்களை பார்ட்னராக சேர்த்துக் கொள்ள பழைய நண்பர் முன்வருவார். பெரும்பாலும் சாலைப் பயணத்தின்போது இதற்கான திட்டம் செயல்படுத்தப்படும். அரசு அதிகாரிகளுக்கு இப்போது சவால் நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்

  கும்பம்:

  உங்கள் மீது முன்வைக்கப்படும் புகாரை எதிர்த்துப் போராடவும். சிலர் குறித்த உங்கள் நல்லெண்ணம் மாற இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். அதிக செலவினம் செய்யும் பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மல்லிகைப்பூ

  மீனம்:

  உங்களை பாதிக்கும் அடிப்படையான விஷயங்களை நீங்கள் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் மூத்த நபர் ஒருவர் உங்களுக்கு பலமான ஆலோசனையை வழங்குவார். அனைத்து விஷயத்தையும் அனைவருடனும் விவாதிக்க வேண்டாம்.

  top videos

   உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கல்

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News