முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 26) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 26) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்: 

  இந்த நாளில் உங்களுக்கு செலவு ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்களுக்கான சேமிப்பு திட்டத்தை சிறப்பாக அமைத்து கொள்வது உங்களுக்கு கைக்கொடுக்கும். நீங்கள் தீவிரமாக நம்பிக்கொண்டிருந்த ஒரு விஷயம் உங்களுக்கு பாதகமாக முடியலாம். இதனை நேர்மறையான எண்ணத்தோடுஅணுகுவது உங்களுக்கு நல்லது. ஆரோக்கியம் பொறுத்தவரை உங்களுக்கு செரிமானத்தில் பிரச்சனை ஏற்படநிறைய வாய்ப்புள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்: சணல் சாக்கு

  ரிஷபம்:

  நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இது கைகலப்பில் முடியவும் நிறைய வாய்ப்புள்ளது. ஆகவே, கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது. உங்கள் உடன் பிறந்தவருக்கு உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படலாம். அதற்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு ஜேட் செடி

  மிதுனம்:

  நீங்கள் செய்யும் வேலைகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல வேலை செய்யவும். உங்கள் மனதிற்குள் ஏதும் குழப்பங்கள் இருந்தால் அதற்கு தனி கவனம் செலுத்த வேண்டாம். அவ்வாறு செய்வது உங்கள் முன்னேற்றங்களில் தடையை ஏற்படுத்தலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு மீன் தொட்டி

  கடகம்:

  இன்று நீங்கள் பாசிட்டிவாகவும், எனர்ஜடிக்காகவும், சந்தோஷமாகவும் உணர்வீர்கள். உங்களின் இந்த உற்சாகத்தைக் கண்டு உங்களுக்கு ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்பட்டு, அதனை நேரத்திற்குள் முடித்து தரும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால், பலமுறை யோசித்த பிறகு அதில் ஈடுபடவும். ஏனெனில், விஷயங்கள் நீங்கள் நினைத்தபடி முடியாமல் போக வாய்ப்புள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு கழுகு

  சிம்மம்:

  நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு வேலை தொடர்பாக உங்கள் மேலதிகாரிகள் உங்களை கேள்வி கேட்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் ஒரு சில முக்கியமான விஷயங்கள் பற்றி ஆலோசிக்க நினைக்கலாம். உங்கள் பிள்ளை மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தால் அந்த காரியம் சிறப்பாக ஈடேறும். சந்தோஷமாக உங்கள் பிள்ளையை அனுப்பி வையுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு கடிதம்

  கன்னி:

  கவனம் செலுத்துவதில் உங்களுக்கு சிக்கல் இருந்தாலும் முடிந்தவரை அதனை சிறப்பாக செய்ய முயற்சிக்கவும். ஒரு கெட் டுகேதரை திட்டமிடுவதன் மூலமாக உங்கள் அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலைகளில் இருந்து ஓய்வு எடுத்து கொள்ளலாம். உங்கள் காதல் வாழ்க்கையை பொறுத்தவரை, நீங்கள் ஆசைப்பட்ட ஏதோ ஒரு விஷயம் கூடிய விரைவில் நிறைவேறும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு பட்டு துணி

  துலாம்:

  அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய மாற்றம் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உங்கள் கடந்த கால அனுபவத்திற்கு மாறுபட்ட புதிய வேலைகளை செய்ய திட்டமிட்டு இருந்தால் அதனை செய்வதற்கு இதுவே சிறந்த நேரம். உங்களுக்கான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு உங்களுடன் உறுதுணையாக இருப்பார்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பொன்னால் ஆன ஆபரணம்

  விருச்சிகம்:

  புதிய சொத்து வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ நிறைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் பங்கு சந்தையை அடிக்கடி பயன்படுத்தும் ஒரு நபர் என்றால், எதிர்பாராத விதமாக உங்களுக்கு பண வரவு கிடைக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேவையற்ற ஆன்லைன் பணப் பரிமாற்றங்களில் ஈடுபட வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு மஞ்சள் நிற பெட்டி

  தனுசு:

  தற்போது நீங்கள் மனதளவில் சற்று சோர்வாக உணரலாம். உங்கள் மனதிற்கு நெருக்கமான நபர் ஒருவர் உங்களது உணர்வை புரிந்து கொள்ளாமல் போக வாய்ப்புள்ளது. முடிந்தவரை அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்யவும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வாய்ப்பு ஒன்று தாமதம் ஆகலாம். தனியாக சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு வெள்ளை நிற வலை

  மகரம்:

  உடல் நலம் மோசமாக இருந்த உங்கள் குடும்ப உறுப்பினர் தற்போது குணமடைய வாய்ப்புள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு வீட்டில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிப்பது என்றைக்கும் அதற்கான தீர்வாக அமையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு முத்து

  கும்பம்:

  நீங்கள் எதிர்பார்த்த படி ஒரு சில விஷயங்கள் நடக்காமல் போகும்பொழுது அதற்காக மீண்டும் முயற்சி செய்வது குறித்து யோசித்துப் பாருங்கள். உங்களில் சிலர் ஒரு சில நாட்கள் அல்லது நேரத்திற்கு தனிமையை அனுபவிக்க நேரலாம். இந்த மாற்றம் திட்டமிடப்பட்டிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள உங்கள் மனதிற்கு ஒரு சில காலம் ஆகலாம். நீங்கள் கடை முதலாளியாக இருந்தால், உங்களுக்கு பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- உங்கள் பழைய ஃபேவரட்டான கேட்ஜட்

  மீனம்:

  நீங்கள் ஒரு சில விஷயங்களை நிதானமாக செய்தாலும் நிச்சயமாக அதில் வெற்றி பெறுவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பிறர் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் கூட அது குறித்து கவலைப்படாதீர்கள். உங்களுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்து இருந்தால், அந்த வலியை நோக்கி பயணிக்க சற்றும் தயங்க வேண்டாம். உங்களை உற்சாகப்படுத்தும் ஏதோ ஒரு விஷயம் மாலை நேரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

  top videos

   உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு விண்மீன் கூட்டம்

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News