முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 24) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று (ஏப்ரல் 24) உங்கள் ராசியின் பலன் இதோ..

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்: 

நீண்ட காலமாக கிடப்பில் இருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பது நல்லது. அதிக பாதிப்பை தராத தொற்று நோய்கள் அல்லது உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்க்க முயற்சி செய்ய வேண்டும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பசுமையான தோட்டம்

ரிஷபம்: 

இன்றைய நாள் மிகவும் சக்தியோடும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய வேலைகளை துவங்க வாய்ப்புகள் உண்டு. சிலர் உங்களிடம் கடன் கேட்டு வரலாம். முடிந்த அளவு ஆவற்றை நிராகரிப்பது நல்லது. உங்களது சுய முன்னேற்றத்தில் கவனம் தேவை

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – இரண்டு இறகுகள்

மிதுனம்: 

மற்றவர்கள் இன்று உங்களை காயப்படுத்த முயற்சி செய்யலாம். முடிந்த அளவு மன உறுதியுடன் இருப்பது நல்லது. வேலையை செய்து முடித்த சில பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டிய சூழல் உண்டாகலாம். உங்களது நண்பர் ஒருவர் உங்களிடம் உதவிகள் கேட்க வாய்ப்புகள் உண்டு.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – நதிக்கரை

கடகம்: 

பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வீட்டில் செய்த காகிதம்

சிம்மம்: 

எதிர்பாராத விதமாக விருந்தினர்கள் உங்களது வீட்டிற்கு வருகை தரலாம். உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சில நிகழ்ச்சிகள் என்று நடைபெற வாய்ப்புகள் உண்டு. கடன் தொல்லை சரியாகும். உங்களது பணியாளர்களில் யாருக்கேனும் சில பிரச்சனைகள் இருக்கலாம். அவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து தீர்த்து வைப்பது நல்லது.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – முத்துக்கள்

கன்னி: 

இன்றைய சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வாசப்படி

துலாம்: 

அதிகமாக உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. மன வலிமையை அதிகரித்துக் கொள்வது பல்வேறு விதங்களில் நன்மையை தரும். புதிய உணவுகளை முயற்சி செய்து பார்ப்பது நல்லது. உங்களது உடல் நலனில் அதிக அக்கறை தேவை

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சிவப்பு ஸ்டூல்

விருச்சிகம்: 

தேவையற்ற விஷயங்களை நினைத்து மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்பாலினத்தார் ஒருவரினால் மனம் சற்று சஞ்சல பட வாய்ப்புகள் உண்டு. பழைய நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு

உங்கள் மனதிற்கு பிடித்த ஒருவர் நீங்கள் உடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. சிறிய பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – நியான் குறியீடு

மகரம்: 

பழைய நினைவுகளில் இன்று மூழ்கிக் கிடப்பீர்கள். எதிர்காலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. சகோதரர்களிடம் சற்று கவனம் தேவை. புதிய திட்டங்களை வகுக்க ஏற்ற நாள்

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கண்ணாடி பாட்டில்

கும்பம்: 

உங்களது கடுமையான காலங்கள் முடிந்து விட்டது என்பதை நினைவில் கொள்ளவும். காலம் உங்களுக்கு சாதகமாக மாறிக் கொண்டிருக்கிறது. பொறுப்புக்கள் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஆலமரம்

மீனம்: 

உங்களது குடும்பத்திற்கு நீங்கள் தான் முன்மாதிரியாக விளங்குவீர்கள். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை இன்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும்.

top videos

    உங்களது அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பறவைகள்

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News