முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 23, 2023) புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 23, 2023) புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார சிக்கல் முடிவுக்கு வரும். புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒரு நபரை கவரும் விதமாக நீங்கள் நடந்து கொள்வீர்கள். உங்களுக்குள் நேர்மறையான எண்ணம் மற்றும் தன்னம்பிக்கை உருவாகும். நீங்கள் திட்டமிட்ட பயணம் தள்ளி போகலாம். கடினமான வேலைகளை எளிய அணுகுமுறை மூலமாக செய்து முடிப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முத்து

ரிஷபம்:

நீண்ட நாட்களாக இதுவா அதுவா என்று உங்களுக்குள் இருந்த குழப்பம் முடிவுக்கு வரும் நாள். நீங்கள் எதிர்ப்பார்த்த பதில் உங்கள் அருகிலேயே இருக்கலாம். வேலை சம்பந்தமாக பிறருடன் தொடர்பு கொள்ளும் பொழுது தெளிவாக பேசவும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருக்கும் வேலையை ஒரு பெண்ணின் உதவியைக் கொண்டு செய்து முடிப்பீர்கள். பிறரிடம் அதிகம் பேசாத உங்களது சுபாவம் குறித்த தேவையற்ற அனுமானங்கள் எழலாம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த உங்கள் சொந்த வேலையை செய்து முடிக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய ரிப்பன்

மிதுனம்:

புதிய வீடு வாங்குதல் அல்லது வீட்டை புதுப்பித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடலாம். உங்கள் மூத்த பிள்ளை கல்வி பயிலும் நிறுவனத்தில் ஏதேனும் சிக்கல் எழலாம். எளிய வேலைகள் கூட ஆரம்பத்தில் உங்களுக்கு கடினமானதாக தோன்றலாம். ஆனால் உங்கள் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், விஷயங்களை மாற்றி யோசித்து வேலைகளை செய்து முடியுங்கள். உங்களது பழைய பொழுதுபோக்கு மீண்டும் நினைவுக்கு வரலாம். வரப்போகும் நாட்களை அதனை செய்து கழிப்பீர்கள். திடீர் பணப்புழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பளிச்சென்று தோன்றும் ஒரு சாய்வு இருக்கை

கடகம்:

சிக்கல்கள் மேலாண்மை குறித்த உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேவையற்ற குழப்பங்கள் எழலாம். நீங்கள் திரைப்பட தயாரிப்பு துறையிலிருந்தால், உங்களுடைய கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் இது சிறந்த நாளாக அமையும். அங்கீகாரமும் பாராட்டுக்களும் வந்து சேரும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மாணிக்கக்கல்

சிம்மம்:

மனதளவில் உங்களை எவரும் தற்போது எளிதில் காயப்படுத்தி விட முடியும். சிறிய திருட்டு அல்லது இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு தேவையான ஆதரவையும், அரவணைப்பையும் தருவார். எல்லா விஷயங்களிலும் ரூல்ஸ் பேசுவதை குறைக்கவும். ஒரு சில சமயங்களில் அவற்றை மீறி செயல்பட வேண்டி உள்ளது. பர்சனலாக உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர் மீது உங்களுக்கு ஊக்கமளிக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க சங்கிலி

கன்னி:

முடிந்தவரை ஈகோவை விட்டு விட முயற்சி செய்யுங்கள். ஒரு குழுவோடு சேர்ந்து உங்களால் செயல்பட முடியாமல் போகும்போது, பணியில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். விஷயங்கள் உங்களுக்கு ஏற்றவாறு சாத்தியமாக அமையும். தொழிலில் முதலீடு செய்யும் பொழுது கவனமாக இருக்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - யாரேனும் ஒரு பிரபலம்

துலாம்:

அதிகப்படியான லாபமும் உதவிகளும் வந்து குவியும் நேரம். செல்வத்துடன் சேர்ந்து குழப்பமும் வந்து சேரலாம். மக்களுடன் புதிய தொடர்பை உண்டாக்கி கொள்வது உங்களுக்கு சாதகமாக அமையலாம். உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து தூக்கி எறிந்து விடுவீர்கள். உங்கள் பழைய நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

விருச்சிகம்:

நீங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த ஒரு நபர் உங்களுக்கு உதவி புரியாமல் போகலாம். உள்நோக்கத்துடன் உங்களை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு சிலர் செயல்படலாம். ஒரு சில சம்பவங்களுக்கு பிறகு உங்கள் தன்னம்பிக்கையை இழக்க நேர்ந்தால், அதனை மீண்டும் பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். நீண்ட காலமாக நீங்கள் ஆசைப்பட்டு கொண்டிருந்த ஒரு விஷயம் தனித்துவமான அனுபவத்துடன் உங்களுக்கு கிடைக்கலாம். யாருக்கேனும் சர்ப்ரைஸ் ஆக பரிசு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தது, உங்களுக்கே சர்ப்ரைசாக முடியலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு படிகக்கல்

தனுசு:

ஊக்கம் மூலமாக புதிய ஒழுங்குமுறை மற்றும் சுய கட்டுப்பாட்டை பெறுவீர்கள். உங்களை அடுத்த நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் நண்பர்களுடன் வெளியூர் செல்ல திட்டமிட்டு இருந்தால் அத்திட்டம் நிறைவேற வாய்ப்புள்ளது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் பல்ப்

மகரம்:

ஆரம்பத்தில் சிக்கலாக தோன்றிய ஒரு பிரச்சனைக்கு வெகுவிரைவாக தீர்வை காண்பீர்கள். தற்போது நீங்கள் செய்து வரும் விஷயங்களை வைத்துக்கொண்டு வெளியாட்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனை விரைவில் கடந்து வந்து விடுவீர்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு செயல்படுத்த முடியாமல் போன திட்டத்தை தற்போது நிறைவேற்றுவீர்கள். நீங்கள் கல்வி கற்பிக்கும் நபராக இருந்தால், வெற்றி உங்களைத் தேடி வரும். எதிர்காலத்தில் செய்ய போகும்போது ஒரு முதலீட்டிற்கு தற்போது விதை விதைக்க வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் நிறம் மெழுகுவர்த்தி

கும்பம்:

குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்படலாம். வேலையில் புதிய பாலிசி காரணமாக ஒரு சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்ய வேண்டிய இருக்கலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு சக ஊழியர் உங்களை கண்டு பொறாமை கொள்ளலாம். புதிய தொழில் வாய்ப்பு தேடி வரலாம். எனினும் அதை கவனமாக ஆராய்ந்த பிறகு அதை செயல்படுத்தவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மீன் தொட்டி

மீனம்:

சக ஊழியரிடம் ஏற்பட்ட சிக்கல் வாக்குவாதத்தில் முடிவடையலாம். இது மேலதிகாரி வரை சென்று உங்களுக்கு பிரச்சினையை உண்டாக்கலாம். வெளிநாடுகளில் சென்று படிக்கவும், வேலை செய்யவும் வாய்ப்பு கிடைக்கலாம். பெற்றோருக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். உங்கள் மன அழுத்தத்தை கவனித்துக் கொள்ள உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

top videos

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கருப்பு புள்ளி

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News