முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: மேஷம் முதல் மீனம் வரை.. உங்க ராசிக்கு இன்று (ஏப்ரல் 21, 2023) என்ன பலன்?

தெய்வீக வாக்கு: மேஷம் முதல் மீனம் வரை.. உங்க ராசிக்கு இன்று (ஏப்ரல் 21, 2023) என்ன பலன்?

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

பணியிடத்தில் தொழில்ரீதியாக நீங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த அங்கீகாரத்தை இன்று பெறலாம். வெளியூர்களில் தங்கி இருந்தால் இன்று வீடு திரும்ப திட்டமிடலாம். நீங்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த ட்ரிப் தொடர்பாக இன்று திட்டமிடப்படலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மைல்ஸ்டோன்

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் வசதியாக, சவ்கரியமாக இருப்பதை போல உணரலாம். உங்கள் வாழ்க்கை துணைக்கு இன்று நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படக்கூடும் என்பதால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீலகலர் பாட்டில்

மிதுனம்:

சமீபத்திய ட்ரிப் இன்னும் நீங்கள் பலவற்றை திட்டமிட உங்களை தூண்டலாம். இன்று உங்களுக்கு காத்திருக்கும் புதிய சவால் உங்களை இன்று நாள் முழுவதும் பிஸியாக வைத்திருக்கலாம். உங்களது பழைய நண்பர்களை இன்று சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - கலர் பேப்பர்

கடகம்:

நீங்கள் கடந்த காலத்தில் செய்த செயல்களுக்கான பலன்களை இன்று பெறுவீர்கள். உங்கள் வேலையில் முழுமை பெற, சிறிது நேரம் வேலைகளை தொடங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் முக்கிய விஷயங்களை இன்று பேச நல்ல நாள்.

அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்

சிம்மம்:

தொண்டு செய்ய அல்லது நன்கொடை அளிப்பதற்கான வாய்ப்பு உங்கள் வழியில் இன்று வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு செய்திருந்தால், அதை பேசி தீர்த்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கு பிடித்த ஸ்பெஷலான ஒன்றை செய்ய திட்டமிடலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இன்டோர் ஹாபி

கன்னி:

உங்கள் அணுகுமுறையால் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் பாதிக்கப்படலாம். புதிய வேலை அட்டவணையை உருவாக்க இது ஒரு நல்ல நாள். பிரக்டிக்கலாக நீங்கள் இருக்க நினைப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழக்கூடை

துலாம்:

நீண்ட நாட்களாக நீங்கள் உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்த விஷயங்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும். நீங்கள் தவிர்த்து வந்த ஒருவரை இன்று சந்திக்க வேண்டும் என நினைப்பீர்கள். ஒரு சிறிய சரும ஒவ்வாமை உங்களுக்கு எரிச்சலூட்டலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மென்மையான துணி

விருச்சிகம்:

உங்களை பற்றி பரவி வரும் சில வதந்திகள் பற்றி நம்பகமான ஒருவர் மூலம் சொல்ல நீங்கள் கேட்கலாம். சில பரபரப்பான கடைசி நிமிட முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு புதிய திட்டத்தில் இன்று முதலீடு செய்ய ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட அடையாளம் - 2 சிட்டுக்குருவிகள்

தனுசு:

பழைய தொடர்புகளை பற்றி நீங்கள் யோசித்து கொண்டிருந்தால் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று நீங்கள் புதிய உற்சாகத்தை உணர்வீர்கள். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இன்று முதல் நீங்கள் ஒரு புதிய ஆரோக்கிய வழக்கத்தைத் திட்டமிடலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தக கடை

மகரம்:

ஒவ்வொரு நாளும் புதிதாக தொடங்குவது எல்லோருக்கும் ஒன்றாக இருக்காது. முக்கியமான ஒன்றை மறுபரிசீலனை செய்யும் மனநிலையில் நீங்கள் இருக்கலாம். உங்களது வழக்கமான கண்ணோட்டங்களை மாற்ற வேண்டிய நாள் இது.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இறகு

கும்பம்:

நீங்கள் இன்று நிதானமாக இருப்பது போல் உணர்வீர்கள், மேலும் ஆரோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட இன்று ஒரு நல்ல நாள். இன்று யாரிடமும் கடன் கேட்பது நல்லதல்ல. உணவுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மூங்கில் செடி

மீனம்:

இன்று நீங்கள் ஒரு முக்கியமான பதிலுக்காக காத்திருந்தால் அதில் உங்களுக்கு ஏமாற்றம் அல்லது விரக்தியே மிஞ்சும். நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். எதிர்பாராத தொலைபேசி அழைப்பு உங்கள் நாளை பிரகாசமாக்கக்கூடும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ட்ராஃபிக் சிக்னல்

First published:

Tags: Oracle Speaks, Tamil News