முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 19, 2023) பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 19, 2023) பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  முடிவுகளை எடுப்பதில் எப்பொழுதும் பிறரை சார்ந்து இருக்க வேண்டாம். உங்கள் உள்மனது என்ன சொல்கிறது என்பதை ஒரு முறை கேட்டு அதற்கேற்ப முடிவுகள் எடுக்கவும். உங்கள் அருமை புரியாமல் உங்களை விட்டு சென்ற ஒரு விஷயத்தை நினைத்து குற்ற உணர்ச்சி அடையத் தேவை இல்லை. வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்ட்ராபெர்ரி பழங்கள்

  ரிஷபம்:

  உங்களை மனதளவில் வலிமையாக்கக்கூடிய நீண்ட நாள் கனவு கைக்கூடும். எல்லா விஷயங்களையும் மிகைப்படுத்தி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உண்டு. அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தேவைகளை குறைத்துகொள்வது சீரான அணுகுமுறைக்கு உதவும்

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜெல்

  மிதுனம்:

  மற்றவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் குறித்து நீங்களே பெருமை கொள்வீர்கள். இது பிறரின் மரியாதை மற்றும் நம்பிக்கையை உங்களுக்கு சம்பாதித்து கொடுக்கும். பணியில் நேர்மறையான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் பெற்றோர் உங்களிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோஜா செடி

  கடகம்:

  மோசமான நாட்களை கடந்து வந்த உங்களுக்கு இந்நாள் இனிமையான நாளாக அமையும். கட்டாயத்தின் பேரில் பங்கு பெற்ற ஒரு விஷயத்தில் உங்கள் திறன் காரணமாக அடுத்த நிலைக்கு செல்வீர்கள். உங்கள் துணை அவர் மனதில் நினைக்கும் அனைத்து விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆகையால் அவரின் மனதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி டம்ளர்

  சிம்மம்:

  பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனதோடு உங்களது உதவிக் கரங்களை நீட்டுவீர்கள். ஏற்கனவே ஒரு விஷயத்திற்கு சம்மதம் தெரிவித்த உங்களது பெற்றோர் தற்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம். விரைவான யோசனைகள் மற்றும் படிப்படியான முன்னேற்றங்களுடன் விஷயங்களை சாதிப்பீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிந்த வானம்

  கன்னி:

  சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளாமல் நீண்ட நாட்களாக அமைதியாக இருப்பது உங்களைப் பற்றி பிறர் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். போதுமான முயற்சிகளை செய்து முன்னேற வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்களை நிறைவு செய்ய கூடுதல் ஆதரவு பெறுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பூந்தொட்டி

  துலாம்:

  குடும்பத்தில் விசேஷங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பணியில் நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்பு உங்களிடம் வந்து சேரும். உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் புதுவரவு உண்டாக வாய்ப்புள்ளது. லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் சாமான்

  விருச்சிகம்:

  ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம். ஆனால் அதிலிருந்து விரைவாக மீண்டும் வர அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் இருந்து தேர்வு செய்வதில் அதிக மும்மரம் காட்டாதீர்கள். நேரம் அனைத்தையும் சாத்தியமாக்கும். உடல் சார்ந்த செயல்பாட்டில் ஈடுபடுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பூங்கொத்து

  தனுசு:

  இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும் நாள். நீண்ட நாட்களாக நிறைவேற்றாத பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர் உங்களுக்கு நல்ல ஒரு ஆலோசனையை வழங்கலாம். வேலை மற்றும் வாழ்க்கையில் ஒரு சமநிலையை உருவாக்குவதன் மூலம் அன்றைய தினத்தை எளிதாக கடந்து செல்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செய்தித்தாள் கட்டு

  மகரம்:

  சிறு தொலைவு பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்கள் மேல் அதிகாரி உங்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க வாய்ப்புள்ளது. அதனை தற்போது நீங்கள் மறுக்கலாம். விடுமுறை திட்டங்களை பரிந்துரைக்கும்படி உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் எதிர்பார்க்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் நிற நீலமணிக்கல்

  கும்பம்:

  புதிதாக நீங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கூடுதல் முயற்சியும், பொறுமையும் தேவைப்படும். நீங்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் வாழ்க்கை முறையை உங்கள் பிள்ளை அப்படியே பின்பற்றக்கூடும். மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பது நல்லது. இரண்டு மனதாக இருக்க வேண்டாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வால்நட்

  மீனம்:

  ஒரு சில அவசர வேலை காரணமாக உங்களது நாளில் பாதியை செலவிட நேரலாம். கிட்டத்தட்ட மறந்து போன ஒரு நபர் உங்களை போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். மாலை நேரம் பணியிடத்தில் நண்பர்களுடன் சிறப்பாக அமையலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

  top videos

   உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாத்து

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News