முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 15, 2023) வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு வரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 15, 2023) வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு வரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  முக்கியமான விஷயங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் விட்டுவிடுங்கள். தேவையில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என முயற்சிக்காதீர்கள். திட்டமிட்ட பணிகள் உங்களை திறம்பட செய்து முடிக்க உதவியாக இருக்கும். குறுகிய பயணத்தை உங்களது வாழ்க்கையில் இன்று நீங்கள் மேற்கொள்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விமானம்

  ரிஷபம் :

  உறவினர்களைப் பற்றி புரிதல்கள் உண்டாகும். ஒரு சிறிய பணி இப்போது உங்களது வாழ்க்கையை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும். இது பெரிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். நிதானமாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றியைப் பெறமுடியும். வார இறுதியில் பணவரவு கிடைக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆலை

  மிதுனம் :

  இன்றைக்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றிப்பாதைக்கு உங்களை இட்டுச்செல்லும் சர்வதேச வாய்ப்பு அல்லது வாடிக்கையாளர் நல்ல செய்தியைக் கொண்டு வரலாம். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பணிக்கு ஒப்புதல் கிடைக்கும் நல்ல நாள் இன்று. ஃபிட்னஸ் விழிப்பூட்டல் இருக்கலாம். அதை நீங்கள் விரைவில் தீர்க்க வேண்டியிருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இரும்பு கோபுரம்

  கடகம்:

  இன்றைக்கு நிதானத்துடன் இருக்கவும். வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு வரக்கூடும். வாழ்க்கையில் சுவாரஸ்சியமான ஒருவரை சந்திக்கும் சூழல் உண்டாகும். இருந்தப்போதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எச்சரிக்கையுடன் இருக்கவும். இல்லையென்றால் விலைமதிப்பற்ற ஒன்றை வாழ்க்கையில் இழக்க நேரிடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குஷன்

  சிம்மம் :

  உங்களது வாழ்க்கையில் பல நாள்களாக தடைப்பட்ட வேலைகள் மீண்டும் உத்வேகத்தை அடையும். நீங்கள் வழக்கத்தை விட இன்னும் கொஞ்சம் வெற்றிக்காக முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் நாளை மாற்றுவதற்கு ஒரு தடைபட்ட பணம் வர வாய்ப்புள்ளது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கோடுகள்

  கன்னி:

  எந்த காரியத்தையும் நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். குறிப்பாக உள்நாட்டு முன்னணியில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உங்களது கவனம் தேவைப்படலாம். நெருங்கிய நண்பரிடமிருந்து சாதகமான செய்தியைப் பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பயணம்

  துலாம் :

  இன்றைக்கு நீங்கள் மேற்கொள்ளும் முதலீடுகளில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். மனக்கவலையும் ஏற்படும் என்பதால் எதையும் நிதானத்துடன் செய்யவும். பணியில் இருக்கும் உங்களது குழு உறுப்பினர்கள் உங்களது எதிர்பார்ப்புகளுக்கு மேல் செயல்பட வாய்ப்புள்ளது. வீட்டில் யாராவது உங்களிடம் ஆலோசனை கேட்டால், நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கூறும் அறிவுரைகள் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு முயல்

  விருச்சிகம்:

  வேலை நிமிர்த்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இன்றைக்கு ஏற்படும். இன்று வீட்டில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஒரு வெளியூர் பயணமானது வழக்கத்திலிருந்து மிகவும் தேவையான ஓய்வு தரலாம். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் மனநிலையை பெறுவீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கால்பந்து போட்டி

  தனுசு:

  வாழ்க்கையில் இன்றைக்கு கிடைக்கும் ஒரு புதிய நபரின் அறிமுகம் உங்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்லும். உங்களின் திறமைகளால் பல செயல்பாடுகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். ஒரு ஆன்லைன் கோர்ஸ் அல்லது டுடோரியலை முயற்சிப்பது உங்களுக்கு சுவாரஸ்யமாகத் தோன்றலாம். சில நம்பிக்கை அலை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உந்துதலாக வைத்திருக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சோலார் பேனல்

  மகரம் :

  வாழ்க்கையில் உங்களை எரிச்சலூட்டும் நபர்களிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும் என்பதை உங்களின் வாழ்க்கையில் குறிக்கோளாக வைத்திருக்கவும். இதனால் பல பிரச்சனைகளைத் தீர்ந்து வைக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உங்களை தொந்தரவு செய்யக்கூடிய சில பழிவாங்கல்கள் இருக்கலாம். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ? அதை மட்டும் உங்களது வாழ்க்கையில் மேற்கொள்வது நல்லது.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மலர் குவளை

  கும்பம்:

  உங்கள் தயாரிப்புகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம், அது உங்களை சற்று எரிச்சலடையச் செய்யலாம். உங்கள் சக்திக்கு மேலான ஒன்றை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம். உங்கள் தொழில்துறையைச் சேர்ந்த மூத்தவர் உங்களுக்கு நினைவில் கொள்ளத் தகுந்த ஆலோசனையை வழங்கலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

  மீனம்:

  இந்த ராசிக்காரர்களுக்கு காதல் உறவு வலுப்படும் நாளாக அமையும். ஒரு புதிய முன்னோக்கு மற்றும் வழிகாட்டுதல்கள் உங்களின் வேலையை விரிவுப்படுத்த வேண்டும். தொழில் வாழ்க்கையில் நல்ல பார்ட்னரை நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் சூழல் ஏற்படும்.

  top videos

   உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மண்பாண்டம்

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News