மேஷம்:
ஆன்மீக சம்பந்தமாக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டு. நீண்ட பயணங்கள் செய்கின்ற வாய்ப்புகள் உண்டு. சிறிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டிய சூழல் உண்டாக்கலாம். குழந்தைகளின் நடத்தையால் எரிச்சல் ஏற்படலாம். முடிந்த அளவு அமைதியுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்:
உங்கள் உள்ளுணர்வை கேட்டு அதன்படி செயல்படுவது நேர்காணல் மற்றும் இதர விஷயங்களில் வெற்றியை கொடுக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். அலுவலகத்தை பொருத்தவரை சிறப்பாக செயல்படுவீர்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – உப்பு விளக்கு
மிதுனம்:
புதிய மாற்றங்களுக்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீண்ட நாட்களாக தீவிரமாக முயற்சி செய்த விஷயங்கள் நன்மையை தரும். தொழில் செய்பவர்களுக்கு புதிதாக கடன் வாங்க வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சீட்டு கட்டு
கடகம்:
புதிய முயற்சிகள் செய்து அலுவலகத்தை விரிவுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக இருந்து வந்து கெட்ட நேரங்களில் வாழ்வில் நன்மை பெருகும். பெற்றோர்களிடமிருந்து பிரச்சினைகள் சரியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கயிற்றுபாதை
சிம்மம்:
வாழ்வில் புதிய விஷயங்களை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது சில நேரங்களில் இவை குழப்பத்திற்கும் காரணமாகலாம் எனவே அதிக கவனம் தேவை. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும். பணியாளர்கள் சம்பந்தமாக புதிய பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – தங்க கதவு
கன்னி:
உங்களை சுற்றி இருந்தால் மனிதர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். அலுவலகத்தை பொருத்தவரை உயர் அதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய வாய்ப்புகள் இருந்தாலும் தேவையற்ற ரிஸ்க் எடுப்பது தவிர்ப்பது நல்லது. உள்ளுணர்வை கேட்டு செயல்பட வேண்டும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வெள்ளி வையர்
துலாம்:
உங்கள் உள்ளுணர்வை கேட்டு அதன்படி முடிவுகளை எடுப்பது நன்மையை கொடுக்கும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத தடைகள் உண்டானாலும் அவற்றின் மூலம் நன்மையே உண்டாகும். அனைத்து விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தவிர்ப்பது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கண்ணாடி டம்ளர்.
விருச்சிகம்:
உங்களது மனநிலையில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. யோகாசனம் தியானம் போன்றவற்றையும் முயற்சித்து பார்க்கலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – நீல அவெஞ்சுரின்
தனுசு:
பிரச்சனைகளின் ஆரம்பத்திலேயே அவற்றைக் கிள்ளி எடுப்பது நல்லது. மனம் சொல்வதைக் கேட்டு செயல்படுவது வெற்றியை கொடுக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பெரியோர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஏரி
மகரம்:
உங்களது நடத்தையில் கவனம் தேவை. முடிந்தவரை பணிவுடன் இருப்பது நன்மையை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் உண்டாகும். சில விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் இல்லாமல் நடக்கலாம் ஆனால் அவை அனைத்தும் நன்மைக்கே என்பதை உணர வேண்டும். பணம் சம்பாத்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வெள்ளை மெழுகு வத்தி
கும்பம்:
சுறுசுறுப்புடன் செயல்படுவது நல்லது. உங்களை சுற்றியுள்ள மனிதர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். உள்ளுணர்வை கேட்டு முடிவெடுப்பது நன்மையை கொடுக்கும். புதிய வேலைவாய்ப்புகளுக்கு மிகவும் ஏற்ற நாள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – கருப்பு டார்மலின்
மீனம்:
மற்றவர்களை பற்றி அதிகம் எடை போடுவதை தவிர்ப்பது நல்லது. உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவது சிறந்தது. மற்றவர்களின் வாழ்க்கை விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் புதிய வசதிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - சிவப்பு ஸ்கார்ஃப்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News