முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 05, 2023) வேலையில் மாற்றம் ஏற்படலாம்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 05, 2023) வேலையில் மாற்றம் ஏற்படலாம்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்: 

    ஏதேனும் ஒப்பந்தத்தை முடிக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், அதற்கான சரியான உத்தியை உங்களுக்கு கிடைக்கும். மன அழுத்தத்தை குறைக்க, பல விதமான செயல்களில் ஈடுபடுங்கள். பொருளாதார ரீதியான பிரச்சனைகள் சீராகும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி பாட்டில்

    ரிஷபம்: 

    நீங்கள் நம்பும் ஒருவரைப் பற்றிய உண்மையை நீங்கள் தற்செயலாகக் கண்டறிவீர்கள். நெருங்கிய நண்பர் உங்களுக்காக ஒரு ஆச்சரியமான விஷயத்தைத் திட்டமிடலாம். பணியிடத்தில் இப்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், பின்னாளில் அது பெரிதாக வெடிக்கலாம். எனவே அதைத் தவிர்க்கவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க நாணயம்

    மிதுனம்: 

    உங்களை தொந்தரவு செய்த தற்காலிக காலம் இப்போது முடிவுக்கு வருகிறது. நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்திருந்தால், தவிர்க்கவும், இப்போது வீழ்ச்சியை எதிர்கொள்வீர்கள். யாரோ ஒருவர் நீங்கள் என்ன செய்கிறீர்கள், பேசுகிறீர்கள் என்பதை உற்று கவனித்து வருகிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விண்மீன்

    கடகம்: 

    நீங்கள் உண்மையான முயற்சியில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வேலையை மதிப்பீடு செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை வைத்திருப்பார். உங்களுக்கு கெடுதல் செய்த அனைவரும் அவரவர் கர்மாவால் தாக்கப்படுவார்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பெரிய மைதானம்

    சிம்மம்: 

    கடந்த காலத்தில் மேற்கொண்ட சின்ன சின்ன முயற்சிகள், இப்போது பெரிய பலனைத் தரும். நீங்கள் யார் மீதாவது விருப்பம் கொண்டிருந்தால், அதை உங்கள் உள்ளுணர்வு உறுதி செய்தால், நீங்கள் நம்பிக்கை குறையாமல் நல்ல முடிவை எடுக்கலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டூல் பாக்ஸ்

    கன்னி: 

    உங்கள் அச்சங்களை அடக்கிக் கொள்வதை நிறுத்த வேண்டும், இப்போது அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. நீங்கள் எதையாவது தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தால், அந்த தகவலை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிக்மென்ட் நிறைந்த மேற்பரப்பு

    துலாம்: 

    உங்கள் மனதில் தீர்க்கப்படாத பிரச்சினை இருந்தால், அதை முயற்சி செய்து தீர்க்க முடியும். இது தேவையற்ற மன அழுத்தத்தையும் கவனச்சிதறலையும் நீக்கும். உங்கள் உணர்வுகளுக்கு உண்மையாக இருக்கும் நேரம் இது.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காபி குவளை

    விருச்சிகம்: 

    கடந்த காலத்தில் நீங்கள் செய்த காரியத்திற்கு நல்ல வெகுமதியை எதிர்பார்க்கலாம். ஆனால், தற்காலிகமாக அதை நீங்கள் மறப்பது நல்லது. உங்களுக்காக ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. செல்வாக்கு மிக்க நபர்களுக்கு மத்தியில் நீங்கள் கவனம் ஈர்ப்பீர்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு இசைக்கருவி

    தனுசு: 

    புதிய உத்வேகம் ஒன்று, இது வரை நீங்கள் செய்யாத அசாதாரணமான விஷயம் ஒன்றைச் செய்வதற்காக உங்களைத் தூண்டலாம். நீங்கள் அதையே மீண்டும் செய்ய வேண்டியிருக்கலாம். உடல்நிலை மீது கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாசு

    மகரம்: 

    பொறாமையின் அறிகுறிகள் தோன்றினால், அதனை புறக்கணிக்காதீர்கள். உங்கள் வேலையை வேறு யாரேனும் தட்டிப்பறிக்கலாம். நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும். பரம்பரைப் பிரச்சினைக்கு இப்போது தீர்வு கிடைக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சோலார் பேனல்

    கும்பம்: 

    எளிமையான அணுகுமுறை நல்ல முடிவுகளைத் தரும். உங்கள் முதுகுக்குப் பின்னால் யாராவது உங்களைப் பற்றி புகார் செய்தால். நீங்கள் அந்த விஷயத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும். உங்கள் மீது சில குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படலாம், எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு உடன்பிறந்த சகோதரிக்கு உணர்வு பூர்வமாக ஆதரவு தேவைப்படுகிறது.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டு தாவணி

    மீனம்: 

    இது மாற்றத்திற்கான பருவம், வேலையில் மாற்றம் ஏற்படலாம் அல்லது அது நீங்களே விரும்பும் மாற்றமாக நடகலாம்; எதுவாக இருந்தாலும் அது நன்மைக்காகவே இருக்கும். பொறுமையாக இருக்கலாம்.

    top videos

      அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பசை

      First published:

      Tags: Oracle Speaks, Tamil News