முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 03, 2023) வேலையில் முன்னேற்றம் காணப்படும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 03, 2023) வேலையில் முன்னேற்றம் காணப்படும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  தற்போதைய மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒன்றும் இல்லாத விஷயத்தை ஏதோ பெரும் பிரச்சினை போல உங்கள் மனம் நினைத்துக் கொள்ளும். ஆச்சரியம் தரத் தகுந்த புதிய முடிவு உங்கள் மனதை இலகுவாக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குறியீடுகள்

  ரிஷபம்:

  தக்க சமயத்தில் திட்டமிடுவது உங்களுக்கான பொழுதை சுமூகமாக மாற்றும். மற்றவர்கள் மீது நம்பிக்கை கொள்வது கடினமானதாக இருக்கும். உங்கள் குழுவினருடன் சிறப்பாக உரையாடுவதற்கு புதியதொரு சிந்தனை தோன்றும். அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கடிகாரம்

  மிதுனம்:

  உங்கள் முடிவுகள் எப்படியானது என்பதை நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், மாய பிம்பத்தை தாண்டிலும் எதார்த்தமான விஷயங்கள் பல இருக்கின்றன. உங்கள் பணி நேரம் மாற்றம் அடைய இருக்கிறது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விண்மீன் கூட்டம்

  கடகம்:

  பழைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது குறித்து சிந்திப்பீர்கள். வீட்டில் சில பிரச்சினைகள் உருவாகலாம். அது உங்கள் மனதை பாதிக்கும். பிற நபர்களின் மனதை புரிந்து கொள்ள இன்னும் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க நாணயம்

  சிம்மம்:

  பொருளாதார விவகாரங்கள் சில காலத்திற்கு முதன்மையானதாக இருக்கும். அளவு கடந்த செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். புதிய வருமானத்திற்கான பாதை திறக்க இருக்கிறது. உங்கள் ஒட்டுமொத்த உடல்நலன் குறித்து கவனம் கொள்ளவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கம்பி

  கன்னி:

  உங்கள் மனம் இப்போது அமைதியின்றி பதற்றம் அடைந்து கொண்டிருக்கும். மனதை அமைதிப்படுத்த கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் விரைவில் அதை செய்து முடிப்பீர்கள். உடல் நலன் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அலாரம் கடிகாரம்

  துலாம்:

  நீங்கள் தொழிலதிபர் என்றால் ஏற்கனவே நீங்கள் அலட்சியமாக கருதிய சட்டப் பிரச்சினைகள் தற்போது மீண்டும் சிக்கலை தர தொடங்கும். உங்கள் ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து மேற்கொள்ளவும். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு தரும் நபரை சந்திப்பீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழங்கள்

  விருச்சிகம்:

  நாட்கள் விறுவிறுப்பாக கடந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களுக்கான ஓய்வு தேவைப்படுகிறது. ஆகவே, எங்காவது சுற்றுலா செல்ல திட்டமிடலாம். உங்களிடம் தகவல் பெற நினைத்து சிலர் நெருங்கி பழகி வருகின்றனர்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய கார்

  தனுசு:

  இன்றைய பொழுது சற்று மந்தமானதாக இருக்கும். ஆனால், மாலையில் விறுவிறுப்பாக மாறும். சமூக குழுக்கள் மூலமாக உங்கள் நண்பர்களை மீண்டும் தொடர்பு கொள்வீர்கள். வங்கி பணிகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய நாவல்

  மகரம்:

  பழைய நண்பர்கள் உங்களை சந்திக்கவும், மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் காத்திருக்கின்றனர். உங்கள் நலனுக்கான அறிவுரைகளை சொல்ல பெற்றோர் விரும்புகின்றனர். இன்றைய நாள் முழுவதும் நீங்கள் சோம்பலாக உணருவீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடினமான சாலை

  கும்பம்:

  நீண்ட காலமாக நீங்கள் காத்திருக்கும் விஷயத்தில் தற்போது முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணிகளை நிறைவு செய்ய தீர்க்கமான முயற்சிகளை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய சூழலில் உங்கள் லட்சிய பயணத்திற்கு பின்னடைவு ஏற்படலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஈர்க்க கூடிய கார் நம்பர்

  மீனம்:

  இன்றைய காலைப் பொழுதில் பணி செய்வதற்கான விருப்பம் இன்றி சோம்பலாக உணருவீர்கள். ஆனால், மதிய வேளையில் சுறுசுறுப்பு அடைவீர்கள். வேர்களை தேடிச் செல்ல நீங்கள் விரும்பும் நிலையில், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

  top videos

   உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மோதிரம்

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News