முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 02, 2023) பண வரவு உண்டு.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 02, 2023) பண வரவு உண்டு.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

ஒட்டுமொத்தமாக உங்களுடைய ஆற்றல் இன்று மேம்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். வீட்டிற்கு புதிய பொருள் வாங்குவதற்கு இப்போது திட்டமிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கார்னெட் கிறிஸ்டல்

ரிஷபம்:

ஏதேனும் காரியங்களை சாதிப்பது என்று ஏற்கனவே உங்கள் மனதை தயார் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் இப்போது அதை செய்து முடிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. உங்கள் குழந்தைகள் உங்களிடம் அதிக நேரம் எதிர்பார்க்கின்றனர்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சொலிடர்

மிதுனம்:

பணவரவு தற்காலிகமாக தடைபடக் கூடும். நீங்கள் வளர்ந்து வரும் தொழில் அதிபர் என்றால் உங்களுக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சட்டப்பூர்வ ஆலோசனைகள் தற்போது உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். உடல் நலன் குறித்து அக்கறை கொள்ளவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீலமணிக் கல்

கடகம்:

வீட்டில் இருந்து உங்களுக்கு கிடைக்கின்ற ஆச்சரியம் ஊக்கம் தருவதாக அமையும். அடுத்த சில நாட்களில் உங்களுக்கான பணிகள் அணிவகுத்து நிற்கும். தக்க சமயத்தில் கிடைக்கின்ற ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய விளக்கு

சிம்மம்:

உங்களுக்கு இன்று நம்பிக்கை அதிகரிக்கும். மற்றும் தெளிவான திசை நோக்கிய சிந்தனை பிறக்கும். சில நாட்கள் முன்பு வரையில் குழப்பத்துடன் இருந்திருப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். உங்கள் பணிகளுக்கு பாராட்டு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உறை

கன்னி:

உங்களுக்கு ஆச்சரியம் தரத் தகுந்த விஷயங்கள் நடக்க இருக்கின்றன. முன் பின் தெரியாத நபர் ஒருவரை சந்திக்க உள்ளீர்கள். அவர் உங்களுக்கு நீண்டகால நண்பராக இருக்கப் போகிறார். ரிலாக்ஸ் அடைவதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் போதிய நேரம் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குவார்ட்ஸ்

துலாம்:

நீண்ட பயணம் செய்ய உள்ளீர்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் மனதில் நிறைய விஷயங்கள் ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரியான முடிவை எடுக்க இயலாது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ப்ளூ கல்

விருச்சிகம்:

சில நாட்கள் உங்கள் மனம் வெறிச்சோடியதை போல இருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் அமையும். இன்றைய தினம் நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பொழுது மந்தமானதாக இருக்கும். கடந்த முதலீடுகளில் கொஞ்சம் நஷ்டம் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சாலட் பவுல்

தனுசு:

சில நபர்களின் அடாவடியான நடவடிக்கை உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். அவர்களை புரிந்து கொள்ளும் முன்பாக உண்மையில் என்ன பிரச்சினை என்பதை ஆராய்ந்து பார்க்கவும். நண்பர்களுடனான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - அழகுபொருள்

மகரம்:

நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு சிறப்பான நாளாகும். உங்கள் ஆழ்மன சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஆனால், அதற்கான நேரம் மற்றும் சரியான நபர் அமையவில்லை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - க்ளூ ஸ்டிக்

கும்பம்:

உங்கள் கடந்த கால நடவடிக்கைகள் இப்போது பலன் தருவதாக அமையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் அடிப்படையில் நிலையான வளர்ச்சி அமையும். பணியிடத்தில் உங்கள் பலம் என்ன என்பதை இன்னொருவர் சுட்டிக் காட்டுவார்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பளபளக்கும் பொருள்

மீனம்:

பணி சார்ந்த பயணங்களை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், அதற்கான நேரம் இதுவாகும். உங்களுக்கான பணிச்சுமை அதிகரிக்கலாம். பணம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் கூடாது. நீங்கள் தியானம் செய்வது பலன் அளிக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காந்தம்

First published:

Tags: Oracle Speaks, Tamil News