முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 01, 2023) புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    நடந்து முடிந்த மற்றும் பழைய விஷயங்களை நினைவில் வைத்திருக்காமல் அப்படியே விட்டுவிடுங்கள். வியாபாரிகளுக்கு இன்று தங்களது வியாபாரம் தொடர்பான புதிய பார்ட்னர்ஷிப் கிடைக்கலாம். இன்று நீங்கள் போட்டித்தன்மையை புறக்கணித்து தற்போதைய மற்றும் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்தலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

    ரிஷபம்:

    நீங்கள் மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யும் வரை, இன்று செயல்திறனில் காணப்படும் தொய்வு உங்களுக்கு கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். வேலை தொடர்பான சவால்களுக்கு இன்று நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்ற ஆரம்பிக்கலாம்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தேனீ

    மிதுனம்:

    நீங்கள் இன்று ஒரு தெளிவான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கலாம் மற்றும் நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை உரியவர்களுக்கு தெரிவிக்கவும். இன்று உங்கள் பேச்சை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒரு சக ஊழியர் அவர்களின் நலனுக்காக பொதுவில் உங்கள் இமேஜை வைத்து விளையாட முயற்சி செய்யலாம் என்பதால் கவமாக இருங்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெண்கல வாலட்

    கடகம்:

    யதார்த்தத்தை அப்படியே ஏற்று கொள்ள நீங்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கான நேரம் இன்று வரும். நீங்கள் மிகவும் நம்பும் நபர்களை இன்று மதிப்பாய்வு செய்ய வேண்டும் அல்லது அவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். வெகுவிரைவில் நேர்மறை அதிர்வுகளைக் கொண்ட ஒரு நபராக நீங்கள் வருவீர்கள்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு டம்ளர்

    சிம்மம்:

    டீம் ஸ்பிரிட் மற்றும் ஆர்வமுள்ள கற்கும் திறனுடன் உங்களை இன்று மேம்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் அணுகுமுறை காரணமாக இன்று நீங்கள் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள். இன்று பணப்புழக்கத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வாக்கிங் ஸ்டிக்

    கன்னி:

    சில சமயங்களில் நீங்கள் ஒருவரை சந்திக்கும் போது அது உங்களது வாழ்வையே புரட்டி போடும். அந்த வகையில் நீங்கள் மிகவும் திட்டமிடப்படாத வழியில் சிறப்பு வாய்ந்த ஒருவரை இன்று சந்திக்க வாய்ப்புள்ளது. ஒரு குறுகிய பயணத்திற்கும் இன்று வாய்ப்பு உள்ளது.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிளாக் கிரிஸ்டல்

    துலாம்:

    தற்போதைக்கு சில விஷயங்களைப் பற்றி உறுதியான முடிவு உங்களுக்கு தெரியவில்லை என்றால், இப்போதைக்கு அவற்றை ஒத்திவைக்கவும். உங்களுடன் நேரம் செலவிட உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விருப்புகிறார்கள். எனவே அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒரு புதிய திட்டம் அல்லது பணி உங்களை சில நாட்களுக்கு பிஸியாக வைத்திருக்கும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - தேக்கு மரம்

    விருச்சிகம்:

    நீங்கள் விரைவில் வேலையில் பதவி உயர்வை அனுபவிப்பீர்கள் என்பதற்கான வலுவான அறிகுறி இன்று தென்படும். ஒரு மீட்டிங் அல்லது ஒரு சிறிய பயணம் உங்கள் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும். பின்னர் தாராளமாக செலவழிக்க இன்று பணத்தை சேமிக்கவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மூங்கில் செடி

    தனுசு:

    நீங்கள் தீர்வுகளைத் தேடும் போது அதை தீர்க்க கோபம் ஒரு ஆயுதம் இல்லை. எனவே இன்று கோபத்தை விலக்கி வைப்பது நல்லது. சூதாட்டம் போன்ற ஆபத்தான விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளியர் குவார்ட்ஸ்

    மகரம்:

    குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை இன்று உங்களை கவலை கொள்ள செய்யாலாம். இன்று யாரோ ஒருவரிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் ஒரு சிறிய உதவி அல்லது கடன் உங்களுக்கு எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க உதவும். உங்கள் மனைவியுடன் கலந்துரையாடுவது ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உதவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிளிம்பர்

    கும்பம்:

    நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் இன்று நடக்காமல் போகலாம். உங்கள் வீட்டிற்கு வெளியே நன்கு நேரத்தை செலவிடுங்கள், இது நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

    அதிர்ஷ்ட அடையாளம் - நீலநிற மாணிக்க கல்

    மீனம்:

    நீங்கள் நிலுவையில் வைத்திருந்த சில செயல்பாடுகளை இன்று சரியாக முடிப்பீர்கள். மொத்தத்தில், மன அழுத்தம் குறைவான நாள். இன்று நீங்கள் நிறைய உதவிகளைப் பெறலாம். இன்று புதிய முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் தயங்காமல் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

    அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயிலிறகு

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News