முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு (ஏப்ரல் 16, 2023): திருமணத்திற்கு வரன் தேடிக்கொண்டிருக்கும் இந்த ராசியினருக்கு நலன் துணை கிடைக்க வாய்ப்பு

தெய்வீக வாக்கு (ஏப்ரல் 16, 2023): திருமணத்திற்கு வரன் தேடிக்கொண்டிருக்கும் இந்த ராசியினருக்கு நலன் துணை கிடைக்க வாய்ப்பு

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasipalan Today | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:  உங்களது உள்ளுணர்வை கேட்டு அதன் வழிகாட்டுதலின்படி முடிவுகளை எடுப்பது நன்மைகளை கொடுக்கும். விளையாட்டுகளில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை சரியாக திட்டமிடுதல் அவசியம். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை காட்டுவது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - முகமூடி

ரிஷபம்:  அலுவலகத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களது திறமையைப் பற்றி நீங்களே அறிந்து கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – குழாய் கிணறு

மிதுனம்: புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் உண்டு. மிக கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். தேவையற்ற விஷயங்கள் கவனத்தை சிதறவிட வேண்டாம். எதிர்கால திட்டங்களில் திட்டுவது மிகவும் நல்லது. பணம் சேமிப்பதில் அதிக கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஸ்போர்ட்ஸ் மாடல்

கடகம்:  உங்களது மனதில் உள்ள விஷயங்களை மீண்டும் ஒருமுறை சீர்தூக்கி பார்ப்பது நல்லது. உள்ளுணர்வை கேட்டு செயல்பட வேண்டும். நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடந்தேறும். பொறுமையை கையாள்வது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – பீங்கான் குவளை

சிம்மம்: நீங்கள் எதிர்பார்க்காத சில சந்தோஷமான நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களின் அறிவுரைகளை காது கொடுத்து கேட்பது நன்மையை தரும். அதே சமயத்தில் இறுதி முடிவு உங்களது உள்ளுணர்வை கேட்டு எடுப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஸ்மார்ட் வாட்ச்.

கன்னி:  தொழில் ரீதியான போட்டிகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. அதே சமயத்தில் உங்களது வேலையில் கவனத்துடன் செயல்படுவது வெற்றியை ஈட்டித் தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. நெருங்கிய ஒருவரால் கஷ்டப்பட வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வடிவமைக்கப்பட்ட குஷன்

துலாம்:  உங்கள் நடத்தையை பொறுத்து சமூகத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உங்களது பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்களை விற்பது சம்பந்தப்பட்ட பேச்சு துவங்க வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – எம்ராய்டரி ஒர்க்

விருச்சிகம்: சமுதாயத்தில் உங்களுக்குள்ள தொடர்புகளின் மூலம் புதிய நன்மைகளை பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். உயர் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஒத்துழைப்புகள் கிடைக்கும். சட்ட சம்பந்தப்பட்ட சிக்கல்கள் சரியாகும். உங்களது மனைவியிடம் இருந்து உங்களை முன்னேற்றபாதையில் அழைத்துச் செல்லக் கூடிய விமர்சனங்களை பெறுவீர்கள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – எம்பிராய்டரி ஒர்க்

தனுசு:  மற்றவர்கள் செய்ய முடியாத வேலைகளை நீங்கள் மிகவும் சிரத்தையுடன், அதே சமயத்தில் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களை நினைத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் பிரகாசமான எதிர்காலததிற்கான திட்டங்களை வகுப்பதற்கு ஏற்ற நாள்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - மயில்

மகரம்: கடந்த கால கசப்பான நிகழ்வுகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறை அதனால் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமாக இருக்கலாம். உள்ளுணர்வை கேட்டு அதன் வழி நடப்பதன் மூலம் நன்மை கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படும்.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு பிரபலம்

கும்பம்: தனித்து விடுவதை பற்றி அதிக கவலை கொள்ள தேவையில்லை. இதன் மூலம் எதிர்காலத்தில் பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். நேரம் உங்களுக்கு சாதகமாக மாறும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்களது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்புகள் அமையும். நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்புகள் உண்டு.

உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு புதிய கார்

மீனம்:  திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சரியான வாழ்க்கை துணை அமைய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு விதிக்கப்பட்ட நபர் உங்களை வந்து சேருவார். ஆனால் உங்களுக்கு நெருக்கமான ஒருவர் அதனால் பொறாமை கொள்ள வாய்ப்புகள் உண்டு எனவே சுற்றியுள்ளோரிடம் அதிக கவனம் தேவை. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

top videos

    உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வாழ்க்கை மரம்

    First published:

    Tags: Oracle Speaks, Rasi Palan, Tamil News