முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 26, 2023) புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 26, 2023) புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  எந்தவொரு விளையாட்டு நடவடிக்கையிலும் நீங்கள் காட்டும் தீவிர ஆர்வம் உங்களை சிறப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல கூடும். உங்களை தங்கள் அணியில் சேர்க்க விரும்பும் ஒருவர் உங்களுக்காக பல நன்மைகளை செய்யலாம். வழக்கத்திற்கு மாறான ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பினால், நீங்கள் அதை இன்று தொடரலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மாஸ்க்

  ரிஷபம்:

  உங்கள் திறனைப் பற்றி நீங்கள் வெகுவாக அறிந்திருக்கிறீர்கள், எனவே தான் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை இன்று அடைந்து விடலாம் என நினைப்பீர்கள். அதற்கேற்றார் போல வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. உங்கள் சாதனைகளுக்கு உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதம் உறுதுணையாக இருக்கும். உங்கள் கனவுகளை நனவாக்க உதவும் ஒரு ஸ்பான்சரை இன்று நீங்கள் காணலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிணறு

  மிதுனம்:

  சொந்தமாக தொழில் தொடங்குவது என்ற கனவை நோக்கி நீங்கள் மிக கடினமாக உழைத்து வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு இன்று எந்தவிதமான எந்த கவனச்சிதறலும் இருக்க கூடாது. வணிகம் தொடர்பான உங்களின் அனைத்து எதிர்காலத் திட்டங்களையும் இன்று மதிப்பாய்வு செய்து கொள்ளுங்கள். இன்று உங்களை நோக்கி புதிய வாய்ப்புகள் வந்தால் அதை முழுமையாக நிராகரிக்காமல் இருங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்போர்ட்ஸ் மாடல்

  கடகம்:

  உங்கள் மனம் மற்றும் தெளிவான உள்ளுணர்வு சொல்வதை இன்று நீங்கள் பின்பற்றினால் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யும் நபர்கள் தாங்கள் நினைத்ததை அடைவார்கள், அந்த வகையில் உங்களுக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பீங்கான் குவளை

  சிம்மம்:

  இன்று நீங்கள் பொது இடங்களில் உங்களது தனிப்பட்ட உரையாடல்களை தவிர்க்கவும். உங்களை அறியாமல் இன்று சில விஷயங்களில் ஈடுபட கூடும். இன்று கலவையான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கொண்ட நாள். இன்று நீங்கள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படலாம். இன்று அவசரமான அல்லது விரைவான முடிவுகளை எடுக்காமல் இருங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற பொருட்கள்

  கன்னி:

  இன்று உங்களுக்கு ஆலோசனை சொல்லும் நபர்களை வரவேற்க வேண்டும், அவர்களால் இன்று நீங்கள் முக்கிய பலன்களை பெறுவீர்கள். ஹெல்த்கேர் துறையில் இருப்பவர்கள் இன்று சவாலான நாட்களை எதிர்கொள்ள கூடும். நீங்கள் இதுநாள் வரை திட்டமிடாத சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்மார்ட் வாட்ச்

  துலாம்:

  டீலிங்கில் இன்று நீங்கள் தெளிவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும், அவர் ஆலோசனைக்காக உங்களிடம் வர வாய்ப்புள்ளது. உங்களுக்கு உடல்நலம் சார்ந்த சில சிக்கல்கள் இன்று எழலாம் ஆனால் அது தற்காலிகமானது மற்றும் காலப்போக்கில் சரியாகிவிடும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேட்டர்ன்ட் குஷன்

  விருச்சிகம்:

  நீங்கள் பணியிடத்தில் சீனியர் அல்லது அதிகாரத்தில் இருப்பவர் என்றால் இன்று சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு சொத்தை விற்க விருப்பம் இருந்தால் அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தையை இன்று துவக்கலாம். உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு எம்பிராய்டரி ஒர்க்

  தனுசு:

  உங்களிடம் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றும் திறன் இல்லை என்று உங்களுக்கு தோன்றினால் அது குறித்து நீங்கள் பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை, ஏனென்றால் உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். எனவே எதை குறித்தாவது பதற்றம் அல்லது கவலை கொள்ள தேவை இல்லை. இன்று எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் நிராகரிக்காதீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மயில்

  மகரம்:

  இன்று நீங்கள் எதிர்கொள்ளும் புதிய நிகழ்வுகள் சிறந்த அனுபவத்திற்கு வழி வகுக்கும். வெளிப்படைத்தன்மை உங்களுக்கு பல ரசிகர்களைப் பெற்று தரும் என்பதால் எப்போதுமே வெளிப்படையாக இருங்கள். உங்கள் பணிதிறனை வேறு எங்காவது பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை விரைவில் பெறுவீர்கள்.

  கும்பம்:

  நேரம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது மற்றும் அனைவருக்கும் மாறிக்கொண்டே இருக்கிறது. உங்களின் கடந்த கால தவறுகளை நீங்கள் திரும்பிப் பார்த்து இன்று மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்கள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வதற்கான வாய்ப்புகள் இன்று கிடைக்கும். மாலி நேரங்களில் ஆன்மிகத்தில் நேரம் செலவழிப்பீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஃபேன்ஸி கார்

  மீனம்:

  உங்களுக்கு நெருக்கமான ஒருவர் நீங்கள் விரும்புவதை விரும்புவார். உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் பொறாமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் கவனம் தேவை. சில நேரங்களில் இன்று உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணம் உங்களை வாழ்க்கையில் சில அடிகள் பின்னோக்கிச் செல்ல வைக்கும். மனம் தளராதீர்கள்.

  top videos

   அதிர்ஷ்ட அடையாளம் - ட்ரீ ஆஃப் லைஃப்

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News