முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 29, 2023) புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 29, 2023) புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்று எளிமையான பணிகள் கூட உங்களுக்கு கடினமாக தோன்றலாம், அவற்றுக்காக நீங்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடு மூலம் இன்று ஒரு நேர்மறையான வாய்ப்பு பெறுவீர்கள். எதுவாயினும் சிந்தித்து திட்டமிட வேண்டிய நாள் இது.

அதிர்ஷ்ட அடையாளம் - கற்பூரம்

ரிஷபம்:

உங்களுக்கு மிகவும் தேவைப்படும் போது உதவி செய்ய கூடிய நபரை பார்ப்பீர்கள் அது உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். பணியிடத்தில்உங்களுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வேலைகளை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிளாக் கிரிஸ்டல்

மிதுனம்:

இன்று உங்களுக்கு கிடைக்கும் ஒரு சலுகை உங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கலாம். உங்களுக்கான சிறந்த நேரத்தை இன்று காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி சில விஷயங்கள் இன்று நடக்க கூடும்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு துணி வலை

கடகம்:

நீங்கள் இன்று நடுநிலையாக இருக்க வேண்டும், உங்கள் முடிவைப் பொறுத்து வேறு ஒருவருக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். வாகனத்தில் செல்லும்போது அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. உங்கள் தவறை ஒப்பு கொள்ள வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்வர் வயர்

சிம்மம்:

நீங்கள் சில முடிவுகளுக்காக காத்திருக்கிறீர்கள் என்றால் பொறுமை முக்கியம். உங்களது சிறப்பான வேலை திறன் உங்கள் பணியிடத்தில் சீனியர்கள் மத்தியில் முக்கிய விவாத பொருளாக மாறியிருக்கலாம். உங்களுக்கு இன்று தோன்றும் புதிய யோசனை காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். விருந்தினர்களின் எதிர்பாராத வருகை உங்களை உற்சாகப்படுத்தலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுக்கு பிடித்த ஸ்போர்ட்

கன்னி:

நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதை இன்று திருப்பி தர கூடிய சூழல் ஏற்படும். உங்களது நெருங்கிய நண்பர் மீதான நம்பிக்கையை நீங்கள் தற்காலிகமாக இழக்க நேரிடும். திடீர் ஷாப்பிங் செல்வது உங்களது நாளை பிரகாசமாக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நியான் சைன்

துலாம்:

நீங்கள் இதற்கு முன் இழந்த வாய்ப்பு வேறு வடிவத்தில் உங்களுக்கு இன்று கிடைக்கலாம். சக ஊழியருக்கு உங்கள் நேரத்தை செலவழிப்பது டென்ஷனை ஏற்படுத்தலாம். நிலுவையில் உள்ள ஒரு பணி இன்று முடியும் தருவாயில் உள்ளது.

அதிர்ஷ்ட அடையாளம் - உங்களுடைய பழைய புகைப்படம்

விருச்சிகம்:

எந்த வகையிலாவது உங்கள் பேஷன் மீது இன்று ஆர்வம் அதிகமானால் அதற்கான வேலைகளில் ஈடுபடலாம். இன்று நீங்கள் முக்கிய விஷயங்களை பற்றி சிந்திக்க மற்றும் புதிய திட்டங்ளை முன்னெடுக்க உங்களது உள்ளுணர்வை பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - சிவப்பு நிற ஹெட்ஃபோன்ஸ்

தனுசு:

அடுத்த வரவிருக்கும் வாய்ப்பிற்காக நீங்கள் முன்பே தயாராக விரும்பினால், அது சரியான முடிவாக இருக்கலாம். இன்று உங்களது நிதி நிலைமை சீராக இருக்கும். இதனால் தீரக்கப்படாமல் நிலுவையில் இருந்த சில பணப் பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லிமிட்டட் எடிஷன் ஆர்டிகிள்

மகரம்:

இன்று நீங்கள் எல்லாவற்றிலும் விழிப்புடன் இருக்கவும் உங்களை சுற்றியுள்ள என்ன நடக்கிறது என்று கவனமுடன் இருக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்திற்கான பதிலை இன்று தேட முயற்ச்சிப்பீர்கள். உங்கள் உடன்பிறந்தவருக்கு சில மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு லாவெண்டர் இன்சென்ஸ்

கும்பம்:

உங்கள் வாழ்வில் நீங்கள் சிறப்பு நபராக கருதும் முக்கிய நபர் இன்று சில காரணங்களுக்காக உங்களை விட்டு சற்று விலகலாம். சில தைரியமான செயல்களை செய்வதற்கான முடிவை நீங்கள் இன்று செயல்படுத்த விரும்பலாம். உங்கள் நண்பர்களிடமிருந்து உத்வேகம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சால்ட் லேம்ப்

மீனம்:

உங்களுக்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களை இன்று பாதுகாப்பது உங்கள் கடமை. வாழ்க்கை துணையுடன் நீங்கள் ஒரு சிறந்த பிணைப்பை உருவாக்க இன்று நல்ல நாள். ஒரு சர்ப்ரைஸ் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கலாம்.

top videos

    அதிர்ஷ்ட அடையாளம் - நிலவு

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News