முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 18, 2023) சில சர்ப்ரைஸ் காத்திருக்கின்றன.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 18, 2023) சில சர்ப்ரைஸ் காத்திருக்கின்றன.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  நீங்கள் இன்று முயற்சி செய்யும் ஏதாவது இன்று கைகூட நேரமானால் அது நடக்காது என்று அர்த்தமில்லை. நீங்கள் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் மீது சில விமர்சனங்கள் எழலாம். இன்று நீங்கள் வெளியூர் பயணத்தை திட்டமிட்டிருந்தால் அது ஒத்தி வைக்கப்படலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - விலையுயர்ந்த மணிக்கல்

  ரிஷபம்:

  உங்களது கடந்த காலத்தில் நீங்கள் கற்பனை செய்த ஒரு தருணத்தை இன்று பெற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்கள் பணியிடத்தில் இன்று நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். தம்பதிகளுக்குள் நெடுது வந்த குழப்பங்கள் மற்றும் சண்டைகள் இன்று தீரும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - 2 இறகுகள்

  மிதுனம்:

  இன்று உங்களை வலுப்படுத்த மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நாள். இன்று உங்கள் பெற்றோரின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை. உடனடி விளைவு ஏற்படுத்த கூடிய விஷயங்களில் நீங்கள் இன்று கவனம் செலுத்த வேண்டும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர பெட்டி

  கடகம்:

  உங்கள் பொறுப்புகள் நீங்கள் குறுகிய காலக்கெடு கொண்டிருப்பதை உங்களுக்கு நினைவூட்டி கொண்டே இருக்க கூடும். உங்கள் வேலையை நீங்கள் இன்று வேகமாக செய்ய வேண்டியிருக்கலாம். வேலைகளில் ஆர்வமாக ஈடுபட உங்களுக்கு ஒரு புதிய யோசனை உதவலாம். உங்களுக்கு இன்று ஓய்வும் முக்கியம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒயிட் ஸ்லாப்

  சிம்மம்:

  இன்று நீங்கள் உங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதால் உங்கள் மன அமைதியை இழக்க நேரிடும். எனவே சீரியஸான விஷயமாக இருந்தாலும் கூட பொறுமையாக கையாளுங்கள். ஏற்கனவே உங்களுக்கு நன்கு அறிமுகமானவர் இன்று உங்களுக்கு சரியான நேரத்தில் உதவக்கூடும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜேட் பிளான்ட்

  கன்னி:

  உங்கள் வேலை மற்றும் வணிகத்தை மதிப்பாய்வு செய்ய இன்று நல்ல நேரம். சமீப காலமாக முக்கிய விஷயங்களில் நீங்கள் எடுத்த முடிவுகளை சற்று சிந்தித்துப் பார்க்க இன்று நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்காக நீங்கள் சம்பாதித்த சிலவற்றிற்காக இன்று நீங்கள் சில கொண்டாட்டங்களில் ஈடுபடலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்டிக்கர்

  துலாம்:

  இன்று முக்கிய வேலைகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும்படியான சில விஷயங்களை எதிர் கொள்ளலாம். புதிய வருமான ஆதாரத்தை உருவாக்கும் யோசனை உங்களுடன் பணியாற்றும் சக ஊழியரிடம் இருக்கிறது. நீண்ட நாட்களாக நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிட்டால் அதற்கான நேரம் இன்று வந்துவிட்டது.

  அதிர்ஷ்ட அடையாளம் - சன்ஷைன்

  விருச்சிகம்:

  இன்று நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டும் என திட்டமிட்ட அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று சாதகமான முடிவுகளை பெறலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - மஞ்சள் மெழுகுவர்த்திகள்

  தனுசு:

  இன்று உங்களுக்கு ஒரு பரபரப்பான நாளாக அமையலாம். மிக முக்கியமான ஒன்றை செய்ய உங்களுக்கு நேரம் அமையாமல் போகலாம். உங்கள் மனதில் இருக்கும் சில விஷயங்களுக்கான தீர்வு அல்லது பதிலை இன்று காண்பீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிலிகான் மோல்டு

  மகரம்:

  இன்று உங்களுக்கு சில சர்ப்ரைஸ் காத்திருக்கின்றன, ஆனால் அவற்றில் சில உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உங்கள் ஆட்டிட்டியூட் உங்களுக்கு சில நெருக்கமானவர்களை காயப்படுத்தக்கூடும் என்பதால் உங்கள் கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிரிஸ்டல் டம்ளர்

  கும்பம்:

  நீங்கள் பங்கேற்கும் தேர்வு அல்லது போட்டிகளில் முடிவுகள் எதிர்பார்த்தபடி வராமல் போகலாம். ஒரு சிறிய அளவிலான சாதுர்யம் மற்றும் ராஜதந்திரம் உங்கள் வேலையை சரியாக செய்ய உதவும். அவசரமாக அல்லது வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குடை

  மீனம்:

  இதுவரை பார்த்த சிலவற்றிலிருந்து நீங்கள் இன்று உத்வேகம் பெறலாம். உங்களது நாளை திட்டமிடாமல் இருந்தால் பல தடங்கல்களை சந்திக்க நேரிடலாம். இன்று நீங்கள் உள்முக சிந்தனையாளராக இருப்பது உதவியாக இருக்காது. பணியிடத்தில் இன்று உங்களை யாராவது குற்றம் சொல்லலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - நீல வானம்

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News