மேஷம்:
தனித்துவத்துடன் உங்களின் திறமையை வெளிப்படுத்தும் நாளாக இன்று அமையும். உங்களின் ஆர்வத்திற்கேற்ப பல பணிகளை செய்யக்கூடிய நிலை ஏற்படும். உங்களின் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ? அதைப்பின்பற்றி நடந்தால், நிச்சயம் அனைத்திலும் வெற்றிக் காண்பீர்கள். உங்களது அலுவலகத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் விலகி இருப்பது நல்லது. உங்களது சொந்த வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தவும். ஆக்கப்பூர்வமான யோசனைகளுடன் நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட்டால் வணிகத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்களது உடல், மன நலத்திற்கும் இடையே சமநிலையை பராமரிக்கவும்.
அதிர்ஷ்ட அடையாளம் - இலை
அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்ட எண் - 22
ரிஷபம்:
உங்களின் நம்பிக்கையும், சகிப்புத்தன்மையும் வாழ்க்கையில் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும். உங்களின் விடாமுயற்சியை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். சிக்கல்கள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளைத் தீர்க்கும் மனப்பக்குவம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் புதிய எண்ணங்கள் உருவாகும். அதிகாரத்தோரணை இல்லாமல் ஒன்றாக வேலை செய்தால் வெற்றி உண்டாகும். உங்களது தொடர் முயற்சிகளால் பல வெற்றிகள் கிடைக்கும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு நிற ஸ்படிகம்
அதிர்ஷ்ட நிறம் - வயலட்
அதிர்ஷ்ட எண் – 4
மிதுனம் :
இன்றைக்கு நன்மைகள் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சாதுர்த்தியமான பேச்சுகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் பல பிரச்சனைகளைத் தவிர்ப்பீர்கள். நெகிழ்வான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய மனநிலையை ஏற்றுக்கொள்வதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் நெகிழ்வுத்தன்மை பல சாதனைக்கான முக்கிய பாதையாக இருக்கும். மன ஆரோக்கியத்தைப் பாரமரிப்பதன் மூலம் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். ஏதேனும் விவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் உங்களின் அறிவாற்றல் மேம்படும்.
அதிர்ஷ்ட அடையாளம் - பெட்டி
அதிர்ஷ்ட நிறம் - நியான் பிங்க்
அதிர்ஷ்ட எண் - 12
கடகம்:
இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகள் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும். சுய பாதுகாப்புடன் இருப்பது நல்லது. முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உங்களது குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். காதல் விஷயங்களில் பிரச்சனைகள் வந்தாலும் எதிர்க்கும் மனப்பக்குவம் ஏற்படும். உணர்ச்சிபூர்வமான உறவுகளை வளர்ப்பதன் மூலம் உங்கள் குடும்பத்தில் ஒரு அன்பான சூழல் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாளாக இன்று அமையும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கழுகு
அதிர்ஷ்ட நிறம் - கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் – 55
சிம்மம் :
இன்றைக்கு செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தனிப்பட்ட திறமையால் வெற்றியைப் பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தொழிலை நேர்த்தியாக செய்வதன் மூலம் பிறரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய முயற்சிக்கு வழிகாட்ட உங்களின் செயல்திறனை அதிகரிக்க முயலுங்கள். சுய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு அன்பையும், மகிழ்ச்சியையும் கொடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - கையால் நெய்யப்பட்ட கம்பளம்
அதிர்ஷ்ட நிறம் – நீலம்
அதிர்ஷ்ட எண் - 24
கன்னி :
இன்றைக்கு எவ்வித சிக்கல்கள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருந்தால் காதல் முயற்சிகளில் வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் அசைக்க முடியாத விசுவாசம் அன்பை வளர அனுமதிக்கிறது. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்களது இலக்குகளில் ஒழுக்கம் மற்றும் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களின் புதிய வணிகத்திற்கு துல்லியமான திட்டமிடல் அவசியம். உங்களின் அன்புக்குரியவர்களிடம் நீங்கள் காட்டும் அக்கறை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். விவசாய பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சந்தனக் குச்சி
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட எண் – 1
துலாம் :
இன்றைக்கு வெற்றிகள் நிறைந்த நாளாக உங்களுக்கு அமையும். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். போட்டி பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தொழில் முயற்சிகளில் குழுவாக மற்றும் இராஜதந்திரத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணியித்தில் அமைதி மற்றும் நேர்மையுடன் செயல்பட்டால் நற்பெயர் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வேலை, உறவுகள் மற்றும் சுய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையுடன் இருந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஆலை
அதிர்ஷ்ட நிறம் - பழுப்பு
அதிர்ஷ்ட எண் - 8
விருச்சிகம் :
நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுப காரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பல தரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். பழைய நடைமுறைகளை கைவிட்டு புதிய மாற்றத்தில் உங்களது வாழ்க்கையை நடத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கவும். உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் ஒத்துழைப்பால் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - மயில் இறகு
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை
அதிர்ஷ்ட எண் – 33
தனுசு :
பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் இன்று அடிக்கடி ஏற்படும்.மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உங்களின் கற்பனை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவை புதிய நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல்படவும். உங்களின் மன மற்றும் உணர்ச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - குதிரைவாலி
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல்
அதிர்ஷ்ட எண் - 9
மகரம் :
உங்களின் விருப்பம் நிறைவேறும் நாள் இன்று. உறவுகளில் நம்பகத்தன்மையுடன் செயல்படுங்கள். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் நீங்கள் செய்யும் வேலையால்உங்கள் உறவுகளில் நிலைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்; நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட உறுதியான அடித்தளங்களை நிறுவுதல். உங்கள் காதல் முயற்சிகளில், அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால பாதுகாப்பைத் தேடுங்கள்; விவேகமே வெற்றியை தரும். உங்கள் கவனத்தையும் ஒழுக்கத்தையும் பராமரிக்கவும்; உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தொழில் ரீதியாக பலனளிக்கும். அடிப்படையாக இருங்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்; தேவையற்ற அதிகாரச் சண்டைகளைத் தவிர்க்கவும். உங்கள் புதிய நிறுவனத்திற்கான வலுவான திட்டத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் நடைமுறை மற்றும் ஒழுக்கத்தை அதிகம் பயன்படுத்துங்கள். ஒழுக்கமான அட்டவணையைத் தழுவி, சுய ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்கவும். உங்கள் குடும்ப பாதுகாப்பையும் ஆதரவையும் கொடுங்கள்; உறுதியான செயல்கள் மூலம் உங்கள் அன்பைக் காட்டுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - காற்றாடி
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட எண் – 2
கும்பம் :
இன்றைக்கு சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்பும், ஆதரவும் மேம்படும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில்துறையில் சாதனைகளை அடைவதற்கு ஆக்கப்பூர்வமாகவும் புதுமையாகவும் சிந்தியுங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் வேலையைச் செய்யும் போது சுமுகமான சூழல் உண்டாகும். உங்களின் மனம் என்ன சொல்கிறேதோ? அதை மட்டும செய்யுங்கள். எப்போதும் தனித்துவத்துடன் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கற்றாழை
அதிர்ஷ்ட நிறம் - பழுப்பு
அதிர்ஷ்ட எண் - 11
மீனம்:
இன்றைக்கு குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளிவட்டாரங்கள் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உங்களது குடும்பத்தினருக்கு நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் வழங்குங்கள். உணர்ச்சி மற்றும் உறவுகளிடம் புரிதல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சிலரின் நட்பு மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட அடையாளம் - மர மேசை
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
அதிர்ஷ்ட எண் – 40
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News