ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 12, 2023) தலைமை பொறுப்புக்கான வாய்ப்புகள் வரும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 12, 2023) தலைமை பொறுப்புக்கான வாய்ப்புகள் வரும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்று உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் சற்று குறைந்ததை போல நீங்கள் உணரலாம். இதன் காரணமாக எழும் சோம்பல் உணர்வு உங்களது வேலை நேரத்தை நீட்டிக்க செய்யலாம். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இன்று நீங்கள் ஷாப்பிங்கில் ஈடுபடலாம்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ப்ரிஸம்

  ரிஷபம்:

  சிறப்பு மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு நீங்கள் நிலையான கவனம் கொடுக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் உங்கள் வாழ்க்கை துணை சொல்வதை பின்பற்ற முயற்சிக்கவும். உங்களுக்கு எதிரான சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நன்மை அளிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பச்சை கண்ணாடி பாட்டில்

  மிதுனம்:

  ஒரு புதிய நபர் உங்கள் வேலையை பகிர்ந்து செய்து உங்களுக்கு தேவையான ஓய்வு தரலாம். சரியான நேரத்தில் சில வேலைகளை முடிப்பது தேவையற்ற கூடுதல் வேலை நேரத்தில் இருந்து உங்களை காப்பாற்றும். விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீரூற்று

  கடகம்:

  இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது மற்றும் அவர்களுடன் நேரம் செலவழிப்பது நாளை சமநிலையாக வைக்கும். உங்களது ஆன்மீக ஆர்வம் ஒரு ஆரோக்கிய நடவடிக்கை மூலம் முன்னெடுக்கப்படலாம். தலைமை வாய்ப்புகளுக்கான காலம் விரைவில் வரும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழங்கால கடிகாரம்

  சிம்மம்:

  கடந்த காலத்தில் நீங்கள் தவறுதலாக காயப்படுத்திய ஒருவரை இன்று சமரசம் செய்ய நல்ல நாளாக இருக்கலாம். நெருங்கிய நண்பர்களுடன் இன்று ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடலாம். வீட்டிற்கு விருந்தினர்கள் வர கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிந்த வானம்

  கன்னி:

  பிரபலமான ஒருவர் உங்களது திறமையை பார்த்து உங்களை அணுகலாம். உங்கள் திறமை அல்லது வேலையை பற்றி நீங்களே சந்தேகிக்க தொடங்கி கட்டத்தில் இந்த வாய்ப்பு கிடைக்கலாம். எனவே உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பிடித்த எண்கள்

  துலாம்:

  ஒரு சிறிய சூழ்நிலையை நீங்கள் சரியாக கையாளா விட்டால் பணியிடத்தில் இருக்கும் அமைதியான சூழல் பாதிக்கப்படலாம். திட்டமிடப்படாத கூடுதல் வேலை இன்று உங்கள் தோளில் ஏறலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பர் ஒருவரை இன்று நீங்கள் சந்திக்க கூடும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்

  விருச்சிகம்:

  பணியிடத்தில் இன்று உருவாகும் சூழ்நிலையை கவனத்தில் கொள்ளவும். சுற்றி இருப்பவர்களில் யாரேனும் குழப்பம் மற்றும் இடையூறு ஏற்படுத்தலாம். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவில் இன்று முன்னேற்றம் காண்பார்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நெட்

  தனுசு:

  நாட்கள் இதுவரை மெதுவாக மற்றும் சலிப்பாக சென்று கொண்டிருந்தால், இன்றைய நாள் வேறுவிதமாக மாறும். இன்று உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கலாம். இதனால் இதுநாள் வரை இருந்த சோர்வு விலகி உற்சாகமாக உணர்வீர்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஃப்ளோரல் பேட்டர்ன்

  மகரம்:

  பார்ட்னர்ஷிப் மூலம் கிடைக்கும் புதிய வாய்ப்பிற்கு நீங்கள் இன்று தயாராகலாம். உங்களது பாதை இன்று தெளிவாக மற்றும் நேராக இருக்கும் என்றாலும் நிதானம் அவசியம். உங்கள் டீம் மெம்பர்களுடன் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், அவற்றை விரைவில் தீர்க்க கவனம் செலுத்துங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஃப்ளூ ஷூக்கள்

  கும்பம்:

  இன்று முகத்திற்கு நேராக சொல்லப்படும் விஷயங்களை ஏற்று கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் எளிதான நாள். சோர்வை போக்க சிறிது ஓய்வு பெற உங்களை அனுமதிக்கவும். ஒரு பணியை மதிப்பிடும் முன் உங்களது கணிப்பு சரியானவையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீர்நிலை

  மீனம்:

  உங்களது நெருங்கிய நண்பருக்கு குடும்ப விஷயங்களில் உங்கள் உதவி தேவைப்படலாம். உங்களுக்கு அதிகம் தெரியாத ஒருவரை அதிகம் விமர்சிக்காதீர்கள். உங்களது சேமிப்பு இன்று பயனுள்ள வகையில் செலவாகும். முடிவுகளை எடுக்கும் முன் நன்கு யோசிக்கவும்.

  உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு குவளை

  First published:

  Tags: Oracle Speaks, Tamil News