முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணவரவு இன்று (மார்ச் 23, 2023) சிறப்பாக இருக்க கூடும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணவரவு இன்று (மார்ச் 23, 2023) சிறப்பாக இருக்க கூடும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்று நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் நினைத்தபடி நடக்கலாம். இன்று உங்களைச் சுற்றியுள்ள நடக்கும் நேர்மறை நிகழ்வுகளால் நீங்கள் உற்சாகமாக உணரலாம். இதற்கிடையே உங்களுக்கு நெருக்கமான ஒருவர் இன்று சட்ட சிக்கலில் சிக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பட்டம்

  ரிஷபம்:

  இன்று ஒரு புதிய நபரால் நீங்கள் அதிகம் கவனச்சிதறலுக்கு உள்ளாகலாம். நாளின் முடிவு வரை நீங்கள் குழப்பத்திலேயே இருப்பதை போல உணரலாம். உங்களால் செய்ய முடியாத விஷயங்களை பற்றி இன்று நீங்கள் மிகைப்படுத்தி பேசாதீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு காற்றாலை

  மிதுனம்:

  இன்று நீங்கள் எதிர்பார்த்ததை விட வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் சோர்வாக உணரலாம். உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி திட்டமிட உங்களுக்கு இன்று சிறிது நேரம் ஒதுக்கி கொள்வதில் கவனம் செலுத்துங்கள். உதவி தேவைப்படும் ஒருவர் உங்களை அணுக இன்று உங்களுக்காக காத்திருக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்வர் வயர்

  கடகம்:

  உங்களுக்காக நீங்கள் ஷாப்பிங் திட்டமிட்டு இருந்தால், நீங்கள் அதில் இன்று தடையின்றி ஈடுபடலாம். வேலையில் கடைபிடிக்க வேண்டிய காலக்கெடுக்களை இன்று நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியரால் உங்களது வழக்கமான வேலைகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளி பொருட்கள்

  சிம்மம்:

  நீங்கள் முன்பு மறுத்த ஒரு விருப்பம் அல்லது விஷயங்களை இன்று பரிசீலித்து பார்க்கும் சூழல் ஏற்படலாம். எந்த வேலைகளில் ஈடுபட்டாலும் அதை நீங்கள் மிகைப்படுத்தி காட்ட முயற்சித்தால் அது உங்களுக்கு சரியான முடிவுகளை தராது. கம்ப்யூட்டரில் பணியாற்றுவோர் இன்று தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்பதால் தங்களுக்கு தேவையான ஆவணங்களை பேக்கப் எடுக்க நினைவில் கொள்ள வேண்டும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மர ஸ்டிக்

  கன்னி:

  இன்று நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம், அந்த இக்கட்டான நேரங்களில் உங்களுக்கு திடீர் ஆதரவு வருவதையும் காணலாம். இன்று நிகழும் ஒரு நபருடனான தற்செயலான சந்திப்பு நேர்மறையான முடிவுகளை தரலாம் என்பதால் கவனம் தேவை.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு களிமண் ஜாடி

  துலாம்:

  நண்பர்களுடன் இன்று ஒன்று கூடுவது உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கவும், சுவாரஸ்ய உரையாடல்களை நடத்தவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று நீங்கள் நீண்ட நடைப்பயணம் மேற்கொள்வது உங்களுக்குத் தேவையான அமைதியை தரக்கூடும். தியானத்தில் ஈடுபடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கோல்ட் நெட்

  விருச்சிகம்:

  நீங்கள் இன்று ஒரு அதிகார நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் வரலாம். பணவரவு இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்க கூடும். இன்று நீங்கள் முன்வைக்கும் ஒரு வலுவான எண்ணம் விரைவில் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். குடும்ப உறுப்பினர்களுடன் மோதலை தவிர்க்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஸ்டோரேஜ் ட்ரங்க்

  தனுசு:

  உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு பணியை நீங்கள் ஒத்தி வைக்க நேரிடலாம் அல்லது உங்களுக்கு அதை செய்ய நேரமில்லா சூழல் ஏற்படலாம். எனினும் உங்கள் தந்தை இன்று உங்களுக்கு முக்கியமான பணியை கொடுத்திருந்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்த செய்து முடிக்க வேண்டும். உங்கள் மன நிலையை சீராக வைத்து கொள்ள உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பபுள் வ்ரேப்

  மகரம்:

  இன்று நீங்கள் செய்யும் எந்த விதமான பயணமும் உங்கள் மனதில் மிகுந்த அமைதியை தரும். சில பழைய நண்பர்கள் இந்த வாரம் உங்களை சந்திப்பது பற்றி இன்று உங்களிடம் பேசலாம். இன்று நீங்கள் முக்கிய விஷயத்திற்காக ஒரு உறுதியான திட்டத்தை உருவாக்க நேரிடலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பேப்பர் கப்

  கும்பம்:

  உங்கள் பணியை பார்த்து வியக்கும் ஒரு புதிய நபரிடம் இருந்து நீங்கள் பாராட்டு பெறலாம். உங்கள் உறவில் சமீப நாட்களாக விரிசலை சந்தித்து வந்தால் அது இன்று சிறப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் அமையும். ஒருவரின் இழப்பு ஒருவரின் லாபமாக மாறலாம் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - பீச் கலர் ரோஜாக்கள்

  மீனம்:

  சில மருத்துவ பிரச்சனைகளால் இன்று நீங்கள் திசைதிருப்பப்படலாம். உங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வரும் பார்ட்னருக்கு இன்று ஏற்படும் சில குடும்ப பிரச்சனைகளில் உங்கள் உதவி தேவைப்படலாம். உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை இன்று நீங்கள் பார்ப்பீர்கள். இன்று நீங்கள் யூகிப்பது உண்மைக்கு நெருக்கமாக இருக்காது.

  top videos

   அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள் துணி

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News