முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 13, 2023) ஒரு நல்ல செய்தி காத்திருக்கலாம்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (ஏப்ரல் 13, 2023) ஒரு நல்ல செய்தி காத்திருக்கலாம்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

 • Last Updated :
 • Tamil Nadu, India

  மேஷம்:

  இன்று உங்களுக்கு சோம்பல் உணர்வு ஏற்பட கூடும், இதனால் திட்டமிட்ட வேலைகளை சரியான முறையில் முடிக்க முடியாமல் போகலாம். நீங்கள் ரேண்டம் அல்லது விண்டோ ஷாப்பிங்கில் ஈடுபடலாம். இன்று ஒட்டுமொத்தமாக உங்களது ஆற்றல் குறைந்து விட்டதாக தோன்றும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மேரிகோல்ட்

  ரிஷபம்:

  சிறப்பு மற்றும் நெருங்கிய உறவுகளிடம் இன்று நீங்கள் கவனம் செலுத்துங்கள். தனிப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு எதிரான அலை இருந்தால், அங்கு விலகி இருப்பது நல்லது. வேலை நேரத்தை சரியாக பயன்படுத்த முயற்சிக்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கிரீன் கிளாஸ் பாட்டில்

  மிதுனம்:

  உங்களது இன்றைய பணிச்சுமையை ஒரு புதிய நபர் போக்கலாம். சரியான நேரத்தில் விஷயங்களை நினைவில் வைத்து செயல்படுவது உங்களை கூடுதல் வேலையிலிருந்து காப்பாற்றும். சில விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிக ஆற்றலைக் கொண்டு வரலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீரூற்று

  கடகம்:

  இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருந்தாலும் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது உங்களை ஆசுவாசப்படுத்தும். பணியிடத்தில் தலைமை மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்பு விரைவில் உங்களை தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பழங்கால கடிகாரம்

  சிம்மம்:

  நீங்கள் கடந்த காலத்தில் புண்படுத்திய ஒருவர் இன்னும் உங்களை மன்னிக்காமல் இருப்பதை காண்பீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் ஒரு சிறிய பயணத்தை இன்று திட்டமிடலாம். மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபட இன்று நல்ல நாள். தேவையான மாற்றங்களைச் செய்ய இன்று உங்களிடம் கூடுதல் முயற்சி தேவை.

  அதிர்ஷ்ட அடையாளம் - தெளிந்த வானம்

  கன்னி:

  உங்கள் வேலையால் ஈர்க்கப்பட்ட பிரபலம் ஒருவர் உங்களை அணுகலாம். உங்கள் வேலை மற்றும் திறமையை பற்றி உங்களுக்கு இதுநாள் இருந்த சந்தேகம் இதனால் இன்று நீங்கும். இன்று உங்கள் உள்ளுணர்வு சொல்வதை நம்புங்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - வரிசையான எண்கள்

  துலாம்:

  ஒரு சிறிய சூழலை நீங்கள் இன்று சரியாக நிர்வகிக்காவிட்டால் பணியிடத்தில் உங்களுக்கு இருந்து வரும் அமைதியான சூழல் சீர்குலைந்து விடும். திட்டமிடப்படாத ஒரு கூடுதல் வேலை உங்களுக்கு வரலாம். பொழுதுபோக்கிற்கான புதிய ஆதாரம் உங்கள் கவனத்தை திசை திருப்ப கூடும். பழைய நண்பரை இன்று சந்திக்கலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சில்க் ஸ்கார்ஃப்

  விருச்சிகம்:

  வேலையில் இன்று நிலவும் சூழ்நிலையை கவனமாக கையாளுங்கள். இப்போது நீங்கள் காட்டும் ஈடுபாடு உங்களுக்கு பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். சிறியளவிலான குழப்பம் சில இடையூறுகளை ஏற்படுத்தலாம்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நெட்

  தனுசு:

  இன்று உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கலாம். இன்றைய நாளின் முதல் பாதி மெதுவாக செல்லும் மற்றும் சலிப்பாக இருக்கும் என்றாலும் இரண்டாம் பாதி வேறுவிதமாக இருக்கும். சோர்வுடன் இன்று நீங்கள் தூங்க செல்வீர்கள்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஃப்ளோரல் பேட்டர்ன்

  மகரம்:

  கூட்டாண்மை அல்லது ஒத்துழைப்பால் கிடைக்கும் புதிய வாய்ப்பிற்கு இன்று நீங்கள் தயாராக இருங்கள். இன்று நாள் தெளிவாக, நேராக செல்வது போல தோன்றலாம், ஆனாலும் கவனம் தேவை. உங்களின் கீழ் பணிபுரிபவரை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கேன்வாஸ் ஷூ

  கும்பம்:

  சில விஷயங்களை அப்படியே ஏற்று கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் இன்று உங்களுக்கு எளிதான நாள். சோர்வாக இருப்பது இயல்பானது, எனவே சிறிது ஓய்வெடுத்து கொள்ளுங்கள். ஒரு பணியை மதிப்பிடுவதற்கு முன் உங்களது கணிப்பு சரியானவை தானா என்பதை உறுதிப்படுத்தவும்.

  அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீர்நிலை

  மீனம்:

  உங்களது நெருங்கிய நண்பருக்கு அவரது குடும்ப விஷயங்களில் உங்கள் உதவி தேவைப்படலாம். உங்களுக்கு நன்றாகத் தெரியாத யாரையும் அதிகம் விமர்சிக்காமல் முயற்சி செய்யுங்கள். சேவிங்ஸ் இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். எதிலும் முடிவெடுப்பதற்கு முன் சில நீமிடங்கள் யோசிக்கவும்.

  top videos

   அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய பாத்திரம்

   First published:

   Tags: Oracle Speaks, Tamil News