மேஷம் :
உங்களைச் சுற்றி இருக்கும் ஏதேனும் ஒரு சிலருக்கு உங்களின் உதவி உண்மையிலேயே தேவைப்படும் சூழல் உண்டாகலாம். உங்களுக்கு நிதி உதவி தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் பிறரின் உதவியை நாடுவது என்பது தவறான விஷயம் இல்லை. அதுவும், உங்களுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கை நீங்கள் உங்கள் வேலையாக மாற்றிக் கொள்ள விரும்பினால், தயங்காமல் அதற்கு உரியவற்றைச் செய்யுங்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு மண் பானை
ரிஷபம் :
குறுகிய கால பயணங்களை மேற்கொள்வது உங்களுக்கு கண்டிப்பாக தகுந்த பலனளிக்கும். தனிமையில் உங்களுக்காக சிறிது நேரம் செலவு செய்ய வேண்டும் என்று உங்கள் மனம் ஏங்கலாம். உங்கள் வரம்பைத் தாண்டி உங்கள் பெற்றோர் உங்களைத் தள்ளுவது போலத் தோன்றலாம். பிறர் ஆலோசனையைப் பின்பற்றுவது உகந்ததாக இருக்காது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு கண்ணாடி மேசை
மிதுனம் :
முன்பு உங்களைத் தேடி வந்த வாய்ப்பு இப்போது மீண்டும் உங்களைத் தேடி வரலாம். வழக்கமாகச் செய்யும் வேலைகள் உங்களுக்கு சலிப்பைத் தந்தால், அது சிறப்பாக மாறக்கூடிய நேரம் வந்துவிட்டது. உடல்நிலையில் சிறு அசௌகரியங்கள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – வீட்டிற்குள் விளையாடக் கூடிய விளையாட்டு
கடகம் :
அக்கம் பக்கத்தில் இருக்கும் ஒரு சிலர் உங்களைப் பற்றி ஏற்கனவே தங்கள் மனத்தில் ஒரு அபிப்ராயத்தைக் வைத்து இருப்பதால் உங்களிடத்தில் அது குறித்து சற்று கடுமையாகச் செயல்படலாம். உங்களுக்கு ஏதேனும் வழக்கு சட்டப்படி நிலுவையில் இருந்தால், அதனை இப்போது முடித்துவிட வேண்டும். சற்று மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு பச்சை நிற டம்ளர்
சிம்மம் :
உங்களுக்கு குறுகிய கால விடுமுறைப் பயணம் சாத்தியமாகும். அதன் மூலம் ஆடம்பரத்துடன் கூடிய ஓய்வை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். சரியான முறையில் பேசி புரிய வைப்பது உங்களது ஒரு சில பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். உங்கள் தாய்க்கு நிதி உதவி தேவைப்படலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு நீலக்கல்
கன்னி :
வரவிருக்கும் நாட்களில் உங்களின் வேலையில் உள்ள அழுத்தம் அதிகரிக்க நேரிடலாம். அவ்வப் போது நீங்கள் உங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களுடன் திடீர் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடலாம். உங்களுக்கு ஏதேனும் அறிவுரைத் தேவைப்பட்டால், அது உங்களின் உள்ளிருந்து கண்டிப்பாகத் தோன்றும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு ஸ்டீல் ஜாடி
துலாம் :
பிராக்டிக்கல் ஆன உங்கள் அணுகுமுறை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வருத்தத்தை அளிக்க நேரிடலாம். உங்கள் மனைவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஒரு சிறந்த யோசனையை உங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஒரு சிறப்பான வேலை நாளானது உங்களின் ஒட்டுமொத்த மன உறுதியையும் மேம்படுத்திவிடும். அதிநவீன அணுகுமுறையைக் கொண்ட ஒருவர் உங்களுக்கு முக்கியமான மாற்றத்தை பரிந்துரைக்கக் கூடும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு தங்க கிண்ணம்
விருச்சிகம் :
நீங்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் உங்களுக்கு மேல் பதவி வகிப்பவர்கள் உங்களை உன்னிப்பாகக் கவனித்து உங்கள் அணுகுமுறையைப் போற்றி பாராட்டலாம். எதையும் திட்டமிடும் முன்னர் உங்கள் இலக்குகளை மனதில் வைத்துக் கொண்டு திட்டமிடுவது அவசியம். ஏதேனும் ஒன்றில் அதிகப்படியான அர்ப்பணிப்பு செலுத்தினால், அதன் காரணமாக பின்னர் நீங்கள் சங்கடப்பட நேரலாம். தூக்கமின்மை பிரச்சனை உங்களை வாட்டலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு பல வண்ணத்திலான பேண்ட்
தனுசு :
நீங்கள் என்ன தான் பாடுபட்டு கடுமையாக உழைத்தாலும், அதற்கான முழு பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். நேரம் அறிந்து சரியாக செயல்படும் உங்களின் நல்ல பண்பானது தேவையற்ற பேச்சு வார்த்தை நீடிக்காமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும். ஏதேனும் கருத்தரங்கில் நீங்கள் பங்கேற்பதாக இருந்தால், அந்த கருத்தரங்கில் உங்கள் வேலைத் திறன் மற்றும் யோசனைகள் பாராட்டப்படும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சூரிய உதயம்
மகரம் :
உங்களுக்கு ஸ்பெஷலாகத் தோன்றும் ஏதேனும் ஒரு நபர் உங்களை தற்காலிகமாக வருத்தப்பட வைக்கலாம். உங்களுக்கும் கோபம் உண்டாக வாய்ப்புள்ளது. உங்கள் தற்போதைய நிதி நிலையில் விரைவில் சாதகமான வரவு இருக்கும். உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – சந்தன வாசனை
கும்பம் :
வேறு ஒருவர் உறுதியளித்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டிய சூழலுக்கு நீங்கள் தள்ளப்படலாம். அதனை சரிவர செய்து முடிப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்க கொள்ளுங்கள். உங்களுக்கு தூக்கத்தில் கனவுகள் வந்தால், அதன் மூலம் உங்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி கிடைக்கலாம். உங்களுடைய பேச்சும் வெளிப்பாடும் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு – ஒரு கையால் பெயிண்ட் செய்யப்பட்ட ஃபோல்டர்
மீனம் :
கடந்த கால ஞாபகங்கள் பல்வேறு வழிகளில் உங்கள் மனதில் வந்து போகலாம். உங்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்து இருந்தால், அவரை அனைவரும் இந்நேரத்தில் நினைவு கூரலாம். புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு இதுவே சரியான நேரம் ஆகும். மேலும், புதிய ஒப்பந்தம் உங்களுக்கு கண்டிப்பாக லாபகரமாக இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - ஒரு உப்பு விளக்கு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Tamil News