தென் தமிழகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலமாகவும், ஆன்மிக தலமாகவும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தாக விளங்கும் தென்காசி மாவட்டம் குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோயிலில் சித்திரை விசுத் திருவிழா இன்று காலை பஞ்ச வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இவ்விழா தொடர்ந்த 10 நாட்கள் நடைபெறும் சித்திரை விசுத் திருவிழாவின் போது நாள்தோறும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதிவுலாவும் நடைபெறும்.
சிகர நிகழ்ச்சியாக விழாவில் ஐந்தாம் திருநாள் அன்று திருத்தேரோட்டமும் 8-ஆம் திருநாளையொட்டி பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
Also see... பங்குனி உத்திரம்: தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கோலாகலமாக நடந்தது தேரோட்டம்..!
விழாவின் இறுதி நாளான பத்தாம் திருநாள் காலை சித்திரை விசுத் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: ச.செந்தில், தென்காசி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tenkasi