முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சித்ரா பவுர்ணமி 2023: திருவண்ணாமலையில் கிரிவலம் நாளை தொடங்குகிறது...!

சித்ரா பவுர்ணமி 2023: திருவண்ணாமலையில் கிரிவலம் நாளை தொடங்குகிறது...!

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம்

Tiruvannamalai | கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் குடிநீர்,  நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கும் பணிகளிலும் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Tiruvannamalai, India

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதா மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்களும், சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்களும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி வருகிற 4-ந் தேதி வியாழக்கிழமையான நாளை இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 5-ந் தேதி பவுர்ணமி கிரிவல செல்ல உகந்த நாள் என்றும், அன்றைய நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் குடிநீர்,  நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கும் பணிகளிலும் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also see... Chandra Grahan 2023 : சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்… என்ன செய்யக்கூடாது? - ஜோதிடம் சொல்லும் முழு விவரம்!

இதுபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Chithra Pournami, Thiruvannamalai