ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Bhogi Pongal 2023 : போகி ​பண்டிகையின் சிறப்புகள்..!

Bhogi Pongal 2023 : போகி ​பண்டிகையின் சிறப்புகள்..!

போகிபொங்கல் 2023

போகிபொங்கல் 2023

Bhogi Pongal 2023 | போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை "பழையன கழிதலும் புதியன புகுதலுமே" என்ற சாராம்சத்தை அடிப்படியாக கொண்டது. பழைய பொருட்கள் மற்றும் பயனற்றவையை தூக்கி எறியும் நாளாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வீட்டை தூய்மை செய்து பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். பழையவற்றை அழித்து போக்கும் இந்த பண்டிகை முன் "போக்கி' என்றே அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இது மருவி போகி என்றாகிவிட்டது. போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது.  ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை இந்த வருடம் ஜனவரி 14ஆம் தேதி (மார்கழி 30ஆம் தேதி) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வு நடத்த வேண்டும். அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர். இதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் துர் சக்திகள் விலகி லெட்சுமிகாட்சம் பெருகும். இந்த பூஜையை வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிதான் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். மேலும் படையலுக்கு நிவேதனமாக வடை, பாயசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைக்க வேண்டும்.

இந்திர வழிபாடு

இந்திர வழிபாடு என்பது போகி பண்டிகையின் போது, வீட்டுக்குள் தெய்வீக உணர்வுகளை, குணங்களையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காகவும் தான் வீட்டின் கூரையில் கண்ணுப்பீழையை கட்டி வைக்கின்றனர். போகி தினத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் முதலான தேவர்களை பூஜித்து அவர்களை திருப்தி செய்ய வேண்டும்.

புராண கதை

போகி பண்டிகைக்கு ஒரு புராணக்கதை உள்ளது.  தான் மழை பொழிவதால் மட்டுமே விவசாயம் செழிக்கிறது என்கிற கர்வம் கொண்ட இந்திரனின் ஆணவத்தை அடக்க கோகுல கிருஷ்ணன் இந்திர வழிபாட்டை தடை செய்து, கோவர்த்தன மலைக்கு வழிபாடுகள் செய்ய மக்களை திசை திருப்பினார். இதனால் கோபமுற்ற இந்திரன் தொடர்ந்து ஏழு நாட்கள் விடாது பெருமழை பொழிய செய்து மக்களைத் துன்புறுத்தினான்.

மக்களைக் காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார். ஆணவத்தை துறந்த இந்திரன் கிருஷ்ணரை பணியவே கிருஷ்ணர் போகி பண்டிகை அன்று இந்திர விழாவாகக் கொண்டாட வரமளித்தார் என்று புராணம் கூறுகிறது.

போகி பண்டிகையை கொண்டாடுவதால் இன்பம் மற்றும் போகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர பகவான் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுக போக வாழ்க்கையை பெறுவதற்கு சுக்கிர பகவானின் அருள் நமக்கு தேவை. சுக்கிரன் பார்வை வலுவாக இருக்கும் பொழுது ஒருவர் பணக்காரராக முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் போகி பாண்டியை முதன்மையானதாக கருதுகின்றனர்.

First published:

Tags: Bhogi, Pongal 2023, Pongal festival