மிளகுக்கு எதிர்மறை ஆற்றலையும் முறிக்கக் கூடிய தன்மை இருக்கிறது. அந்த காலத்தில் வாழ்ந்த ராஜாக்கள் பகைவர்களுடன் பழகும் போதும், எதிரி நாட்டிற்கு செல்லும் போதும் தங்களுடன் கண்டிப்பாக இந்த மிளகினை எடுத்துச் செல்வார்களாம். காரணம் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், அவர்கள் சாப்பிடக்கூடிய உணவில் ஏதேனும் விஷம் கலந்து விட்டதாக உணர்ந்தால், அந்த மிளகை எடுத்து சாப்பிட்டு விட்டால் உடம்பில் இருக்கும் விஷம் முறியடிக்கப்படும். அவர்களுடைய உயிரும் பாதுகாக்கப்படும். இப்படி விஷத்தை முறிக்கக் கூடிய இந்த மிளகிற்கு எதிர்மறை ஆற்றலை நெருங்கவிடாமல் பாதுகாக்க கூடிய சக்தியும் அதிகமாகவே உள்ளது.
ஒரு வெள்ளைத் துணியில் 5 மிளகினை கட்டி எப்போதுமே நம்முடைய கையிலோ, பாக்கெட்டிலோ வைத்துக்கொள்வது மிக மிக நல்லது. மிளகு கெட்டுப் போகக் கூடிய பொருள் அல்ல. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பழைய மிளகை மாற்றி வைத்து கொண்டாலும் சரி தான். இந்த சிறிய மிளகு முடிச்சு நமக்கு ஒரு பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்தி தரும் வல்லமை உடையது.
மேலும் கடன் பிரச்சினை தீர்வதற்கும், பண வரவு அதிகரிப்பதற்கும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விளக்குவதற்கும் மிளகை பயன்படுத்தலாம். அது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மிளகு பரிகாரத்தை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். இரவு 11.30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள். நான்கு மிளகை எடுத்து கொண்டு நிலை வாசலுக்கு வெளியே சென்று குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை உங்களுடைய தலையை இடது புறமாக மூன்று முறை மட்டும் சுற்ற வேண்டும். அதன் பிறகு நான்கு மிளகையும் நான்கு திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு உள்ளே சென்று கை கால் முகத்தை கழுவிக்கொண்டு உறங்கச் சென்று விடுங்கள்.
இதற்கான பலன் உங்களை தேடிவரும். இந்த பரிகாரத்தை மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் விமோசனம் கிடைக்கும். அதே சமயம் கடன் பிரச்னை தீர்வதற்கான பல வழிகள் உங்கள் கண் முன்னே நிற்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனைப் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.