ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி ஏழுமலையானுக்கு 5 டன் மலர்கள் அனுப்ப ஏற்பாடு.. சேலத்தில் மாலையாக தொடுக்கும் பணிகள் மும்மரம்..!

திருப்பதி ஏழுமலையானுக்கு 5 டன் மலர்கள் அனுப்ப ஏற்பாடு.. சேலத்தில் மாலையாக தொடுக்கும் பணிகள் மும்மரம்..!

திருப்பதிக்கு 5 டன் மலர்கள் அனுப்ப ஏற்பாடு

திருப்பதிக்கு 5 டன் மலர்கள் அனுப்ப ஏற்பாடு

tirupati | ஏகாதசி வைபம் முடியும் வரை திருமலை திருப்பதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்படும். அதனடிப்படையில் சேலத்தில் இருந்து பூக்களை தொடுத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

திருமலை திருப்பதியில் நடைபெறும் ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு சேலம் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் சேலத்தில் 5 டன் வாசனை மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பதி திருமலையில் தற்போது ஸ்ரீவாரி வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 2ம் தேதி துவங்கி வரும் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த வைபவத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரிந்து வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.இந்த வைபவத்தின் போது திருமலை திருப்பதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்படும். அதனடிப்படையில் சேலத்தில் இருந்து பூக்களை தொடுத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

சேலம் ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு செவ்வந்தி, சாமந்தி, அரளி, துளசி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட வித விதமான வாசனை மலர்கள் என 5 டன் எடையுள்ள பல்வேறு விதமான மலர்களை மாலையாக தொடுத்தனர்.  பின்னர் இந்த மாலைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு தனி லாரி மூலம் திருப்பதி திருமலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட உள்ளது.

செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்

First published:

Tags: Salem, Tirumala Tirupati, Tirupati, Vaikunda ekadasi