உலகத்திற்கே ஆன்மீக வழிகாட்டியாக இருப்பது இந்தியா தான். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்மீகத்தில் நாட்டமுடைய பலர் தங்களது ஆன்மீக தாகத்தை தீர்த்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரையிலும் தீர்க்க முடியாத பல மர்மமான இடங்களும், புனித ஸ்தலங்களும் நிறைந்துள்ளன. அறிவியலால் இதற்கு எந்தவித விளக்கமும் கூற முடியவில்லை என்றாலும் கூட மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையின் காரணமாக இந்த ஸ்தலங்களுக்கு மக்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் மேற்கு வங்கத்தில் நார்த் 24 பிரகனாஸ் மாவட்டத்தில் உள்ள பானிபூரி எனும் இடத்தில் கமோனா என்ற குளம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நமக்கு வேண்டிய அனைத்தையும் தரும் குளம் என்று இங்குள்ள மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் குளிப்பவர்களுக்கு அதிசய சக்திகள் கிடைப்பதாகவும், அவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். நோய்களை குணப்படுத்துவதாக எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை இல்லை எனினும் மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையின் காரணமாக நாள்தோறும் பலர் இந்த குளத்திற்கு வருகை தருகின்றனர்.
வேலை வேண்டியும், உடல் ஆரோக்கியத்தை வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் பலர் தினசரி இந்த குளத்திற்கு வருகை தருகின்றனர்.இதைப்பற்றி இங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் கூறுகையில், இங்குள்ள ஹரிச்சந் குர்சந்த் கோவிலின் கரையில் இந்த குளமானது அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலின் புகழ் அதன் சுற்றுவட்டாரம் எங்கும் அதிகமாக பரவியுள்ளது. இங்குள்ள மோண்டு பாலா என்றபக்தர் இந்த குளத்திற்கு நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளதாக அடித்துக் கூறுகிறார்.
Read More : பச்சிளம் குழந்தையை கவ்விக் கொண்டு செல்லும் நாய்..! அதிர்ச்சி சம்பவம்..
ஒருவேளை உங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை பலனளிக்கவில்லை என்றாலும் கூட, இந்த குலத்தில் ஒரு தடவை மூழ்கி எழுந்தாலே நமது உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். அதற்கு எடுத்துகாட்டாக நீண்ட நாட்களாக குழந்தைபேறு இல்லாமல் இருந்த ஒரு பெண்மணி இந்த கோவில் குளத்தில் நீராடிய சில மாதங்களிலேயே அவர்களுக்கும் குழந்தை வரம் கிடைத்ததாம்.இந்தக் குளத்தின் புனித தன்மைக்காக வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு வேண்டுதல்களுடன் இங்கு நீராட வருகின்றனர்.
காலை ஆரம்பித்து இரவு வரையிலும் கூட குளத்தில் நீராடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். புதுமண தம்பதிகள் கூட இங்கு பல்வேறு வேண்டுதல்களுடன் அதிக அளவு நீராட வருகின்றனர். மேலும் இங்கு வருகை தரும் பக்தர்கள் பகல் நேரங்களில் கிச்சடியை பிரசாதமாக மற்றவர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் எப்போதுமே இங்கு அதிக மக்கள் குழுமி இருப்பதால் இந்த பகுதியை ஒரு திருவிழா கோலம் போல காணப்படும். அங்கு வந்து நீராடிய பல்வேறு பக்தர்களுக்கும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதாக கூறுகின்றனர்.
சுவாதி பெபரி என்று பக்தர் கூறுகையில் “நான் இந்த குலத்திற்கு என்ன வேண்டுதலுடன் வந்தேனோ அந்த வேண்டுதலானது நிறைவேறி விட்டது. என்னுடைய இரண்டு மகள்களுக்காகவும் நான் வேண்டுதல் வைத்தேன். இப்போது அவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியம் உடனும் இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trending, Viral