திருச்சி மாவட்டம் அதவத்தூரில், ஏகிரி அம்மன், பனையடி கருப்பசாமி கோயில் சித்திரை பெருந்திருவிழா,
18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் வயலூர் அருகே அதவத்தூரில், பழமை வாய்ந்த ஸ்ரீ ஏகிரி அம்மன், பனையடி கருப்பு, தேரடி கருப்பு, கருவை அய்யனார், சாம்புவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி மறுகாப்பு கட்டுதலுடன், தினம்தோறும் ஏகிரியம்மன், பனையடி கருப்பசாமி சுவாமி உற்சவர்கள் மயில், குதிரை, சிங்கம், ரிஷபம், பூத வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சித்திரை பெருந் திருவிழாவின் 8ம் நாளான நேற்றிரவு, ஏகிரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்திலும், பனையடி கருப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகள், காளை, நடன குதிரைகள் நடனமாடி ஊர்வலமாக முன் செல்ல, செண்டை மேளம், தப்பாட்டம், மங்கல மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் திருவீதி உலா கண்டனர்.
Also see... வெகு விமர்சையாக நடைபெற்ற தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
வழிநெடுங்கிலும் பொதுமக்கள் தேங்காய், பழம், பூக்கள் படைத்து, அர்ச்சனை செய்து சுவாமிகளை வழிபட்டனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விழா என்பதால், அதவத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக் கோலம் பூண்டிருந்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, Trichy