முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் ஆபத்தாம்.. வாஸ்து சொல்லும் தகவல்கள் இதுதான்!

இந்த திசையில் தலை வைத்து தூங்கினால் ஆபத்தாம்.. வாஸ்து சொல்லும் தகவல்கள் இதுதான்!

தூக்கம்

தூக்கம்

Vastu Tips For Sleeping : தற்போதைய காலத்தில் யாரும் உடலுக்கு தேவையான ஓய்வை கொடுப்பதில்லை. இன்னும் சிலர், நேரம் இருந்து தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான இன்றியமையாத விஷயங்களில் ஒன்று. ஒவ்வொருவரும் தங்களின் உடலுக்கு 6 முதல் 8 மணிநேரம் ஒளிவு கொடுக்க வேண்டியது அவசியம். சரியான உறக்கம் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஆனால், தற்போதைய காலத்தில் யாரும் உடலுக்கு தேவையான ஓய்வை கொடுப்பதில்லை. இன்னும் சிலர், நேரம் இருந்து தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர்.

நாம் மனிதவாழ்கையில் பல விஷயங்களை வாஸ்துவுடன் தொடர்பு படுத்தி சில நம்பிக்கைகள் உள்ளன. வாஸ்துவில் நாம் செய்யும் சிறிய தவறு நமது வாழ்க்கையை அதிகமாக பாதிக்கும் என்பது நம்பிக்கை. அதாவது, குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதி, ஒற்றுமையை குலைக்கலாம். அந்த நம்பிக்கையின்படி நிம்மதியான தூக்கத்தை பெற எந்த திசையில் வாஸ்துப்படி தலைவைத்து தூங்க வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, தலை மற்றும் கால்களை சரியான திசையில் வைத்து தூங்காவிட்டால், அவை உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, எந்த பக்கம் தூங்குவது அசுபமானது என்று இப்போது பார்க்கலாம்.

வாஸ்துசாஸ்திரத்தின்படி, தெற்கு நோக்கிய பாதங்களை வைத்து யாரும் தூங்கக்கூடாது. ஏனெனில், தெற்குப் பக்கம் யமதூதன் அல்லது எதிர்மறை ஆற்றலின் திசையாகக் கருதப்படுகிறது.

அதனால், தெற்கில் கால் மற்றும் தலை வைத்து தூங்க வேண்டாம். அதே போல, கிழக்கு நோக்கி பாதங்களை வைத்து தூங்கக்கூடாது. சூரியன் கிழக்கு திசையில் உதிக்கிறார். எனவே, கால்களை நீட்டுவதற்கு கிழக்கு உகந்த திசை அல்ல. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

தெற்கு மற்றும் கிழக்கு இரண்டு பகுதியும் தூங்குவதற்கு ஏற்ற திசை அல்ல. அப்படி இந்த திசைகளில் நீங்கள் துறங்கினால், வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதாவது, கேட்ட கனவுகள், உங்கள் தூக்கத்தை கெடுப்பதுடன் உங்க மனதில் குழப்பத்தையும் பயத்தையும் உண்டாக்கும்.

வாஸ்துப்படி, வடக்கு நோக்கி தலை வைத்து உறங்க சிறந்த திசை. இது மிகவும் செழிப்பான திசையாக கருதப்படுகிறது. எனவே, வடக்கில் தலைவைத்து உறங்கினால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறையும். உங்கள் வாழ்க்கையில் செல்வம், அமைதி, செழிப்பு, நிலைநாட்டப்படும். அதே போல, கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்கினால், உங்கள் வாழ்வில் பலம் கிடைக்கும்.

வாஸ்துப்படி, தம்பதிகள் தெற்கு நோக்கி தலை வைத்து தூங்கினால், வேலை வெற்றி, அன்யோனியம், வீட்டில் மகிழ்ச்சி, வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தொழிலில் வெற்றிபெற விரும்பினால், அவர்கள் மேற்கு நோக்கி தலையை வைக்கலாம். இருப்பினும், மனைவி கணவரின் இடது பக்கத்தில் தூங்குவது நல்லது.

குழந்தைகளுக்கு வாஸ்து படி எந்த திசையில் தூங்குவது நல்லது? - குழந்தைகள் தூங்குவதற்கு சிறந்த திசை கிழக்கு. தலையை கிழக்கு பக்கம் பார்த்தபடி இருக்க வேண்டும். அவர்கள் இளையவர்கள் மற்றும் கல்வியாளர்களை நிர்வகிப்பதோடு பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதால், அவர்களின் மனதைத் தூண்டுவதற்கு கிழக்குப் பகுதி பயனுள்ளதாக இருக்கும்.

First published:

Tags: Astrology, Baby sleeping position, Sleep, Vasthu | வாஸ்து, Vastu tips