முகப்பு /செய்தி /சிவகங்கை / அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியில் முதலிடம்... கேக் வெட்டி கொண்டாடிய சிவகங்கை ஆட்சியர்

அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியில் முதலிடம்... கேக் வெட்டி கொண்டாடிய சிவகங்கை ஆட்சியர்

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சாதனை படைத்துள்ளது.

  • Last Updated :
  • Sivaganga, India

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவியர்கள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 87.45 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 97.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றது.

அதே போன்று, ஒட்டு மொத்த தேர்ச்சி விகிததில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்

இந்த வெற்றி குறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ’மன உளைச்சலுக்கு ஆளாகாமல் மாணவர்களை தயார் செய்து படிக்க வைத்தது முக்கிய காரணம் என்று தெரிவித்தார். குறிப்பாக மாணவர்கள் எந்த பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. எதில்  பிரச்சனை இருக்கிறது என கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது தற்போது பயனளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.    

இதையும் வாசிக்க10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 91.39% தேர்ச்சி... 78,706 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை

முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறும்பொழுது, ’கற்றல் விளைவுகள் தொடர்பான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. பொதுத்தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் சிறப்புத் திறனை கொண்டிருப்பார்கள் என்பதை ஆசிரியர்கள் நன்கு அறிந்திருந்தனர்" என்று தெரிவித்தார்.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result